அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, December 29, 2011

சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய ஹசாரே!

ஊழலை ஒழிக்க இதோ காந்தியவாதி களம் இறங்கிவிட்டார் என சங்க்பரிவாரதினரால் திட்டமிட்டே களமிறக்கப்பட்டு கமெடி பீசாகிபோன அண்ணா ஹசாரேவின் அட்டகாசங்கள் இன்று கட்டுக்கடங்காமல் போய்விட்டன இவரையும் மதித்து இவருக்கு அடிபணியும் நிலையை காங்கிரஸ் கையாண்டு வருவதுதான் அவலத்திலும் அவலமாக இருக்கிறது 

என்னதான் லோக்பாலில் திருத்தம் செய்தாலும் அதில் கொஞ்சம்கூட திருப்தி அடையாமல் ஏதாவது ஒரு குடைச்சலை கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் பிஜேபியை இருத்தி தமது எஜமான விசுவாசத்தை நிரூபிக்க துடியாய் துடிக்கிறார் அண்ணா ஹசாரே!

Saturday, December 24, 2011

யான்புவில் 2012 க்கான காலண்டர் இலவசமாக விநியோகம்!

யான்பு கிளையின் சார்பாக 2012 கான நாள்காட்டி யான்புவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும்  ஆதரவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !


யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம்

யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் நெல்லையில் நடைபெற்ற 13 மாநில பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பிறகு துஆவுடன் இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

Sunday, December 18, 2011

ஃ பேஸ்புக் என்னும் பேரபாயம் பெற்றோர்களே ஜாக்கிரதை !

ஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால் எப்படி இருக்கும் வந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்பு  ஃ பேஸ்புக் மூலமாக. 

இனையதளத்தில் உளபுவர்களுக்கு ஃபேஸ்புக் (Facebook) எனபது தெரியாமல் இருக்காது  ஃபேஸ்புக் எனப்படும் சைத்தானின் மரணகுழியில் உலகத்தில் உள்ள இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மூழ்கி கிடக்கிறார்கள்.

இதில் நாம் சமுதாயத்து பெண்களின் எண்ணிக்கை இஸ்லாமிய ஆண்களைவிட அதிகமாக உள்ளதுதான் பரிதாபம் கணவன் மட்டுமே பார்க்கும் தங்களின் அழகையும் அலங்காரத்தையும் விதம் விதமாக படம்பிடித்து ஃபேஸ்புக் தளத்தில் கடைவிரிதிருக்கிரார்கள் நாம் தீன்குலபென்மனிகள் இதில் உறுபினராக இருக்கும் அனைவருமே பருவவயது பெண்கள் இதில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

இவர்கள் இந்த இணையதளத்தில் தங்களை விதவிதமாக அடிக்கி வைத்து காத்திருப்பது யாரோ ஒரு கண்ணுக்கு தெரியாத ஆண்மகனுக்காக மட்டுமே இந்த கேடுகெட்ட இனையதளத்தில் உலவும் நாம் சமுதாய பெண்கள் நாசமாய் போன கதைகள் ஏராளம் ஏராளம். இந்த நட்பு வட்டாரத்தில் தங்களின் அனைத்து அந்தரங்ககளையும் ஒரு அந்நிய ஆடவனோடு அல்லது ஆடவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒரு வித இன்பம் அடைகிறார்கள இளம்பெண்கள் நாம் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பலர் இந்த சைத்தானின் ஆயுதத்தை கையில் ஏந்தியதன் மூலம் தூய வழியை தூக்கி எறிந்துவிட்டு நரகத்தின் வாசலை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட கதைகள் நிறையவே உள்ளன.

Thursday, December 15, 2011

Wednesday, December 14, 2011

நெல்லையில் நடந்த 13 மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்!

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நெல்லை பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


1. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும், புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு10% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 14 (செவ்வாய்க்கிழமை) அன்று உரிமை மீட்புப் போராட்டம் நடத்துவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது

Tuesday, December 13, 2011

நெல்லையில் பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.
வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:
பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. “அல்லாஹ் அக்பர்” என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:
பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி “கொள்கை உறவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி சிறப்பாக விளக்கினார்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y