அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Monday, July 09, 2012

கலவரத்தின்போது வழிபாட்டுத் தளங்களை பாதுகாக்க தவறிய குஜராத் அரசு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!


டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னதாக 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

Saturday, June 30, 2012

"லண்டன் பள்ளியில் குட்டைப் பாவாடைக்குத் தடை "


லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவர்களின் 
குட்டைப் பாவாடை சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி 
உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ ,
மாணவியர் படிக்கின்றனர் .

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது :

எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது.
முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டாம் .

Wednesday, May 30, 2012

கேடு விளைவிக்கும் மிதமிஞ்சிய வேகம்!

இறைதூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பெண்களை ஏற்றி வந்த ஒட்டகத்தை ஓட்டி வந்த ஒட்டகமோட்டி ஒருவர் பாட்டுப் பாடிக்கொண்டு படுவேகமாக விரட்டி செல்வதைக் கண்டு கடும் கோபமுற்றார்கள்.

அவரை நோக்கி அன்ஜஷாவே ஒட்டகத்தை விரட்டாதே ! நிதானத்தை கடைப் பிடி மேலே அமர்நதிருக்கும் பெண்களை விபத்துக்குள்ளாக்கி விடாதே ! என்று கோபத்துடன் கண்டித்து விட்டு இவ்வாறு பாட்டுப் பாடிக் கொண்டு வாகனத்தை வேகமாக விரட்டுவது உனக்கு பெரும் கேட்டைத் தான் உண்டு பண்னும் என்றுக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள். 6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Monday, May 14, 2012

இந்திய துணை தூதரக அதிகாரிகள் யான்பு விஜயம்! பயண விபரம்.


மதுவில் தள்ளாடும் தமிழக அரசு


கடந்த 2011 முதல் 2012 வரை தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதாகவும், இன்னும் இந்த வருமானத்தை பெருக்கிட எலைட் என்ற உயர் ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனை கடந்த வருடங்களுடன் ஒப்பீடும் பொழுது அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை தெரிந்துகொள்ளலாம். அதன் விபரம் வருமாறு:-

2003-2004ம் வருடம் ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி, 2004-2005ம் வருடம் ரூ.4ஆயிரத்து 872.03 கோடி, 2005-2006ம் வருடம் ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி, 2006-2007ம் வருடம் ரூ.7ஆயிரத்து 473.61 கோடி, 2007-2008 ம் வருடம் ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி, 2008-2009ம் வருடம் ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி, 2009-2010ம் வருடம் ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி, 2010-2011ம் வருடம் ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி, 2011-2012ம் வருடம் ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது.

Monday, May 07, 2012

கண்டுகொள்ளப்படாத காவலர்கள்?

சென்ற ஏப்ரல் 21 தேதி சத்திஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் நெல்லையை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார் பின்பு 13 நாட்களுக்கு பிறகு அரசு மாவோயிஸ்ட்களுடன் செய்துகொண்ட பல்வேறு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டு இன்று பணிக்கும் திரும்பிவிட்டார் ஆனால் நடந்த அந்த சம்பவத்தில் கண்டுகொள்ளப்படாத நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு காவலர்களை அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை 

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட அன்று அவரில் மெய்காவலர்கள் இருண்டுபேர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்படி சுட்டுக்கொள்ளப்பட்டவர்களை இதுவரை அதிகமானோருக்கு தெரியவில்லை அதற்கு காரணம் அங்கு உள்ள பாஜக அரசு இந்த செய்தியை அதிகம் வெளிவராமல் மிகவும் கவனுத்துடன் பார்த்துகொண்டது.

Wednesday, April 25, 2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

Thursday, April 12, 2012

குஜராத் கலவரத்தில் 23 பேர் எரித்து கொன்ற வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆனந்த் மாவட்ட சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் உ.பி. மாநிலம் அயோத்திக்கு கரசேவைக்கு சென்று திரும்பிய ராமபக்தர்கள் 56 பேர் உடல் கருகி பலியாயினர். இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மதக் கலவரம் மூண்டது.

Thursday, April 05, 2012

டைம் டாப் 100 மனிதர்கள்' பட்டியலில் இடம் பெற மோடி மோசடி

அகமதாபாத்: டைம் இதழ் தற்போது நடத்தி வரும் உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி வேலைகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான்.

மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 38,586 ஆகும்.

Sunday, April 01, 2012

மோடியில் மோசமான நிர்வாகம்

அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

Friday, March 30, 2012

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.

இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.

Tuesday, February 28, 2012

கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29-02-12] கடைசி நாள்


மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.
நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Friday, May 27, 2011

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்! விண்ணப்ம் இனைக்கபட்டுள்ளது


கல்வி உதவி தொகை பெற தகுதியான சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை (புதியவை மற்றும் புதுப்பித்தல்) நடப்பாண்டிற்கு வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்று சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


Friday, February 25, 2011

சவுதியில்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

சவுதியில் சாலை விதிகள்!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை !!

சவுதி அரேபியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் வாகன
விபத்துகளை கட்டுப் படுத்த தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை சாலைகளில் சவுதி அரசாங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமராக்கள் சவுதி அரேபியாவில் உள்ள உள்துறை
அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன்
இணைந்து செயல் பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பெயர்
தான் ‘ஸாஹர்’ (SAHER)  http://www.saher.gov.sa/e_Default.aspx

கடந்த ஆண்டு தலை நகர் ரியாதில் நிறுவி வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணம்
'தம்மாம்' மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.

சவுதி அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி:

* ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருவர் வாகன
   விபத்தில் உயிரிழக்கிறார்.

* சராசரியாக 18 பேர் அன்றாடம் மரணிக்கிறார்கள்.

* ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தின் மூலம்
    ஊனமடைகிறார்கள்.

* 2009 ஆம் ஆண்டு மட்டும் 485931 விபத்துகள் பதிவாகியுள்ளன.

Wednesday, February 23, 2011

சவுதியில் வரும் சனிக்கிழமை பொது விடுமுறை சவுதி அரசு அறிவிப்பு

மன்னர் அப்துல்லாஹ் உடல் நலக்குறைவுகாரணமாக கடந்த மூன்று மாதங்களாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக மொராக்கோவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார் அவர்  சிகிச்சை முடிந்து நலமாக நேற்று, தலைநகர் ரியாத் திரும்பினார் நாடுதிரும்பியதன் சந்தோசத்தை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள வரும் 26ம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது மேலும் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு சலுகைகளையும் நாட்டுமக்களுக்கு அறிவித்துள்ளது அதில் குறிப்பிடும்படியாக  அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவுதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும்.இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.



தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y