அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label மீடியா பயங்கரவாதம். Show all posts
Showing posts with label மீடியா பயங்கரவாதம். Show all posts

Tuesday, January 29, 2013

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா ?

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா? அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்.

அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம்
படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

கமலஹாசனின் குடும்பத்தை விமர்சிக்கலாமா ?

கமலஹாசனின் மகளுடன் இணைத்து நீங்கள் பேசியது சரியல்ல என்ற விமர்சனம் செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
அஸ்மா சரபுத்தீன், பிரான்ஸ்.
 
கமலஹாசனுக்கும் நமக்கும் எந்த உறவும் பகையும் இல்லை. கமலஹாசனுடன் நமக்கு எந்த்க் கொடுக்கல் வாங்கலும் இல்லை. அவரைப்பற்றி பேசவேண்டிய எந்த உள் நோக்கமும் இல்லை

பிரச்சனை
கமலஹாசன் என்ற நடிகர் ஹேராம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து வரலாற்றுக்கு முரணாக படங்களை எடுத்து வந்தார். இதனால் சமுதாயத்தில் சிறிது சிறிதாக அவர் மீது கோபம் அதிகரித்து வந்தது. விஸ்வரூபம் என்ற திரைப்பட்டத்தில் குர் ஆன் வசனங்கள் தான் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்றும் முஸ்லிம்கள் எதற்கெடுத்தாலும் தலாக் சொல்லி பெண்ணை அந்தரத்தில் விட்டு விடுகின்றனர். அப்பனால் கைவிடப்பட்ட்தால் தான் முரடர்களாக உள்ளனர் என்ற கருத்தையும் அப்படத்தில் சொல்லி இருக்கிறார். முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசனின் அப்பாவும் கமலஹாசனின் அம்மாவை தலாக் சொல்லி விட்டார் எனக் கூறி முஸ்லிம்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் அப்பனால் கைவிடப்பட்டவர்கள் என இப்படத்தில் காட்டியுள்ளார். தலாக் என்ற வார்த்தையைத் தான்.

Friday, January 25, 2013

மாபெரும் சமூக விழிப்புணர்வு மற்றும் விவாத அழைப்பு பொதுக்கூட்டம்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்!

இடம் : மண்ணடி,தப்புசெட்டி தெரு

நாள் : 27.01.2013 ஞாயிறு இந்திய நேரம் மாலை 07.00 மணிக்கு,சௌதி நேரம் 04.30 

உரையாற்றப்படப்போகும் தலைப்புக்கள் 

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் திரைப்படம் கிருத்துவ மிஷனரிகளின் தூண்டுதலா?

முஸ்லிம்களை மிகவும் கேவலமாக திட்டமிட்டே நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25 தேதி திரையிட இருந்த நிலையில் இஸ்லாமிய இயக்கங்களில் பெரும் முயற்சியால் படம் வெளியிட தடை விதித்து  அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து ஆரம்பம் முதலே கூத்தாடி கமலுக்கு  வெளியிடுவதில் ஒரு வித குழப்பம் இருந்தே வந்துள்ளது ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் இந்த திரைப்படம் குறித்து கமல் முன்னுக்கு பின் முரணான கருத்தையே கூறிவந்தார் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைவர் பிஜே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது துப்பாக்கி படத்தில் நாங்கள் பிந்திவிட்டோம் ஆனால் இந்த படத்தை  வெளியிடும்போது  எங்கேயும் நாங்கள் ஓட விடமாட்டோம் என்று அதற்க்கான காரணம் இத்திரைப்படம் பற்றி வெளியிட்டுள்ள முன்னோட்ட காட்சிகளே மிகவும் மோசமாக இருக்கிறது அந்த படத்தின் பெயரையே கமல் அரபி எழுத்தைப் போல் எழுதி காட்டியுள்ளார் ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம்போல இதன் முன்னோட்ட கட்சிகளியே இப்படி என்றால் இந்த திரைப்படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிகளும் பொங்கி எழுந்து விடுவார்கள் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y