அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, June 27, 2012

காத்திருக்கும் பேராபத்து? பெற்றோர்களே கவனம்!

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்(அல்குர்ஆன் 66.6) 



சமீபகாலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கூடாத சில நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது அது முஸ்லிம் மாணவிகளை குறிவைத்து அரங்கேற்றும் சதிச்செயல்தான் குறிப்பாக சில கல்வியில் முன்னேறிய மாவட்டங்களாக சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த சதி வேலை கொடி கட்டிப்பறக்கிறது 


கடந்த வாரம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை சித்திரை மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த நாடார் இனத்தை சார்ந்த ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ரமேஷ் என்ற சங்க்பரிவாரதால்மூளைச்சலவவை செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தயார் படுத்தப்பட்ட இவண் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிஷா என்ற முஸ்லிம் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளான் அவளும் அவனின் மதத்தையே பின்பற்றி வாழ்ந்தே வந்திருக்கிறாள்  அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது நிஷாவிற்க்கு ஒரு அண்ணன் இருக்கிறார் ஆரம்பத்தில் அவளின் திருமணத்தை எதிர்த்த அவளின் பெற்றோர் நாளடைவில் தனது மகளுடன் இணைத்து கொண்டுள்ளார்கள்.


சில நாட்களாக அவனின் போக்கில் மாறுதளை அவள் உணர்ந்திருக்கிறாள் அதனால் அவள் அவனை கண் காணித்து வந்துள்ளாள் எங்கே தன்னுடைய வாழ்க்கையும் சீரழித்து விடுவானோ என்று என்னம்தான் அதற்க்கு காரணம் அவனின் கடந்தகால செயல்களை அவள் அறிந்தே வைத்திருந்திருக்கிறாள் ரமேஷின் சுயரூபம்அவளுக்கு நன்றாகவே தெரியும் இந்த நிஷாவை காதலிப்பதற்கு முன்பு வேறொரு முஸ்லிம் மாணவியை காதலித்து அவளை திருமணம் செய்ய ஆயத்தமான வேளையில் அந்த பெண்ணின் பெற்றோர் அதை அறிந்து தடுத்துவிட்டனர் ஆனாலும் அவளிடமிருந்து மூன்று பவுன் தங்க சங்கிலியை அபகரித்துக் கொண்டு விட்டுவிட்டான் அந்த அய்யோகியன். 

இந்நிலையில் இந்த சங்க்பரிவார ஷைத்தான் இன்னொரு முஸ்லிம் மாணவிக்கும் ரூட் போட்டுள்ளான் இதை அவனது மனைவி நிஷா அறிந்து கொண்டாள் எங்கே தன்னையும் இவன் கைவிட்டு விடுவானோ என்று அஞ்சிய அவள் தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுல்ளாள் அதை அவளின் அண்ணனிடம் சொல்லியுள்ளார் அவளின் அண்ணன் ஆத்திரப்பட்டு சிலருடன் சேர்ந்து அந்த ரமேசை மிரட்டும் முகமாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது காயப்பட்ட ரமேஷை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர் ஆனால் அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டான் அவன் இறந்து இரண்டு வாரங்கள் ஆனபின்பும் இன்னும் நாகர்கோவிலில் அசாதாரண சூழ்நிலையேநிலவுகிறது நாகர்கோவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமலிருக்க காவல்துறை வேண்டிய ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதாத கூறப்படுகிறது இதனிடையே அவளின் அண்ணன் செய்து அலி உட்பட பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்

தொடர்ந்து இதுபோன்ற சதிச்செயல்கள் தமிழகமெங்கும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கு  இந்த சதிச்செயல்கள் கூட இவனின் மரணித்ததால் தான் தெரிய வந்துள்ளது இல்லாவிட்டால் இதுவும் பத்தோடு பதினொன்றாக மறைந்து போயிருக்கும் இரண்டு ஆண்டுகளாக மறைக்கப் பட்டுதான் இருந்துள்ளது இது சாம்பிள் மட்டுமே இதற்க்கு மிக முக்கிய காரணம் என்ன வென்று கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் இவற்றிற்க் கெல்லாம் பெற்றோரின் கவனக்குறைவுதான் முழுக்க முழுக்க காரணம் என்றால் அது மிகையில்லை.

எல்லா பெற்றோருக்கும் தங்களின் பிள்ளைகள் மீது பாசம் இருக்கும் ஆனால் அந்த பாசமே பிள்ளைகளின் தவறான செயலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது அவளுக்கு கொடுக்கும் கட்டுபாடட்டசுதந்திரம் தான் முதற்காரணம் சமுதாயத்தில் நிலவும் இத்தகைய சீர்கேட்டை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கம் அல்லாமல் எந்த பெற்றோரையோ அல்லது மாணவிகளையோ தாக்கும் எண்ணம் நமக்கு இல்லை சமுதாய அக்கறையை தவிர விருப்பு வெறுப்பினால் ஆக்கப்பட்டுள்ள கட்டுரையில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

கல்லூரி தேர்ந்தெடுக்கும் முறை 
பொதுவாக ஆண்கள் அதிகம் படிப்பறிவற்ற சமுதாயமாக நாம் உள்ளோம் இதில் பெண்கள் உயர்க்கல்வி கற்றால் அவளுக்கு படித்த மாப்பிள்ளை கிடைப்பது குதிரை கொம்பாகும் அதனால் அவளின் பொது அறிவிற்க்காக மேல்நிலைப் படிப்பான பனிரெண்டாம் வகுப்பே போதூமானதாகும் அப்படி அந்த பெண் மேல் படிப்பு படிக்க ஆசைப்படுவார்களேயானால் இவர்களின் முதல் கட்டுப்பாடு அவர்கள் எந்த சூழ்நிலையில் கல்லூரியில் பயில வேண்டும் என்பதை அவர்களில் பெற்றோர்தான் தீர்மானிக்கவேண்டும் காரணம் அவர்களின் வயசு அப்படி அந்த டீன் ஏஜ் பருவத்தில் அவர்களால் எதையும் தீர்மானிக்க முடியாது அந்த பருவம் பெண்களுக்கு மிகவும் முக்கியமான பருவம் பல்வேறு இயற்க்கை மாற்றங்கள் அவர்களின் உடளவில் ஏற்படும் காலம் அதில் ஏற்படும் அசவ்கரியகளால் மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஒரு தனிமையை அவர்கள் உணர்கின்றார்கள். 

அதனால் அவர்களின் கல்லூரியை பெற்றோதான்தேர்ந்த்தேடுக்கவேண்டும் அப்படி தேர்ந்தெடுக்கும் அந்த கல்லூரி முதல் தகுதி அது பெண்கள் மட்டும் பயிலும் கல்லூரியாக இருக்கவேண்டும் அது மட்டும் போதாது அதில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் பெண்களாகவே இருப்பது கட்டாயம் வேண்டும் மேலும் சிறப்பு தகுதியாக முஸ்லிம்கள் நடத்தும் கல்லூரியாக இருந்தால் அதில் கல்வியறிவு மற்ற கல்லூரிகளைவிட சற்று சுமாராக இருந்தாலும் பரயில்லை அதைவிட அவளின் ஒழுக்கம் அவர்களின் எதிர்காலம் முக்கியம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

கல்லூரி அனுப்பும் வழிமுறைகள் 
கல்லூரிக்கு தான் அனுப்ப வேன்டும் என்று தீர்மானம் செயதுவிட்டால் அவர்களை ஆட்டோவில் கண்டிப்பாக அனுப்பக்கூடாது பெற்றோரே அல்லது அவர்களின் மிக நெருங்கிய உறவினரோதான் கல்லூரியில் கொன்டு விடவேன்டும் திரும்ப அழைத்துவர வேன்டும் அல்லது பெண்களுக்கென்றே தனியாக கல்லூரி வாகணம் இருக்கும் அதில் மட்டும் தான் கண்டிப்பாக அனுப்பவேன்டும் 

ஏனென்றால் ஆட்டோதான் அவர்களின் வழிகேட்டிற்கு முதல் படியாக அமைகிறது தமிழகத்தில் முஸ்லிம் பெண்களை சீரழிக்க சங்க்பரிவார கும்பல் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம்தான் செயல் வடிவம் கொடுக்கிறது ஆரம்பத்தில் சில நாட்கள் இந்த சங்க்பரிவார சாத்தான்கள் மிகவும் சாதரணமாக இருப்பார்கள் பிறகு தங்களின் சுயரூபத்தை வெளிக்காட்டுவார்கள் முதலில் அவளுக்கு பணம் வாங்கிக்கொண்டு சிம் கார்ட் சார்ஜ் பண்ணிக்கொடுப்பது இன்ன பிற உதவிகளை செய்து கொடுப்பது இலவசமாக சிம் கார்ட்சார்ஜ் பண்ணிவிடுவது நாளடைவில் அவர்களின் அன்பைப்பெருவது பிறகு அவளை வானத்திற்கும் பூமிக்கும் புகழ்வது உன்னைப்போல் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை நீதான் உலக அழகி அது இது என்று மனதில் நீங்கா இடம் பிடிப்பது காரணம் அந்த வயசில் அவள் மனதில் எப்பவுமே ஒரு இடம் காலியாக இருக்கும் ஒருவித பாலின ஈர்ப்பு அவனிடம் ஏற்ப்பட்டவுடன் அந்த இடத்தை அவனுக்கு கொடுத்து விடுகிறாள்.

சீரழிக்கும் செல்போன்
இந்த ஷைத்தான் செயலுக்கு பேருதவியாக இருப்பது செல்போன் என்னும் நவீன சாதனம் எந்த ஒரு நவீன சாதனத்தை எடுத்துக்கொண்டாலும் நன்மை தீமை இரெண்டும் இருக்கும் ஆனால் அதை உபயோகிப்பதில்தான் அதன் பயன் இருக்கும் உதாரணமாக கத்தி என்ற ஆயுதத்தை பெரியவர்கள் பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்துவார்கள் ஆனால் அதே கத்தியை சிறு பிள்ளையிடம் கொடுத்தால் அதை தனது கண்ணிலோ முகத்திலோ அல்லது வயிற்றிலோ செலுத்தி உயிரழப்பு வரை ஏற்படலாம் அதேபோல்தான் இந்த செல்போனும் நவீன இந்த கண்டுபிடிப்பால் பல்வேறு வகையில் மானிடர்களுக்கு உதவுகின்றன அதே நேரம் மாணவ மாணவிகளுக்கு அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு மிகப்பெரும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது தனது பாசத்திற்குரிய மகள் ஆசையாக ஒரு சாதாரண செல்போன் கேட்டால் அந்த அன்பிற்குரிய தந்தை உயர்ரக நவீன அணைத்து வசதிகளும் கொண்ட செல்போனை வாங்கிக் கொடுக்கிறார்.

அதிலும் தந்தைளுக்கு பெண் பிள்ளைகள் எது கேட்டாலும் உடனே வங்கிக் கொடுக்கும் பழக்கம் அதிகமானோரிடம் காணப்படுகிறது இந்த செயல் தான் அவர்களை தவறான பாதையில் கொண்டு சேர்க்கின்றது என்றால் அது மிகையில்லை பள்ளி கல்லூரி செல்லும் ஒரு பெண்ணிற்கு எதற்கு செல்போன் என்று கூட சிந்திக்க இந்த பெற்றோர்களுக்கு தோணுவதில்லை ஏன் உனது மகளுக்கு செல்போனெல்லாம் வாங்கிக் கொடுத்தீர்கள் என யாராவது கேட்டால் அந்த தந்தை சொல்வார் எப்படி எனது மகளை ஒரு அவசர அவசியமென்றால் தொடர்புகொள்வது என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பு வேறு காலையில் செல்கிறாள் மதியம் வீடு திரும்புகிறாள் பின்பு எதற்கு அவளை இடையில் தொடர்பு கொள்ளவேண்டும் அப்படியே தொடர்புகொள்ள வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகத்தில் தொலைபேசி இல்லையா அந்த என்னில் தொடர்புகொண்டு அவளை அழைத்து வரச்சொல்லி பேசலாம் நிச்சயம் செல்போன் தேவையே இல்லை இந்த பழக்கத்தை கைவிட்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். 

செல்போன் என்பது ஒரு தனிமை எப்படி ஒரு பெண் ஒருவனுடன் தனித்திருந்து பேசிக் கொண்டிருக்கின்றாளோ அதேபோல்தான் இந்த செல்போன் என்னும் தனிமையும் தொட்டுப்பேசுவதைத் தவிர அனைத்தும் நடக்கும் அணைத்து ஆலோசனைகளும் செய்யலாம் எப்படி அவளும் அவனும் தனியே ஒரு அறையில் இருந்துகொண்டு திட்டம் தீட்டுவார்களோ அதேபோல அனைதும் செய்யலாம் அதனால் தான் நிச்சயம் பெற்றோர்கள தங்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக செல்போன் வாங்கி கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.

கண்மூடித்தனமான நம்பிக்கை 
தங்கத்திலான கத்தியே ஆனாலும் அதை வைத்து கண்ணையா குத்திக்கொள்ள முடியும் அதைபோன்றுதான் நமது பிள்ளைகளும் நாம் என்னதான் அவளுக்கு செல்லம் குடுத்து வளர்த்தாலும் அவளை பெற்றோர்கள் நிச்சயம் கண்காணிக்க வேண்டும்  என் மகளை நான் கண்காணிப்பதா அவள் பத்திரை மாற்று தங்கம் அவள் ஒருநாளும் தவறிழைக்க மாட்டாள் என்று வசனம் பேசக்கூடாது ஏனென்றால் அவளும் ஒரு பெண் அதுவும் இளம்பெண் அவளது ரத்த நாளங்களிலும் ஷைத்தான் ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும் அவளது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்கப் படவேண்டும் நீங்கள் தந்தை மட்டுமல்ல ஒரு பொறுப்பாளரும் கூட உங்களின் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்க படுவீர்கள் எனபதை மனதில் கொள்ளவேண்டும்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண்கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."நபி (ஸல்) கூறினார்கள்புகாரி 893

என்ற நபி மொழியை உள்ளத்தில் கொண்டு குடும்பத்தையும் செல்வதையும் காப்பது ஒவ்வொரு குடும்பத்தலைவனின் தலையாய கடமை அப்படி உங்களின் கடமையை பெற்றோர்களான நீங்கள் செய்ய மறந்தால் அல்லாஹ் தன் திருமைறையில் சொல்கின்றானே உங்களையும் உங்கள் குடம்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள் என்ற இறை வசனத்தை புறக்கணித்தவர்களாக ஆகுவீர்கள் எனபதை மனதில் கொண்டு உடனே பெற்றோர்கள் தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ள அதற்கான உறுதிமொழியை இப்பவே எடுக்க வேண்டும் முஸ்லிம்களான நமக்கு இம்மை வாழ்வு என்பது சில வருடங்களே நிலையான வாழ்வு மறுமையில் உள்ளது.

மேலும் இம்மாதிரியான செயல்களால் உலகிலும் பேரிழப்பை நமக்கு ஏற்ப்படுத்தலாம் ஒரு மும்பை போன்று குஜராத் போன்று நமது தமிழகமும் மத மோதல் களுக்கு வித்திட பெற்றோர்களான நீங்கள் காரணமாக ஆகிவிடாதீர்கள் அதுபோன்ற பேராபத்து இந்த சமுதாயதிற்கு ஏற்படாமல் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாய கடமை நரகநெருப்பு என்னும் பேரபாயத்திலிருந்தும் நமது குடும்பத்தாரை காப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை  மனதில் கொள்ளவேண்டும் 

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்!66.6

மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நம் சமுதாயத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள்புரியவேண்டும் இன்ஷா அல்லாஹ்! 

ஆக்கம் : முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y