நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?
நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் நான்கை பிஜேபி வென்றுள்ளது என்பதே
தவறு உண்மையில் இந்த பிஜேபி வென்றது இரண்டு மாநிலத்தில் மட்டுமே.
2000 முன்புவரை
ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் மற்றும் சட்டிஸ்கர் சங்கபரிவார சூழ்ச்சியாலும்
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாலும் ஒன்றாக இருந்த மத்தியபிரதேசம் என்னும்
மாநிலம் அப்போதிருந்த பிஜேபி வாஜ்பாய் அரசால் ரெண்டாக பிரித்து சட்டிஸ்கர் என்னும்
மாநிலம் உருவாக்கப்பட்டது அதனால் என்ன காரணத்திற்கு ஒரு மாநிலத்தை ரெண்டாக
பிரிதார்களோ அதை இப்பொழுது அறுவடை செய்கிரார்கள அதாவது ஆரம்பம் முதலே
சங்கபரிவாரத்தின் கோட்டையாக விளங்கிவந்த மத்திய பிரதேசம் அதிகமான ஹிந்து
வெறியர்களை கொண்ட இந்த மத்தியபிரதேசம் அதே இரேண்டாக பிரித்தாளும் அது பெயரளவில்
இரண்டு மாநிலமாக அறியப்பட்டாலும் உண்மையில் அது ஒரு மாநிலமே.
முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய உபி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று 13/11/2013 மாலை 04:00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி
அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில்
முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம்
இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச்
சேர்ந்தவர்.
மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.
இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.
பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா?
கடந்த மாதம் அஸ்ஸாமில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் இந்த கலவரம் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே அரங்கேற்றியது அது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் அஸ்ஸாமிய போடோ இன மக்களை ஒன்றிணைத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய வன்முறையை அஸ்ஸாமில் கட்டவிழ்த்து விட்டு எஞ்சியுள்ள முஸ்லிம்களையும் துடைத்தெறிவதர்க்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் அஸ்ஸாமிய மக்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்று ஒரு வதந்தியை கிளப்பி அதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதை அங்கே தொடர்ந்து முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வைத்து புரிந்து கொள்ளலாம்.
அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர்
நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.
இந்க கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏவுமான மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பளித்துள்ளார். அதேபோல முன்னாள் விஎச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஆயுள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பின்போது நீதிபதி ஜோத்சனா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அதாவது மாயாவைக் காக்க மோடி அரசு தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாயாவைக் காக்க மோடி அரசு பல வழிகளிலும் முயன்றதாக நீதிபதி தனது கருத்தில் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கில் மாயாதான் வன்முறைக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டதாகவும் நீதிபதி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
2008ம் ஆண்டுதான் மாயா கோத்னானி அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது அவர் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக பதவி தரப்பட்டார். நரோடா பாட்டியா சம்பவத்தில் பெண்களும், குழந்தைகளும்தான் மிகப் பெரிய அளவில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஜோத்சனா மேலும் கூறுகையில், மாயா கோத்னானிக்கு அப்போதைய விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் எஸ்ஐடியை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைக் காக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டன. கோத்னானியின் பெயர் கூட இந்த சம்பவத்தில் வந்து விடாதபடி காக்க கடுமையாக முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் நீதிபதி.
அகமதாபாத்: நரோடியா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஹெச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில் தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. நரோடா பாட்டியா வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வந்த வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.