அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 30, 2011

டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!


ஜாக் இயக்கத்தினர் தங்களின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி தாங்களே நற்சான்று அளிக்கும் வகையில் அடிக்கடி எழுதி வருகின்றனர்.

'நம்முடைய பேச்சுஉயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சுஅது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம்தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத்மே-2006 பக்கம் 20
தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48
நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

Friday, April 29, 2011

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!


இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.
ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.
இந்த நிலையில் ஹஜ் என்பது மகிழ்ச்சிகரமான விசயமாக இருந்தாலும், பயணம் செய்வதை அதுவும் இந்த முதிய வயதில் பயணம் செய்வதை சுமையாகக் கருதிய 70 வயதிற்கும் மேற்ப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய செய்தியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை மையமாக வைத்து தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்...

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்
தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.

Saturday, April 23, 2011

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். ஓர் அறிவியல் பார்வை.


ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம். 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர். 

இஸ்லாம் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு வலியுறுத்தியுள்ளது?

இஸ்லாம் சுத்தத்தை வழியுருத்துவதைப்போல் உலகில் வேறு எந்த மதமும் வழியுருத்தவில்லை.

தூய்மை என்பது ஈமானின் பாதி என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 328)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மனிதர்களில் அதிகமானோர் இரண்டு. அருட்செல்வங்களின் வியத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.  1.ஆரோக்கியம் 2.ஓய்வு. 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். (நூல்: புகாரி 6412)

நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்குமான ஒரு உந்துகோளாக அமைகின்றது. நோயற்ற வாழ்விற்கு தூய்மை முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டுகின்றது.

மருத்துவர்கள் என்ற பெயரில் கொடுங்கோலர்கள்!?

திருவனந்தபுரம்: விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச தேதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது.

இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24-ம் தேதி வரை பிரவச தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.

இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகி்ச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டது பற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் அவசர அவசரமாக பிரவச தேதிக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் 5 டாக்டர்களில் 4 பேர் 21-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதார துறை இயக்குனருக்கு அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Friday, April 22, 2011

குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு 

பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு 
பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்
களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி 
முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Thursday, April 21, 2011

கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ் !?


தேர்தலுக்கு முன்தினம் மமக போட்டியிடும் சேப்பாக்கம்திருவல்லிக்கேணிஇராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதியில் சிலவிசமிகளால் பரவலாக ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டதுஅதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம்செய்கிறதுஇந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப்பிழைக்கலாம்” என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல்போன்களிலும் இடம்பிடித்ததுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப்பொருத்தவரை சமுதாய நலன் கருதி மட்டுமே ஒருவரை ஆதரிப்பதுஎன்ற நிலைப்பாட்டை காலம் காலமாய் கடைப்பிடிக்கிறதுதமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் யாரை ஆதரித்தாலும் அவர்கள் முந்தையகாலங்களில் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களை மறைப்பதும்இல்லை. குறைப்பதும் இல்லைஅவர்கள் செய்த துரோகங்களை அவர்களிடமே சுட்டிக் காட்டுவது தான் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் தனிச் சிறப்புஅதற்கு மிகச்சிறந்த உதாரணம் சேப்பாக்கத்தில் வேட்பாளர்
ஜெ.அன்பழகனை வைத்துக் கொண்டுதிமுக முன்னாள் அமைச்சர் .ராசா 
செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலைச்சுட்டிக் காட்டியது தான்.

Wednesday, April 20, 2011

குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



கடந்த 08.04.2011 அன்று கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் TNTJ வினர் மீது அ.தி.மு.க.வினர் ஏவிய கூலிப்படையாக செயல்பட்டு வன்முறையை நிகழ்த்திய மனித நேய மக்கள் கட்சி, அதன் தோழமை அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ யினர்(வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நபர்கள்) மீது செக்சன் 147, 427, 323, 324 மற்றும் 506/2 வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் இது வரை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேர்தல் அன்றும் கூட சில அத்துமீறல்களிலும்,விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அக்குற்றவாளிகள் இன்றளவும் சுதந்திரமாக சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.எனவே நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், நடவடிக்கையை விரைந்து எடுக்க வலியுறுத்தியும் கடந்த 15.04.2011 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத், மாவட்ட செயலாளர் நவ்சாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மாநில பொதுசெயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தடையை மீறிய இந்த ஆர்பாட்டம் இறையருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த செய்தி பத்திரிக்கைககளில் வெளியானது.

Sunday, April 17, 2011

பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா?

கடமையான தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். எந்த விதக் காரணமும் இல்லாமல் வீட்டில் தொழுதால் அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

785 عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ رواه إبن
ماجه
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் (பாங்கு) அழைப்பைச் செவியுற்று காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : இப்னு மாஜா (785)

Thursday, April 14, 2011

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ் அரசு ஆனையின் முழுவிபரம்



ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு 
வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் 
செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய 
அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது" என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். 


அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்
கூடாது என்பதால் இந்த இடுகை!


Wednesday, April 13, 2011

மதி மயங்கும் மாணவர்கள்


மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தத் தீமைகளில் தலையாயது காதல் என்ற பெயரில் உள்ள காமம்! அடுத்து போதை, சூதாட்டம் என தீமைகளின் பட்டியல் நீள்கின்றது. குறைந்தபட்சத் தீமை புகைப் பழக்கமாவது ஒரு மாணவனை ஆட்கொள்ளாமல் விடுவதில்லை. சுற்றிலும் தீமைகளின் தீ நாக்குகளைக் கொண்ட ஒரு வளையத்தின் மத்தியிலும் பற்றி எரியாமல் இருக்கும் ஒரு சூடத்தைப் போன்று அவற்றிலிருந்து தப்புகின்ற, மதி மயங்காத மாணவர்களும் இருக்கின்றார்கள்.

Tuesday, April 12, 2011

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா

தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன
25158حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَبَّادٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ لِخَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا فَافْعَلُوا فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَطْلَقُوهُ وَرَدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا رواه أحمد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மக்காவாசிகள் கைதி(களாக இருந்த தங்களது உறவினர்)களுக்காக பிணைத் தொகையை அனுப்பிய போது ஸைனப் (ரலி) அவர்கள் (தனது கனவர்) அபுல் ஆஸ் அவர்களுக்காக செல்வத்தை பிணைத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். அச்செல்வத்துடன் அவர்களுடைய கழுத்து மாலை ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அம்மாலை (இதற்கு முன்பு) கதீஜா (ரலி) அவர்களிடம் இருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் அந்த மாலையுடன் ஸைனப் (ரலி) அவர்களை அபுல் ஆஸிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த மாலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தவுடன் கதீஜா (ரலி) அவர்களை நினைத்து கடுமையாக மனம் இளகினார்கள். மேலும் (நபித்தோழர்களிடம்) ஸைனபுக்குரிய கைதியை அவருக்காக நீங்கள் விடுதலை செய்து அவருக்குரிய (செல்வத்)தை அவரிடமே திருப்பி அனுப்பலாம் என நீங்கள் கருதினால் (அவ்வாறு செய்யுங்கள்) என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஆம் (அவ்வாறே செய்கிறோம்) என்றனர். ஸைனப் (ரலி) அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸிடம் உடன்படிக்கை எடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸாவையும் ஒரு அன்சாரித் தோழரையும் அனுப்பி நீங்கள் இருவரும் யஃஜஜ் என்ற பள்ளத்தாக்கில் இருங்கள். உங்களை ஸைனப் கடந்து சென்றால் அவரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.நூல் அஹ்மத் 25158 

Sunday, April 10, 2011

நபியின் கப்ருக்கு சென்றால் என்ன ஓதவேண்டும்


நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால் கூறிக் கொள்ள வேண்டும். இதற்கு என பிரத்யேகமாக எதையும் கூற வேண்டியதில்லை.

அல்லாஹ்வின் தூதரே! (அடக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.

பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : முஸ்லிம் (1774) 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y