அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, November 25, 2011

கூடங்குளம் ஆதாயம் யாருக்கு ?


நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்க்கு அதிகமான விலை நாம் கொடுத்துதான் ஆகவேண்டும் நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது ஆனால் வாகனங்களிருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது கேட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்

அதேபோல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழமுடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகிறது சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கத்திகளை ஒசொன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டிலிருந்து பாதுகாக்கிறது அந்த பாதுகாப்பை நாம்கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
மேற்கண்ட சாதனங்களுடன் டிவி கம்ப்யுட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடிந்து வருகிறது பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது நாளைடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகிவிடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது

Friday, November 04, 2011

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.


இன்று தாடி வைக்கும் ஆண்களின்எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமானநவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீனவடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 
 அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
 அறிவிப்பவர்: உமர் (ரழி) ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)ஆதாரம்: முஸ்லிம் 435

ஓட்டுபிரிக்கும் ஒற்றுமை வேடதாரிகள்....!

கொள்கையில் பின்வாங்காமல் நிற்கின்றான் என்பதற்காக மட்டுமே ஏகத்துவ சகோதரர்களை முழு மூச்சாய் எதிர்க்கும் பணியை ஒற்றுமையை கையாளும் நம் சகோதர இயக்கங்கள் அரசியல் பதவிகளைப் பிடிப்பதில் மட்டும் ஒன்று சேர மாட்டோம் என தங்களின் செய்கைகளின் மூலம் பல நேரங்களில் வெளிப்படுத்தி விடுகின்றனர்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜெயிக்க போவது யாரு இந்துவா முஸ்லிமா என்ற தலைப்பில் நக்கீரன் பத்திர்க்கை போஸ்டரை வெளியிட்டு தன் விசமதனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிட்ட முஸ்லிம் வேட்ப்பாளர்கள் மற்று அணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y