அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 28, 2012

S.P பட்டினம் முதல் ஜூம்ஆ உரை : கோவை ரஹ்மத்துல்லாஹ்


Wednesday, April 25, 2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

Tuesday, April 24, 2012

ஆபாசத்திற்கும் சூதாட்டத்திற்கும் கூடாரமாக திகழும் IPL கிரிகெட்!?


ஏப்ரல்3அன்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிக> நடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் திருவிழாக்களில் ஆடும் நடனத்தை தடை செய்த போலீஸார் இதை கண்டு கொள்ளாதது துரதிஸ்டம் என்றுக் கோரி மதுரை காந்தி நகரைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் அப்பொழுதே மனுத் தாக்கல் செய்திருந்தார் மனுவை வேண்டுமென்றே இழுத்தடித்த உயர்நீதிமன்ற நீதிபதி20-4-2012 அன்று விசாரித்து மேல்படி மனுவை கூடுதல் டிஜிபி க்கு அனுப்பி நடிவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்தள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் துவக்க விழாவின் போது ஆபாச நடனமாடிய பாலிவுட் நடிகநடிகையர் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பரீட்சை தொடங்க இருப்பதால் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி நடக்கவிருக்கின்ற ஐ.பி.எல். விளையாட்டின் தேதியை தள்ளி வைக்குமாறு பரிந்துரை செய்து மாநில முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடிதம் எழுதியது. பார்க்க http://www.tntjsw.net/index.php ஆனால் மாநில முதல்வர் அதன் தேதியைக் கூட தள்ளி வைக்க வில்லை, தள்ளி வைக்க வில்லை முடிய வில்லை.


Saturday, April 21, 2012

இறைவனின் வல்லமையை உணர்த்தும் சுனாமி (Tsunami).



இன்று உலகில் சுமார் 28 நாடுகளில் புவி அதிர்ச்சி ஏற்பட்டதுடன், பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேஷியா போன்ற நாடுகள் சிரிய அளவில் கடல் கொந்தளிப்பின் மூலம் பாதிக்கப்பட்டது. 
சுனாமி பற்றிய தெளிவையும், இறைவனின் வல்லமையையும் பற்றி தெளிவுபடுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரி பாத்திமா ஷஹானா அவர்களினால் எழுதப்பட்டு நமது தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கத்தை காலத்தின் தேவை கருதி சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்கிறோம். 

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.  (அல்குர்ஆன் 13:39)

Thursday, April 19, 2012

ஓமனில் புதிய கிளை திறப்பு மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!

ஓமன் புதிய கிளை திறப்பு மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளி அன்று சௌதி நேரம் பிற்பகல் 01:30 முதல் ஆன்லைன் பிஜேயில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.

சிறப்புரை:சகோ.பி.ஜைனுல் ஆபிதீன்
(மாநில தலைவர் TNTJ)

Thursday, April 12, 2012

குஜராத் கலவரத்தில் 23 பேர் எரித்து கொன்ற வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆனந்த் மாவட்ட சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் உ.பி. மாநிலம் அயோத்திக்கு கரசேவைக்கு சென்று திரும்பிய ராமபக்தர்கள் 56 பேர் உடல் கருகி பலியாயினர். இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மதக் கலவரம் மூண்டது.

Tuesday, April 10, 2012

அல்ஹம்துலில்லாஹ் S.P. பட்டிணத்தில் சிறப்பாக நடந்தது லுஹர் தொழுகை


அல்ஹம்துலில்லாஹ் சமுதாய துரோகிகளின் கனவை தகர்த்து வட்டசியர் உத்தரவுப்படி தவ்ஹீத் ஜமாஅதினரிடம் பள்ளிவாசல் சாவி 10.04.2012 செவ்வாய் அன்று வழங்கப்பட்டது.


சாவியை பெற்ற கொள்கை சகோதரர்கள் பள்ளிவாசலை சுத்தம் செய்து லுஹர் தொழுகையும் நடத்தினர் எல்லா புகழும் இறைவனுக்கே.

Monday, April 09, 2012

திறக்கப்படுகிறது S.P பட்டிணம் பள்ளிவாசல் எல்ல புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!


இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.

இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும்-அறவழிப்போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர்,மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.

Thursday, April 05, 2012

டைம் டாப் 100 மனிதர்கள்' பட்டியலில் இடம் பெற மோடி மோசடி

அகமதாபாத்: டைம் இதழ் தற்போது நடத்தி வரும் உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி வேலைகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான்.

மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 38,586 ஆகும்.

Monday, April 02, 2012

பன்றி காய்ச்சல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன

சில காலமாக ஓய்ந்திருந்த பன்றி காய்ச்சல் என்று நோய் இன்று மீண்டும் மீடியாக்கள் மூலம் மக்களிடம் பீதியை கிளப்பி வருகிறார்கள் அப்படி பரப்புவது அனைத்தும் உண்மையா மேலும் இந்த காய்ச்சலுக்கு இஸ்லாம் கூறும் விளக்கம் என்ன அதை எப்படி அணுகுவது என்பதை அறிய இந்த வீடியோவை காணவும்.



Sunday, April 01, 2012

மோடியில் மோசமான நிர்வாகம்

அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y