அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, April 26, 2013

Tuesday, April 23, 2013

டிஜிபி அலுவலகம் முற்றுகை!

கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்களை கைது செய்து, பொய் வழக்குப்போட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தினுள் டிஎன்டிஜேயினர் நுழைய தடை விதித்து அராஜகம் செய்து, எடுத்தேறி வந்து வன்முறையில் ஈடுபட்டு கொலை வெறித்தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து, ஒருபக்க சார்பாக நடந்து கொள்ளும் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து
சென்னையில்…
டிஜிபி அலுவலகம் முற்றுகை
நாள் : 27-04-13 இன்ஷா அல்லாஹ்
சனிக்கிழமை காலை 11மணிக்கு
அலைகடலென திரண்டு வாரீர்!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Saturday, April 20, 2013

கடையநல்லூரில் தாக்குதகள் நடத்தியவர்களை கண்டித்து தீர்மானம்!

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கிளை செயல்பாடுகள் பற்றி கருத்து பரிமாறப்பட்டது

Monday, April 15, 2013

சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...

ஜூன்   9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு.

 
சவூதியில்இயற்றப் பட்டுள்ள நிதாகத்எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
 
அதன்படி, தனி ஸ்பான்ஸரின்(கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட், இக்காமா, காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரியசட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.
 
சவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசிபாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளஇவ்வேளையில், மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும்இந்தியர்கள் தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
 
ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகவும்.
 
அல்லது First Secretary (Community Welfare), Telephone 4884032 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
The complete profile and other information of the interested legal firms shall reach the Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387, Riyadh – 11693], Saudi Arabia, on or before April 15, 2013
மின் அஞ்சல் முகவரி:
 
மேலும் புதிய தகவல்:
இக்காமா, விசா, ஹுரூப் போன்ற பிரச்சனைகளில் சவூதி சட்டத்திற்கு புறம்பான வகையில் சவூதியில் தங்கி உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவரவர் நாட்டிற்கு அனுப்பும் (டிக்கட் போன்ற) செலவினங்களைசவூதி உள்துறை அமைச்சகம் (ஜவ்ஸாத் - General Directorate of Passports) ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130414161305

குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு! தீர்மானங்கள்

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 

மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

Sunday, April 14, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது.

இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .

மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்

Saturday, April 13, 2013

பொதுக்கூட்டம் ஆன்லைன் பிஜேயில் நேரடி ஒளிபரப்பு!




Thursday, April 11, 2013

சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் 
பின்வருமாறு:

1.
இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2.
அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்

Wednesday, April 10, 2013

கூடங்குளம் அணுஉலை பணிகள் தாமதம் ஏன் ?

கூடங்குளம் அணுஉலை மூலம் மின்சாரம் கூடங்குளம் அணுஉலை மூலம் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்தின் மின் தட்டுப்பாடு விரைவில் ஓரளவு சரியாகிவிடும் என்று நீங்கள் எழுதி ஒரு வருடம் கடந்துவிட்டது. இன்னமும் மின் உற்பத்தி தொடங்கவில்லையே என்ன காரணம்?
மீரான் சேட், கோவை


Saturday, April 06, 2013

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி!


விருதுநகர் மாவட்டம், விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினராகிய ஐ.ஷேக் அப்துல்லாஹ் என்பவர் அங்குள்ள செந்தில் குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். (மேலுள்ள புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்) தனது சொந்த வேலை காரணமாக 10.03.13 அன்று விருதுநகரிலிருந்து சுமார் 25கி.மீட்டர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார். அன்று இரவு 11 மணிக்கு தனது வேலையை முடித்து விருதுநகருக்கு திரும்பும் போது, சங்கரலிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இரண்டு பவுன் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டெடுத்து அதன் உரிமையாளர் யாரேனும் நகையைத் தேடி அங்கு வருகிறார்களா என அரை மணி நேரம் வரை காத்திருந்து, யாரும் தேடி வராததால் விருதுநகர் திரும்பிவிட்டார். மறுநாள் அது தங்க நகைதானா என்பதை ஆய்வு செய்து தங்க நகைதான் என்பதையும் அதன் எடை 13கிராமும் 820 மில்லியும் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

Monday, April 01, 2013

ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y