அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label சமுதாய தலைவர்கள். Show all posts
Showing posts with label சமுதாய தலைவர்கள். Show all posts

Saturday, September 27, 2014

பிஜே அவர்களின் முக்கிய அறிவிப்பு!

அன்புள்ள கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது தொழிலை விரிவுபடுத்திட  சிறிது காலம் என்னை பொறுப்பில் இருந்து விடுமுறை தருமாறு ரமலானுக்கு முன்பிருந்தே நிர்வாகக் குழுவில் கேட்டு வந்தேன். நிர்வாகக் குழுவில் பல முறை வலியுறுத்திய பிறகு தற்போதுதான் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். சூனியத்துக்கு எதிரான மண்ணடி கூட்டத்திலும் இது பற்றி நான் குறிப்பிட்டுள்ளேன். பித்னாக்களுக்கும் அவதூறுகளுக்கும் முகம் கொடுத்தால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது. தொழிலில் கவனம் செலுத்தினால் ஆய்வுகள் செய்யவும் உலக விஷயங்களை அதிகம் அறிந்து கொள்ளவும் நேரம் ஒதுக்க முடியாது. எனவே தான்  எனக்கு இந்த விடுமுறை தேவைப்படுகிறது. எனது தொழில் விரிவாக்கம் அடைந்து எனது வேலைப்பளு குறையும் போது அல்லாஹ் நாடினால் என்னால் இயன்ற அளவுக்கு பணியாற்றுவேன். அனைத்து பிரச்சனைகளையும் சிறப்பாக கையாளும் நிர்வாகிகள் திறம்பட செயல்பட நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள். நான் புதிதாக துவங்கவுள்ள இன்னொரு தொழில் சிறக்க உங்கள் துஆவை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

Saturday, June 21, 2014

ஹாஜாகனியின் அறியாமை தவ்ஹீத் ஜமாஅத் விளக்கம்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?
அஸ்லம், அதிரை

Saturday, January 18, 2014

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்த சந்தேகங்களுக்கு பிஜே அவர்கள் பதில் அளிக்கின்றார்கள்.


நிகழ்ச்சியை இணையதளத்திலும் காணலாம் http://www.tamilantelevision.com/


Sunday, November 24, 2013

பீஜேயின் தன்னிலை விளக்கம் !




அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்
ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம். இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை.

Monday, October 14, 2013

அக்னி பரிட்சையில் பிஜே பேட்டி 13.10.2013

Thursday, October 10, 2013

அக்னிப் பரீட்சையில் பீஜே பேட்டி!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 13.10.13 ஞாயிற்றுக்கிழமை  இரவு இந்திய நேரம் 7.30 மணிக்கு அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில்  பீஜே அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது.

  • தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியான பாதையில்தான் செல்கின்றதா?
  • மோடி பிரதமராக முடியாதா?
  • வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு?
என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்களை அந்நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்!

குறிப்பு : கடந்த வருடம் இதேபோல் அக்னி பரீட்சை நிகழ்ச்சியல் பிஜே அவர்கள் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இது கேள்விகளின் முன்னோட்டம்

Tuesday, May 14, 2013

சகோதரர் பிஜே அவர்களுக்காக துஆ செய்யவும்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.

Thursday, November 29, 2012

துப்பாக்கி படமும் சறுக்கும் சமுதாய தலைவர்களும்?

சென்ற தீபாவளியன்று வெளியான துப்பாக்கி என்ற திரைப்படம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது அதில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அப்பட்டமாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமூக ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் முஸ்லிம் அனைவரையும் தீவிரவாதிகளாகவும் காட்ட வேண்டுமென்றே திட்டமிட்டே திரைப்படம் எடுத்துள்ளனர் . 

இந்த ஈனச்செயலை தமிழக முஸ்லிம் சமுதாய இயக்ககங்கள்  அனைத்தும் ஒட்டுமொத்தமாக கண்டித்தன இந்த படத்தை மக்கள் பார்ப்பதற்கு முன்பே அந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்திவிடவேண்டும் என அணைத்து இயக்கங்களும் எண்ணின இதனை அடுத்து பத்தொன்பது தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக காவல்துறை அதிகாரியிடமும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசிடமும்  இத்திரைப்படம் முஸ்லிம்களின் உண்மையான கொள்கைக்கு  எதிரானது இதை திரையிடுவதை தடுக்கவேண்டும் என்று மனுக்கொடுதனர்.

Wednesday, October 10, 2012

சகோ.பிஜே அவர்கள் விரைவில் குணமடைய அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகின்றோம் .

எங்கள் இறைவா எங்களுக்கு உனது மார்க்கத்தை எடுத்து வைத்து உனது அருளால் எங்களை உன்னுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த நேரான வழியில் பயணிக்க வைத்த சகோ.பிஜேயின் இந்த நோயை உனது வற்றா பெரும் கருணையால் விரைவில் குணமடைய அருள்புரியாக யாஅல்லாஹ் கண்ணீருடன் உன்னிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றோம்.

அனைவரும்சகோ.பிஜே விரைவில் குனைமடைந்து ஒடுக்க பட்ட தமிழக முஸ்லிம் சமுதாயதிர்க்காக தொடர்ந்து பணியாற்றிட  துஆ செய்யவும்  இன்ஷா அல்லாஹ்!





Tuesday, October 09, 2012

பி.ஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது..! பலருக்கு ஏமாற்றம்..!


“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்”. Al - Quran (49:12)

ஜனனமும் கல்வியும்:


பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.



Monday, June 18, 2012

சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்!

சமுதாய மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று குரல் எழுப்பினால் து செவிடன் காதில் ஊதிய சங்காய்அமையும்சட்டமன்றத்தில் குரல் கொடுத்தால் தான் செவிட்டில் அறைந்தால் போல் விழும் என்பதால் மாபெரும்மக்கள் பேரியக்கமாகிய தமுமுகவை அரசியல் அமைப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்று இப்போதைய தமுமுககாரர்கள் அப்போதுக் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தமுமுகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு தடையாக இருப்பது தவ்ஹீத் பிரச்சாரம் தான் என்று பகிரங்கமாக்கூறி தவ்ஹீத் பிரச்சார அறிஞர்களை வெளியேற்றி விட்டு சமுதாயப் பேரியக்கத்தை தங்களுக்கு ஓட்டுப் பிச்சைஎடுக்கும் சுயநல இயக்கமாக மாற்றிக் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் இரண்டு பேர் மட்டும் சட்ட மன்றத்திற்குள்நுழைந்தனர்.

சொன்னது என்னாச்சு ?
இவர்களுக்கு ஆதரவளித்த அதிமுக தனது ஓராண்டு சாதனையை(?) நூறாண்டு சாதனையாக  பட்டியலிட்டது

Tuesday, May 08, 2012

பீஜே அவர்களைப் பற்றி. (ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்!)


இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 

மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன். 
 

இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
 

அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y