அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label பிறமதம். Show all posts
Showing posts with label பிறமதம். Show all posts

Saturday, December 11, 2010

கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப்பொருட்கள்


கிறிஸ்மஸ் பண்டிகை நேரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரப்பொருட்கள்(பலூன் ,கிறிஸ்மஸ் மரம் ,லைட் செட் ,செண்டா மாஸ்க்,மரத்தில் தொங்கவிடக்கூடிய போல் ,பெல் ,சின்ன செண்டா )இப்படியான பொருட்கள் விற்பனை செய்வது கூடுமா ? கூடாதா? 

மாற்று மதத்தினர் புனிதமாகக் கருதும் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.
13971حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ عَطَاءً كَتْب يَذْكُرُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَامَ الْفَتْحِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَنَازِيرِ وَبَيْعَ الْمَيْتَةِ وَبَيْعَ الْخَمْرِ وَبَيْعَ الْأَصْنَامِ رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பன்றிகளை விற்பது இறந்தவற்றை விற்பது மதுவை விற்பது சிலைகளை விற்பது ஆகியவற்றை தடைசெய்துவிட்டனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13971)

சிலைகளை விற்பனை செய்வது கூடாது என இந்த ஹதீஸ் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் இவற்றை வணங்கிவந்த காரணத்துக்காகவே இவற்றை விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளில் அதில் உள்ள தன்மையைத் தாண்டி வெறோரு தெய்வீகத் தன்மை இருப்பதாக மக்கள் நம்பினால் அந்தப் பொருளும் சிலையுடைய அந்தஸ்துக்கு வந்துவிடும் 
.
5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري
''நபி(ஸல்) அவர்கள் தமது வீட்டில் 'சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி,(5952) அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது 
.''
ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இதை விற்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
கிரிஸ்தவர்கள் கிரிஸ்துமஸ் பண்டிகையின் போது பயன்படுத்துவதாக நீங்கள் குறிப்பிட்ட பொருட்களான பலூன் லைட் செட் கிரிஸ்துமஸ் மரம் போல் பெல் ஆகியவற்றை அவர்கள் வணங்கவில்லை. இதில் புனிதம் இருப்பதாக அவர்கள் நம்பவுமில்லை.
மேலும் இப்பொருட்கள் மத விழா அல்லாத வேறு நிகழ்சிகளுக்கும் பயன்படக்கூடியவையாக இருக்கின்றன. இப்பொருட்களை அவர்களுக்கு விற்பதால் நாம் தீமைக்கு துணைபோனதாகவும் ஆகாது.  இவற்றை இலவசமாகவோ அல்லது இவ்விழாவிற்காக விலையில் சலுகை செய்தோ கொடுத்தோல் அப்போது தான் தீமைக்கு துணைபோன குற்றம் ஏற்படும். எல்லா பொருட்களையும் விற்பது போல் இவற்றையும் விற்றால் அதில் தவறேதுமில்லை. எனவே இதை விற்பனை செய்வதை தவறு என்று கூற முடியாது

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y