அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, March 29, 2014

முஸ்லிம்லீக் தலைவர் காதர் மைதீனின் ஃபத்வா!


சமுதாய மக்களை கொதிப்படைய வைத்த செய்தி:

ஒரு முஸ்லிமுக்கு ஹஜ்ஜு செய்வது எப்படி கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!

ஒரு முஸ்லிமுக்கு நோன்பு எவ்வாறு ஃபர்ளு கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!

ஒரு முஸ்லிமுக்கு நபி ஸல் அவர்களின் பெயரைக் கேட்டால் அவர்கள் மீத ஸலவாத்து சொல்வது கடமையோ அதேபோல திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது கடமை!

மேலே உதிர்த்த முத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் சாட்சாத் பேராசிரியர் எம்.காதர் மைதீன் அவர்கள்!

அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு விதியாக்கியத்தை போன்று இவரும் திமுக கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டுப் போடுவது கடமையாக்கியுள்ளார்.

நமக்கு ஒரு சந்தேகம் இந்த ஃபத்வா இந்த தேர்தல்வரைதானா அல்லது ஒரு முஸ்லிம் மரணம் வரை கடைபிடிக்க வேண்டுமா?


இவரை என்ன செய்யலாம் ?


நன்றி:முகநூல்நண்பன்

Tuesday, March 25, 2014

அதிமுக விற்கு ஆதரவாக ஏன் பிரச்சாரத்தில் இறங்கவில்லை ?

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்காக ஆணையம் அமைத்த காரணத்தால் அதிமுகவை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் நமது கொடிகளைக் காணவில்லை. மாநில நிர்வாகிகளின் சூறாவளிப் பிரச்சாரத்தையும் காணவில்லை. இதற்குக் காரணம் என்ன?

பி.ஜே அவர்களின் பதில் :
எந்தக் கட்சியை நாம் ஆதரிப்பதாக இருந்தாலும் தார்மீக ஆதரவு என்றால் அதற்கு எந்தச் செலவும் இல்லை. ஆனால் தீவிரப் பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அதற்கு பெரிய அளவில் பொருட் செலவு தேவைப்படும். நம் ஜமாஅத்தில் இது போன்ற பணிகளுக்குச் செலவிட எந்த நிதியும் இல்லை.
மார்க்கப் பணிகளுக்காக மக்கள் தரும் நிதியை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினால், இது, நிதி அளித்த மக்களை ஏமாற்றுவதாகத்தான் இருக்கும்; மார்க்கத்திலும் இது பாவமாக ஆகிவிடும்.

Sunday, March 23, 2014

நடுநிலைவாதிகள் என்பவர்கள் டிஎண்டிஜெவை மட்டும் எதிர்ப்பது ஏன்


எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.

தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.

”நமக்கு யாரும் வேண்டாம்; நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.

Saturday, March 22, 2014

ஜெயலலிதா பாஜகவை விமர்சனம் செய்யாதது ஏன்?

? ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸையும், கருணாநிதியையும் மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை இதுவரை விமர்சனம் செய்யாமல் இருக்கிறார். தேர்தலுக்கு பின்னர் மோடி பிரதமராவதற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பாரோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.

கருணாநிதி அவர்கள், ராகுலும் மோடியும் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார்.

பணத்துக்கும், புகழுக்கும், ஆசைப்படாத ஒரே அமைப்பு TNTJ - அமைச்சர் வைத்திலிங்கம்.

நேற்று காலை 11 மணியளவில் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனுக்கு ஆதரவு அளிக்க வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு மாநில அமைச்சர் வைத்திலிங்கம் சென்று ஆதரவு திரட்டினார்.

அதிரைக்கு வருகை தந்த அமைச்சர் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், கடற்கரைதெரு முக்கியஸ்தர்கள், காந்தி நகர் பஞ்சாயத்தார், கரையூர் தெரு பஞ்சாயத்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Thursday, March 20, 2014

தவ்ஹீத்ஜாமத்தின் 2014 தேர்தல் பிரசார விதிமுறைகள்!

நடைபெறவிருக்கும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைப்பாடு எந்த ஒரு தனி நபரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தி அமையாது. சமுதாய நலனை மட்டுமே கருதி முடிவெடுக்கும். தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முயற்சியை அதிமுக அரசு செய்துள்ளதால், இந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின்போது சமுதாயத்தின் நலனையும், கண்ணியத்தையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டுப்பாட்டையும், நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் நம்முடைய பிரச்சார முறைகள் அமையவேண்டும் என்பதற்காக பின் வரும் வழிமுறைகள் வழங்கப்படுகிறது.

Sunday, March 16, 2014

சிவசேனாவிடம் ஆதரவு கேட்ட அதிமுகவிற்கு ஆதரவா?

சிவசேனாவிடம் ஆதரவு கேட்ட அதிமுகவிற்கு ஆதரவா?

தேர்தலுக்குப் பிறகு பிஜேபியை ஆதரிக்கமாட்டேன் என்று வாக்குறுதி வழங்காத ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?

திமுக ஆதரிக்கும் பிரதமர் - ராகுலும் இல்லை; மோடியும் இல்லை என்று சொல்லிவிட்ட கருணாநிதியை ஆதரிக்க மறுப்பது ஏன்?

பிஜேபியை விமர்சிக்காமல் மௌனம் காக்கும் ஜெயலலிதாவின் திட்டம் என்ன?

Friday, March 14, 2014

TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆணை பிறப்பித்தது லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற சிறைநிரப்பும் போராட்டத்திற்கு மதிப்பளித்து, முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மோடி அலை இல்லை! வெளிப்படுத்திய பாஜக மேலிட தலைவர்கள்!

நாட்டின் எந்தப் பகுதியிலும் மோடியின் அலை இல்லை. மாறாக அப்படியொரு தோற்றம் ஏற்படுத்துகிறது என்று மோடியின் எதிர்ப்பாளர்கள் சொல்லி வந்ததை பாஜகவின் மூத்த தலைவரான சுஸ்மா ஸ்வராஜும் இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார். அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நாடு முழுவதும் மோடியின் அலை வீசுகிறது என்றால் அவர் பாதுகாப்பான வாரணாசி தொகுதியைத் தேடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? என்பதை இப்போது பார்ப்போம். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பாஜகவின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த அவர் தனது மனைவி சரளாஜோஷி மூலம் வாரணாசியில் உள்ள ஆர்டர்லி பஜாரில் பிப்ரவரி 20ஆம் தேதி தேர்தல் அலுவலகம், திறந்து, இந்தி நாளிதழ்களில் தொகுதிக்கு அவர் செய்த சேவைகளும் பட்டியலிட்டு பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிட்டார்.

தேர்தலுக்கு பின் ஜெயலலிதா, மோடியை ஆதரித்தால் என்னவாகும்?

இது விரிவாக விளக்க வேண்டிய ஒன்றாகும்.

பாஜக ஆகாத கட்சி என்பதிலும், அது ஒழிக்கப்பட வேண்டிய கட்சி என்பதிலும் முஸ்லிம்களில் ஒருவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் தவிர எல்லாக் கட்சிகளும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் தான்.

Monday, March 10, 2014

அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு ஏன்

அதிமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறது!
இதுகுறித்து பல்வேறு கேள்விகள் முகநூல் வழியாகவும் மின்னஞ்சல்மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் பல்வேறு கேள்விகள் கேட்க்கப்பட்டு பறப்பட்டு வருகிறது அதற்க்கான முழுமையான பதிலை இங்கே தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் தருகிறார்கள் பாருங்கள் பார்க்க தூண்டுங்கள்!

by yanbutntj

Saturday, March 08, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்? 

மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!

இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.14 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!

இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?

ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?

அதிமுகவிடம் தவ்ஹீத் ஜமாஅத் ஏமார்ந்துவிட்டதா?

இதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான விளக்கம். 

குறிப்பு : மிகவிரைவில்... தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்?

மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!

இன்ஷா அல்லாஹ்
வெளிநாடு வாழ் மக்களுக்காக
இன்று 08.03.14 இரவு 1௦.30 மணிக்கும், நாளை நள்ளிரவு 10.30 மணிக்கும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.14 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!

இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?

ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?

Friday, March 07, 2014

பணத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள்!


இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது, பாஜகவின் அலை வீசுகிறது என்று ஊடகங்கள் புளுகுப் பிரச்சாரம் செய்த வேளையில், மிசோரம் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. சத்தீஸ்கரிலும் கூட மயிரிழையில் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

ஆனாலும் ஊடகங்கள் பிரச்சாரத்தை விட்டொழிக்கவில்லை. இந்நிலையில் நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி சேனல் கருத்து கணிப்பு நிறுவனங்களின் செயல்பாட்டை அறிய "ஸ்டிங் ஆப்ரேஷன்" ஒன்றை நடத்தியது.

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேரலையில்!

சென்னை நேதாஜி நகரில் வரும் ஞாயிறு 09.03.2014 அன்று மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஆன்லைன்பிஜெயில் நேரடி ஒளிபரப்பில் காணலாம் இன்ஷா அல்லாஹ்!

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y