அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Wednesday, February 05, 2014

சவுதிவாழ் தமிழக தென்மாவட்ட மக்களுக்கு ஓர் நற்ச்செய்தி!


இந்தியாவின் முன்னனி தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 16 ஆம் தேதி முதல் புதிய சேவைகளை மத்திய கிழக்கு பகுதியில் இருந்து விரிவுபடுத்த உள்ளது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளான யுஏஇ மற்றும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் பயனிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப சோவைகளும் அதிகரித்து வருகிறது.

ஜெட்டின் புதிய அறிவிப்பின் படி 16 ஜனவரி முதல் சவுதி அரேபியா தம்மாம் நகரில் இருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு தினசரி சேவையை துவங்குகிறது.

அதேபோல் யுஏஇ அபுதாபியில் இருந்தும் சென்னைக்கும் தனது புதிய சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.

மேலும்:தகவலுக்கு இங்கே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://www.jetairways.com/EN/SA/Home.aspx
தகவல்:புதுவலசை ஜமாஅத் நெட்

Monday, July 02, 2012

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!


டெல்லி: உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.
இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ்தமிழ் 

Monday, October 31, 2011

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது


இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும். சவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே  குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில்ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுஎன்றார் ஆளுநர் காலித்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானதுஎன்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.

மஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன.  ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்என்றார் ஆண்டர்சன்.

நன்றி:இந்நேரம்.காம்

Wednesday, June 22, 2011

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்
Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y