அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label பித்அத் ஜமாஅத். Show all posts
Showing posts with label பித்அத் ஜமாஅத். Show all posts

Friday, June 08, 2012

குர்ஆனில் விளையாடிய போலி சுன்னத் ஜமாஅத்!




அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
சில தினங்களுக்கு முன்னால் கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த நோட்டீஸில்  பெண்கள் பள்ளிக்கு சென்று ஜமாத் தொழுகையில் கலந்து கொள்வது ஹராமான செயல் என்றும் எனவே பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்றும் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் கூறியிருந்தனர்.

தங்கள் நிலைபாட்டை நிரூபிப்பதற்காக மார்க்க ஆதாரங்களை மறைத்து திரித்துக் கூறுவதில் இவர்கள் யூத நஸாராக்களை மிஞ்சிவிட்டனர். தன்னுடைய சொந்த சரக்கை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவதும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களிடத்தில் கூறாமல் மறைப்பதும் யூத நஸாராக்களின் கேடுகேட்ட செயலாகும்.

போலி சுன்னத் ஜமாஅத்தினர் அந்த நோட்டீஸில் இந்த இழிசெயலைச் செய்து தாங்கள் சுன்னத் ஜமாத்தினர் இல்லை. சுன்னத்துக்கு (நபிவழிக்கு) எதிரானவர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இவர்களை சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லாமல் பித்அத் ஜமாஅத்தினர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது.

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுகையில் கலந்துகொள்வது நபிவழி என்பதையும் இதற்கு எதிராக பித்அத் ஜமாத்தினர் வைக்கும் வாதங்களுக்கு சரியான விளக்கத்தையும் இந்த பிரசுரத்தின் வாயிலாக நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

Tuesday, June 05, 2012

தடம்புரண்ட தவ்ஹீத் ஆலிம்!


வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். அல் குர்ஆன் 3:144

ஹாமித்பக்ரி ஏகத்துவவாதிகள் அவ்வளவு சீக்கிரம் இவரை மறந்திருக்கமாட்டார்கள் தவ்ஹீத்வாதிகளுக் கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் ஒரு காலத்தில் தமிழகமெங்கும் தவ்ஹீத் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் இன்று இவரின் நிலையை பார்த்தால் நம்மை அறியாமல் நமது உள்ளத்தில் சிறு வலி ஏற்படுகிறது காரணம் ஆரம்ப கால கட்டத்தில் இந்த தவ்ஹீதுக்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது ஆனால் இன்று அப்படி பாடுப்பட்டு அடிபட்டு உதைபட்டு வளர்த்த தவ்ஹீதை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார் இந்த முன்னால் தவ்ஹீத்வாதி!

ஹதீஸ்களை தேடி எடுக்கும் லாவகம் என்ன அவரின் நினைவாற்றல் என்ன எந்த பிரச்சினைக்கும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மிகவும் எளிமையாக பதில் அளிக்கும் திறமை என்ன அணைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு மாநில தலைவராக இருந்தவர் இப்படி பல சிறப்புகள் பெற்ற ஒருவர் இன்று கப்ர் வணங்கிகளுக்கும் பித்அத்வாதிகளுக்கும் மத்ஹப் வாதிகளுக்கும் பிரசார பீரங்கியாக மாறிவிட்டார்.


தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y