அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

Wednesday, September 17, 2014

டிஎன்டிஜே நியூஸ் சேனல் சோதனை ஓட்டம்!


Sunday, February 03, 2013

இன்ஷா அல்லாஹ் 24 மணிநேர இணையதள செய்திச் சேனல்!

இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை 24 மணிநேர இணையதள செய்திச் சேனல் ஒன்று அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது இதற்க்கு செய்தி செய்தி ஆசிரியர்கள் தேவை என உணர்வு இதழில் வெளிட்ட விளம்பரம்!









Friday, May 27, 2011

ஊழலுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குஜராத்தில் அண்ணா ஹசாரே அறிவிப்பு


மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

Thursday, May 26, 2011

மாலைமலரின் பொய் செய்தி?

பிரான்சில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாதி நியாஸ் அஹ்மதுவின் தாயார் மாயம் என்ற ஒரு பொய் செய்தியை இன்று மாலைமலர் சென்னை பதிப்பில் வெளியிட்டுள்ளது ஆனால் பாத்திமா என்ற அந்த பெண்மணி எங்கும் ஓடிப்போகவில்லை மேலுரிலேயே தான் இருக்கிறார்.

இன்று மே-25 காலை முதலே பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் அவரின் வேதனையான பேட்டியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்  உண்மை இவ்வாறு இருக்கு இன்று மே-25 மாலை வெளியான இந்த மாலைமலரின் அவதூறு செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது நியாஸ் தீவிரவாதியா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நாம் போக விரும்பவில்லை ஆனால் அடாவடியாக அவரின் தாயாரையும் இதில் சம்பந்தப்படுத்தி தங்களின் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் கொள்ள துடிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 

Monday, February 28, 2011

2011-12 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
புதுடெல்லி:  மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை 11 மணியளவிலிருந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2011-12 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு, ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி ஓதுக்கீடு போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு.

* கல்வித்துறைக்கு ரூ. 52,057 கோடி நிதி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை

* நபார்டு எனும் விவசாய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்தை உயர்த்த ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

* உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட 2,500 கோடி டாலர்களுக்கு உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y