அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, June 28, 2011

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!


கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.
உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Monday, June 27, 2011

மாபெரும் கண்டனப் போர் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்


தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவ்வாய் 28-6-2011 அன்று நடைபெறும் மாபெரும் கண்டனப்போர் ஆன்லைன் பிஜேயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்! 

விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.
மிஃராஜ் ஓர் அற்புதம்
மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)
ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

Saturday, June 25, 2011

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்.

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

Friday, June 24, 2011

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்!

அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான, அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற் கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவதுதான் முக்கியம் என்பதால், தடு மாறிக் கொண்டிருக்கின்றஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக் கப்பட்டு ஆசைப்பட்ட சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் சில தன்மை களை நம்மிடமிருந்து நாம் வேறோடு களைந்தெரிய வேண்டும். அந்த பண்பு களின் அடையாளங்கள் தென்படுகின்ற நிலையிலே காலத்தை ஒதுக்கி வியர் வையை சிந்தி சிறந்த காரியங்களை செய்திருந்தாலும் அவை அல்லாஹ்விடத் திலே எந்த மதிப்பும் இல்லாததாகிவிடும்.

Wednesday, June 22, 2011

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்
Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

விவாகரத்து (தலாக்) விதிமுறைகள்

ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும்.
1.       விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன் புறுத்துவான்; பராமரிக்கவும் மாட்டான்.

Monday, June 20, 2011

சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் விசாரனை வீடியோ இனைக்கப்பட்டுள்ளது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

Saturday, June 18, 2011

மது அருந்துதல் உலக அளவில் 10வது இடத்தில் வந்து கேவலப்பட்ட மலேசியா!

மலேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு என்று சொல்லப்பட்டாலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படியிலான சட்டங்கள் இங்கு அமுலில் இல்லை இதனால் இங்கு மது விற்பனை சக்கை போடுபோடுகிறது. 
 உலக சுகாதார அமைப்பு அதிகம் மது குடிக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியல் ஒன்றை தயாரித்தது இதில் மலேசியாவிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. 
 கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மலேசியர்கள் மதுவிற்காக செலவிட்ட தொகை 2250 கோடியாம் சராசரியாக ஒரு மலேசியன் 11 லிட்டர் பீரை அருந்துகிறாராம்  மலேசியர்கள் அருந்தும் ஆல்கஹால் அதிகம் உள்ள மது சராசரியாக 7 லிட்டராம் சர்வே முலம் கிடைத்த இந்த கணக்கெடுப்புகளைக் கொண்டு உலக அளவில் மலேசியாவிற்கு 10வது இடத்தை தந்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

இரத்த தான சேவையில் தம்மாம் மண்டலம் தொடர்ந்து ஐந்து வருடங்களாக முதல் இடம்















அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் கடல் கடந்து சிறப்பான முறையில் நடைபெற்றுக் கெண்டுள்ளன.

யான்பு தஃவா சென்டரில் பணியாற்ற இஸ்லாமிய அழைப்பாளர் உடணடியாக தேவைப்படுகிறார்

யான்பு தஃவா சென்டரில் பணியாற்ற அவசரமாக இஸ்லாமிய அழைப்பாளர் தேவைப்படுகிறது விசா தயாராக உள்ளது.

கல்வி தகுதி  இந்தியாவில் அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்றவராக இருந்தால் வேண்டும் ஓரளவு அரபு மொழியை தமிழாக்கம் செய்யும் திறன் கொண்டவாராக இருப்பது அவசியம்.

Friday, June 17, 2011

சோதனையின்றி சொர்க்கமில்லை


தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம்பள்ளிவாசல் தடைஅடக்கத்தலம் மறுப்புதிருமணப் பதிவேடுமறுப்புபொதுக்கூட்டத்திற்குத் தடைபொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரானஅடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்தஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீது அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும்ஆக்கிரமித்துநின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.

Thursday, June 16, 2011

ஃபேஸ்புக் எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை


கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம்இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.

அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும்இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

Tuesday, June 14, 2011

குர்ஆன் பவர்பாய்ன்டில் ஓசை மற்றும் எழுத்து வடிவில்!

கீழே இணைத்துள்ள அல்-குர்ஆன் பவர் பாய்ண்டில் குர்ஆனை வசிக்காவும் அதேசமயம் ஆடியோ வடிவில் கேட்கலாம் ஒருமுறை பதிவிறக்கம் செய்து உங்களின் கணினியில் நிறுவிக்கொண்டால் மீண்டும் கேட்க ஓத இணைய இணைப்பு தேவையில்லை

யார் இவர்?


நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு நோட்டிஸ் வடிவில்

யார் இவர்? பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  

Monday, June 13, 2011

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் வெற்றி தொடர்ச்சி 2

முந்தைய இடுகையின் தொடர்ச்சி! 
2006 தேர்தலில் இடஒதுகீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானதும் கண்ட முதல் தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல்! இந்த சட்டமன்றத் தேர்தலைக்கருத்தில் கொண்டு கும்பகோணத்தில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் உரிமை மீட்புப் பேரணியைநடத்தியது. எதிர்பார்த்தது போலவே அது உரிய பலனை அளித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்துஅழைப்பு வந்தது.
ஜெயலலிதாவைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவர். முஸ்லிம்களுக்குஇட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று வெளிப்படையாகவே பேசியவர். இருப்பினும் கும்பகோணம் பேரணியில் கூடியகூட்டம் அவருடைய எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால்அவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துஅது குறித்து ஆய்வு செய்வதற்காகஓர் ஆணையத்தையும் அமைத்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்குவிழுந்தாலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்தது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y