முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்கும் முகமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து யூத இனத்தைச் சேர்ந்த ஷ்யாம்பைசரி என்பவன் இயக்கிய திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளான் இந்த படுபாதகச் செயலை உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கடுமையாக கண்டித்துள்ளனர் அமெரிக்காவிற்கு எதிராக உலக முஸ்லிம்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
அதேபோல தமிழகத்திலும் அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் வன்மையாக கண்டித்துள்ளது இஸ்லாத்திற்கும் முஸ்லிமுக்கும் ஒரு அவமானம் என்றால் உடனே களம் இறங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இச்செயலை வன்மையாக கண்டித்து முதலில் கண்டன அறிக்கையையும் அதனைத்தொடர்ந்து வரும் 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்தது.
இன்றைய நவீன காலத்தில் மனிதனுடன் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ள ஓர் அற்புதமான அறிவியில் கண்டு பிடிப்பு தொலைக் காட்சியாகும். அறிவியில் கண்டு பிடிப்புகளில் எதுவாக இருந்தாலும் அவற்றில் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியவைகளும் தீமையை ஏற்படுத்தக் கூடியவைகளும் இருக்கின்றன.
புதிது புதிதாக நவீன சாதனங்களை மனிதன் கண்டு பிடிக்கும் போது அவற்றையல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? தடுக்கப்பட்டவையா? அல்லது எந்த அளவிற்கு இதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. என்பதை நாம் சற்று நிதானமாக ஆய்வு செய்து அதற்கேற்ப அதைப் பயன்படுத்தி இம்மை மறுமை நற்பேறுகளைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
தொலைக் காட்சி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மனிதர்கள் இவ்வுலகத்தில் அடைந்திருக்கக் கூடிய நன்மைகள் ஏராளம் இதன் மூலம் இறைவனின் ஆற்றல்களையும் வல்லமைகளையும் இதையெல்லாம் மனிதன் கண்டுபிடிப்பதற்கு அவனுக்கு மேல் ஒரு சக்தி இருக்கின்றது என்பதையும் இன்னும் சாமானிய மக்கள் இந்த அறிவியல் ஆராய்ச்சிகளை அறிந்து பயன்படுத்துவதற்கும் இந்தத் தொலைக் காட்சி அற்புதமான அறியதோர் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அல்லாஹ் தன்னைப் பற்றிச் சொல்லும் போது வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 3:190
இவைகளை எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அவனுடைய தகுதியையும் அந்தஸ்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அது போன்று இறைவன் இருக்கிறான் என்பதை சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்த தொலைக்காட்சி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக் கின்றனர், தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். போடோ தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்
கலவரத்தின் பின்னணி :
போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.
போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நம்பிக்கை
கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக்
கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு
அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்(அல்குர்ஆன் 66.6)
சமீபகாலமாக
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கூடாத சில நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு
எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது அது முஸ்லிம் மாணவிகளை குறிவைத்து
அரங்கேற்றும் சதிச்செயல்தான் குறிப்பாக சில கல்வியில் முன்னேறிய மாவட்டங்களாக
சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த சதி வேலை கொடி கட்டிப்பறக்கிறது
கடந்த
வாரம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை சித்திரை மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த நாடார் இனத்தை சார்ந்த ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் சிலரால்
கொலை செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது ரமேஷ் என்ற சங்க்பரிவாரதால்மூளைச்சலவவை
செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தயார் படுத்தப்பட்ட இவண் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிஷா என்ற முஸ்லிம் மாணவியை காதலித்து
திருமணம் செய்து கொண்டுள்ளான் அவளும் அவனின் மதத்தையே பின்பற்றி வாழ்ந்தே வந்திருக்கிறாள் அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது நிஷாவிற்க்கு ஒரு அண்ணன் இருக்கிறார் ஆரம்பத்தில் அவளின்
திருமணத்தை எதிர்த்த அவளின் பெற்றோர் நாளடைவில் தனது மகளுடன் இணைத்து
கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 85,685 கோடி ரூபாய்! இதில் ஐந்தில் ஒரு பகுதி மது விற்பனை மற்றும் அதற்காக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கின்றது.
இப்படி ஒரு வருவாயை ஈட்டுகின்ற மாநில அரசு மதுக்கடைகளை மூடுகின்ற அளவுக்கு முன்வருமா? ஒருபோதும் வராது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?’ என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு:
டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.
இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.
சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.
ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.
கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? – ஷமீம்
பதில் : குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான வழியின் பக்கம் அழைக்கும் முற்சியை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைத் தான் நம்மால் செய்ய முடியும். ஒருவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு நேர்வழி காட்டும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (28 : 56)
(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தைஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.
2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள்
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.
சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்,மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்’என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.’
நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)
· பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.
சென்னை:தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார். இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஹஜ் பயணம் செல்ல ஏழு குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 70 வயதுக்குப் மேற்பட்டோர், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள் என 981 பேர் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட்டனர்.எஞ்சியுள்ளவர்களுக்கு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மதுரையிலிருந்து நேரடி விமானம்: இந்த ஆண்டு முதல் மதுரையிலிருந்து ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக, இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியது:தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து விமானத்தில் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மதுரையிலிருந்து நேரடியாகச் செல்ல விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதேபோல், ஆந்திர மாநிலம் ராய்ப்பூரிலிருந்தும் ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. உடமைகளைக் கொண்டு செல்வதற்கு, ஹஜ் குழு இலவசமாக பெட்டிகளை வழங்குகிறது.புதுச்சேரி, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஹஜ் ஹவுஸ் கட்ட மத்திய அரசு 2 கோடி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
''பொம்பள சிரிச்சாப் போச்சு''என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.
இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத் திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக் கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம். இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரி வாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டி ருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது. அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்கு கின்றது. பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம். அவைகளை அறிவதின் மூலம் வீணான சிரமங்களை தவிர்த்து, பயணத்தை நன்மையானதாக மாற்றலாம்.
தமிழகத்தில் சமுதாய இயக்கங்கள் என்றழைக்கப்படும் முஸ்லிம் லீக்குகளில், ஒரு லீக் திமுகவுடன் இருக்கும்போது மற்றொரு லீக் அதிமுகவுடன் இருக்கும்.
ஒவ்வொரு அணியும் தாங்கள் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் சமுதாயத்திற்குத் துரோகமிழைத்தாலும்அதற்கு ஆதரவளித்து முட்டுக் கொடுத்துக் கொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவர்; தங்கள் அடிமைசாசனத்தை உறுதி செய்வர். அத்துடன் வஞ்சகமில்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைவானத்திற்கும் பூமிக்குமாகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.
தங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்காக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைக்கடவுளாக்கி மகிழ்வார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் பேராசிரியர் காதர் மைதீன் ஒரு தேர்தல் கூட்டத்தில்கருணாநிதியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசியதாகும்.