ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
உடனடியாக கருத்து சொன்னால், இரண்டில் ஒரு கருத்துடையவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து விடுவார்கள்.
தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்?
மசூது, கடையநல்லூர்.
எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம் எடுத்து வந்தோம்.
ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம் என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு உரியது என்று முடிவு எடுக்கப்பட்டது.
உயர்நிலைக் குழுவில் வைக்கப்பட்ட காரணங்களைக் கீழே தருகிறோம்.
முதல் காரணம்
தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் அபிமானிகளாகவும், விசுவாசிகளாகவும் உள்ளனர். நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் இதில் ஓரளவு நாம் வெற்றி பெற்றாலும் முழு வெற்றி பெறவில்லை.
பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?
சனாவுல்லா, அய்யம்பேட்டை
பதில்
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவாகப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வருவார்கள். எனவே இந்த வாதத்தை வைத்து நம்மை நாமே போலியாக ஆறுதல் படுத்திக் கொள்ளக்கூடாது. பாஜக இதற்கு முன்னர் 30 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. இப்போது பெற்றுள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
நாள் : இன்ஷா அல்லாஹ்...
19.04.14 - சனிக்கிழமை
நேரம் : இரவு 6.45 மணிக்கு
இடம் : தம்புச்சட்டி தெரு;
மண்ணடி; சென்னை
சிறப்புரை :
பீ.ஜைனுல் ஆபிதீன்
கோவை ரஹ்மத்துல்லாஹ்
குறிப்பு :இந்தப் பொதுக்கூட்டம் ஆன்லைன்பீஜே இணையத்தளத்தில்
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
இந்தப் பொதுக்கூட்டம் மறுநாள் 20.04.14 ஞாயிற்றுக்கிழமை
காலை 9மணி முதல் 11மணி வரை தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.
செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிகள் ஆதரவு விபரம்.
சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி
மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.
விரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
கேள்வி :
விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் காரணமாக மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?
-அப்துல் கபூர், சேலம்.
பதில் :
விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற மாயையை ஏற்படுத்தி
வருகின்றன. அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள்
கணிக்கிறார்கள். எனவே மோடி ஆட்சியை பிடித்தால் இறை நம்பிக்கையுள்ள
முஸ்லிம்கள் இதற்காக அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும்
பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால் முஸ்லிம்கள் மத்தியில் அதிக
விழிப்புணர்வு ஏற்படும். பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்பவர்களும் உண்மை
முஸ்லிம்களாக வாழும் நிலை ஏற்படும்.
இன்ஷா அல்லாஹ்
மயிலாடுதுறையில்....
06.04.13 ஞாயிறு அன்று நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டம்,
ஆன்லைன் பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்!
பொதுக்கூட்டம் துவங்கும் சவுதி நேரம் : மாலை 4.30 மணிக்கு....
நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே
இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம்
காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன்
பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.
இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை
ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப்
பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர்
சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது
வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.
தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில்
அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.
சமுதாய மக்களை கொதிப்படைய வைத்த செய்தி:
ஒரு முஸ்லிமுக்கு ஹஜ்ஜு செய்வது எப்படி கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
ஒரு முஸ்லிமுக்கு நோன்பு எவ்வாறு ஃபர்ளு கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
ஒரு முஸ்லிமுக்கு நபி ஸல் அவர்களின் பெயரைக் கேட்டால் அ
வர்கள் மீத ஸலவாத்து சொல்வது கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!
மேலே உதிர்த்த முத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் சாட்சாத் பேராசிரியர் எம்.காதர் மைதீன் அவர்கள்!
அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு விதியாக்கியத்தை போன்று இவரும் திமுக
கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டுப் போடுவது கடமையாக்கியுள்ளார்.
நமக்கு ஒரு சந்தேகம் இந்த ஃபத்வா இந்த தேர்தல்வரைதானா அல்லது ஒரு முஸ்லிம் மரணம் வரை கடைபிடிக்க வேண்டுமா?
இவரை என்ன செய்யலாம் ?
நன்றி:முகநூல்நண்பன்
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்காக ஆணையம் அமைத்த
காரணத்தால் அதிமுகவை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. ஆனால்
ஜெயலலிதா அவர்களின் பிரச்சார
க் கூட்டங்களில் நமது கொடிகளைக் காணவில்லை. மாநில நிர்வாகிகளின் சூறாவளிப் பிரச்சாரத்தையும் காணவில்லை. இதற்குக் காரணம் என்ன?
பி.ஜே அவர்களின் பதில் :
எந்தக் கட்சியை நாம் ஆதரிப்பதாக இருந்தாலும் தார்மீக ஆதரவு என்றால் அதற்கு
எந்தச் செலவும் இல்லை. ஆனால் தீவிரப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால்
அதற்கு பெரிய அளவில் பொருட் செலவு தேவைப்படும். நம் ஜமாஅத்தில் இது போன்ற
பணிகளுக்குச் செலவிட எந்த நிதியும் இல்லை.
மார்க்கப் பணிகளுக்காக
மக்கள் தரும் நிதியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால், இது, நிதி
அளித்த மக்களை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்; மார்க்கத்திலும் இது பாவமாக
ஆகிவிடும்.
எந்த
இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின்
பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி
மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து
கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
தவ்ஹீத்
ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை
என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில்
இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
”நமக்கு யாரும் வேண்டாம்; நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.
?
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸையும், கருணாநிதியையும்
மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை இதுவரை விமர்சனம் செய்யாமல்
இருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் மோடி பிரதமராவதற்கு தனது ஆதரவைத்
தெரிவிப்பாரோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.
கருணாநிதி அவர்கள், ராகுலும் மோடியும் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனுக்கு ஆதரவு அளிக்க
வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு மாநில அமைச்சர் வைத்திலிங்கம்
சென்று ஆதரவு திரட்டினார்.
அதிரைக்கு வருகை தந்த அமைச்சர்
மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை
கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நடைபெறவிருக்கும்
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை
ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ
முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும்.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை
அதிகரிப்பதற்கான முயற்சியை அதிமுக அரசு செய்துள்ளதால், இந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது சமுதாயத்தின் நலனையும், கண்ணியத்தையும் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும்
வகையில் நம்முடைய பிரச்சார முறைகள் அமையவேண்டும் என்பதற்காக பின் வரும்
வழிமுறைகள் வழங்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
உடனடியாக பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக
அரசு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆணை பிறப்பித்தது லட்சக்கணக்கான
முஸ்லிம்கள் பங்கேற்ற சிறைநிரப்பும் போராட்டத்திற்கு மதிப்பளித்து,
முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த
உத்தரவை பிறப்பித்துள்ளார்.