அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label சமுதாய பிரச்னை. Show all posts
Showing posts with label சமுதாய பிரச்னை. Show all posts

Monday, March 10, 2014

அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு ஏன்

அதிமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறது!
இதுகுறித்து பல்வேறு கேள்விகள் முகநூல் வழியாகவும் மின்னஞ்சல்மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் பல்வேறு கேள்விகள் கேட்க்கப்பட்டு பறப்பட்டு வருகிறது அதற்க்கான முழுமையான பதிலை இங்கே தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் தருகிறார்கள் பாருங்கள் பார்க்க தூண்டுங்கள்!

by yanbutntj

Saturday, February 01, 2014

சமுதாய மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

Tuesday, December 24, 2013

Thursday, December 19, 2013

இட ஓதிக்கிட்டுக்காக தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்கள்!


Monday, December 16, 2013

Saturday, November 30, 2013

ஜனவரி 28 போராட்டம் ஏன்?

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும் ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

Tuesday, October 29, 2013

பிஜேபியின் அடிவருடும் சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்!

பிஜேபியின் அடிவருடிகள் யார்? :
சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்!
 
தஞ்சை மாவட்டத்தில் அல்தாபி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கவனக்குறைவாக சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் பிஜேபியை ஆதரிக்கின்றது என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் சமுதாய துரோகிகளுக்கு பகிரங்க அறைகூவல்!

Wednesday, October 16, 2013

மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம் பாகம் 2

மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம் பாகம் 1

Thursday, October 10, 2013

ஏகத்துவ எதிரிகளை கதிகலங்க வைத்த கண்டன ஆர்ப்பாட்டம்!

ஏகத்துவ எதிரிகளை கதிகலங்க வைத்த கண்டன ஆர்ப்பாட்டம்!

நாகை வடக்கு மாவட்டம் அறங்கக்குடியில் ஏகத்துவ சகோதர, சகோதரிகளை ஊர் நீக்கம் செய்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான அயோக்கியன் சம்சுதீன் என்பவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 08.10.13 செவ்வாய் அன்று ஆயிரக்கணக்கான ஏகத்துவ சொந்தங்கள் மயிலாடுதுறையில் திரண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள்!

Tuesday, January 22, 2013

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 22, 2013, 13:23
இது குறித்து தமிழகம் முழுவதும் ஒட்ட வேண்டிய போஸ்டர் வாசகத்திற்கு  Click Here
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

Monday, January 21, 2013

பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து நக்கீரன், ஆனந்த விகடன் இதழுக்கு கடிதம்

இலங்கைப் பெண்மணி ரிசானாவுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை சரியல்ல என்று கூறி இஸ்லாத்தை விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்ட நக்கீரன், ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் அந்த இதழ்களில் கட்டுரைகளை எழுதிய மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு பகிரங்க விவாத அறைகூவல் கடிதம் :


Saturday, January 19, 2013

பகிரங்க அறைகூவல் போஸ்டர் வாசகம்

பகிரங்க அறைகூவல் :
குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் வழங்கக்கூடிய தண்டனைகள் பிற்போக்கானவை என்று உளறும்
அதிமேதாவிகளே! அரைவேக்காடுகளே!

ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன் கும்பல்களே! மிருக புத்திரன்களே!
நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், முஸ்லிம்களுடன் பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா?
அறைகூவல் விடுக்கின்றது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

Wednesday, November 21, 2012

முஸ்லிம்களை சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?

துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15 – 11- 12 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

20.11.12 – செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

Friday, August 03, 2012

பிஃத்ரா என்பது பெருநாள் தர்மமா அல்லது வளர்ச்சி நிதியா?

முஸ்லிமான அடிமை சுதந்திரமானவர்,ஆண் பெண் பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமைஅல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள் பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும் ஆனால் இன்னமும் சில சகோதர சகோதரிகள் இந்த பெருநாள் தர்மம் குறித்து விழிப்புணர்வு அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது விழிப்புணர்வு இருந்தும் அதை வழங்கிட மனமின்றி உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அணைத்து இயக்கங்களும் வருடா வருடம் பித்ராவை வசூல் செய்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தும் பித்ராவை திரட்டுகிறது அப்படி திரட்டிய தொகையை சரியாக ஏழைகளுக்கு விநியோகம் செய்கின்றதா என்பதை எப்படி மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

Thursday, July 05, 2012

முஸ்லீம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அயோக்கியத்தனம்!‎ ஆர்ப்பரித்து எழுந்தது டிஎன்டிஜே!

 பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரும்பாவூர் என்ற குக்கிராமம். இந்த ‎ஊர் பெரம்பலூரிலிருந்து 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் வசித்து ‎வரும் சாகுல் ஹமீது என்ற மணமகனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த யுரேஷா பானு ‎என்ற மணமகளுக்கும் கடந்த 25.06.12 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ‎அங்குள்ள கோகுல் திருமண மண்டபத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் ‎முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.‎

திருமண தினத்தன்று காலை 10.20 மணியளவில் ஆர்.டி.ஓ பேச்சியம்மாள் ‎தலைமையில் மண்டபத்தினுள் புகுந்த காவல்துறையினர் திருமணத்தைத் தடுத்து ‎நிறுத்தி மணமகன், மணமகள், மணமகனின்பெற்றோர்கள், மணமகளின்பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.‎

ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக ‎நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் ‎குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய ‎அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது ‎செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.‎

Wednesday, June 27, 2012

சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா? -ஒரு விரிவான அலசல்!


விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை :
இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்க, மற்ற முஸ்லிம் அமைப்புகளும் இந்த துரோகத்தை பெயரளவில் கண்டிக்க, ம.ம.கட்சியும் தடாலடியாக கணடன அறிக்கை வெளியிட என்று தமிழக அரசியல் களம் சூடு பறந்தது.
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு வஞ்சிங்கப்பட்டுவிட்டார்கள்; புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கண்டன அறிக்கை வெளியிட்ட ம.ம.கட்சியினர் பிறகு அந்தர்பல்டி அடித்து இடஒதுக்கீட்டில் துரோகம் நடக்கவில்லை என்று தமிழக அரசுக்கு முட்டுக்கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்.
இந்த விஷயத்தில் ம.ம.கட்சியினர் செய்த துரோகத்தைக் கண்டித்து மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை 24.06.12 ஞாயிறன்று நடத்தவுள்ளோம் என்று கடந்த 22.06.12 வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு நாலாபுறமும் பறக்க ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப்போகின்றது என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த பரபரப்பான நேரத்தில், இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11மணியளவில்,  இந்த ஒப்பந்த மருத்துவர்கள் தேர்வை பொறுப்பேற்று நடத்திய தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இது குறித்த ஒரு அறிக்கையை அன்றைய மாலை நேர பதிப்பாக வெளிவரக்கூடிய இதழ்களில் வெளியிட்டு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

Wednesday, June 13, 2012

பச்சை துரோகத்திற்கு எதிராக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்!

மார்ச் மாதம் 1346 பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது


இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1346 பேரில் ஒரே ஒரு முஸ்லிமுக்குக் கூட வேலை அளிக்கப்படவில்லை.3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதற்கு நிகரான பச்சைத் துரோகம் வேறு இருக்க முடியாது. இந்த அநியாயத்தைக் கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்துகிறது.14 ஆம் தேதி வியாழன்[நாளை] காலை11 மணிக்கு நடக்கும் சிறை செல்லும் இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் ஆன்லைன்பிஜேயில் நேரடியாக இங்கே ஒளிபரப்பு செய்யப்படும்
பச்சை துரோகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y