அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label இயக்கம். Show all posts
Showing posts with label இயக்கம். Show all posts

Sunday, September 14, 2014

மாபெரும் பொதுக்கூட்டம் மண்ணடியில் நாள்:21.09.2014


Sunday, August 24, 2014

திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம்...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 23-08-2014 சனிக்கிழமை அன்று மாபெரும் சூனிய ஒழிப்பு மார்க்க விளக்க‌ பொதுக்கூட்டம் நடைபெற்றது...

சூனியம் உண்டா மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் 23.08.2014

Monday, June 16, 2014

நாளை 17.06.2014 இலங்கைத் தூதரகம் முற்றுகை...

இலங்கைத் தூதரகம் முற்றுகை....

இலங்கையில் பொதுபலசேனா எனும் இன வெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்து இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (17.06.2014) 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.

http://www.tntj.net/256568.html

Monday, February 24, 2014

ஆட்சியாளர்களை அதிர வாய்த்த அதிசய பொதுக்குழு

15வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.

Sunday, February 23, 2014

அதிமுக அரசுக்கு ஒருவாரம் அவகாசம் பரபரப்பாக நடந்த 15வது பொதுக்குழு!


மாநிலத்தலைவரின் உரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லை யென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலை பார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

Tuesday, February 18, 2014

தவ்ஹீத் ஜாமத்தின் 15வது பொதுக்குழு ஈரோட்டில் இன்ஷா அல்லாஹ்!


Saturday, April 06, 2013

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி!


விருதுநகர் மாவட்டம், விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினராகிய ஐ.ஷேக் அப்துல்லாஹ் என்பவர் அங்குள்ள செந்தில் குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். (மேலுள்ள புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்) தனது சொந்த வேலை காரணமாக 10.03.13 அன்று விருதுநகரிலிருந்து சுமார் 25கி.மீட்டர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார். அன்று இரவு 11 மணிக்கு தனது வேலையை முடித்து விருதுநகருக்கு திரும்பும் போது, சங்கரலிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இரண்டு பவுன் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டெடுத்து அதன் உரிமையாளர் யாரேனும் நகையைத் தேடி அங்கு வருகிறார்களா என அரை மணி நேரம் வரை காத்திருந்து, யாரும் தேடி வராததால் விருதுநகர் திரும்பிவிட்டார். மறுநாள் அது தங்க நகைதானா என்பதை ஆய்வு செய்து தங்க நகைதான் என்பதையும் அதன் எடை 13கிராமும் 820 மில்லியும் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

Saturday, March 02, 2013

மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற குவைத் பொது கூட்ட நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக குவைத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய சதி என்ற தலைப்பில் கெய்தான் பகுதியில் உள்ள கார்மெல் ஸ்கூலில் 01.03.2013 அன்று வெள்ளிகிழமை மாலை 6.00 மனிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் மாநில தலைவர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது நாம் ஏற்பாடு செய்த ஸ்கூலின் கொள்ளளவு சுமார் 600 முதல் 700 பேர் வரை அமரலாம் நெருக்கி அமர்ந்தால் 1000 பேர் அமரலாம் என கனக்குபோட்டு நாம் ஸ்கூல் நிர்வாகத்திடம் 700 பேர் கலந்து கொள்வார்கள் என அனுமதி வாங்கியிருந்தோம்

Friday, March 01, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் வெப் டிவி மார்ச் 1 இன்று இரவு 08.30 முதல் முதல்












Sunday, January 13, 2013

சென்னையில் தவ்ஹீத் ஜமாத்திற்கு அலுவலகம் கட்ட வாரி வழங்குங்கள்!


தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (அல் குர்ஆன் .2:261)

Thursday, January 10, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேவை மையங்களுக்கு வாரி வழங்குங்கள் !




Thursday, October 25, 2012

ஜித்தா மண்டலத்தின் தியாகத்தின் திருநாள் வாழ்த்துக்கள் !



Saturday, October 20, 2012

வெளிவந்துவிட்டது யூடுபுக்கு மாற்றாக!


வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம்அல்ஹம்துலில்லாஹ்
இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும்வரை காத்திருக்க தேவையில்லை.இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube  ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம்.


பார்த்து விட்டுவீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்
அன்லைன்பிஜே
-
வெப்மாஸ்டர்

Thursday, September 06, 2012

2012 வெளிநாடுகளில் திரட்டி தாயகத்தில் விநியோகித்த ஃபித்ரா விபரம் !


Wednesday, September 05, 2012

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 4


1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும், வீரியத்தையும் பார்க்க முடிந்தது. அங்கு தான் ஆலிம்களின் வெறித் தனத்தையும் காண முடிந்தது. காரணம் தமிழகத்திலேயே அதிகமான அரபி மதரஸாக்கள் தஞ்சையில் தான் நிறுவப்பட்டிருந்தன.
சோழ நாடு சோறுடைத்து என்ற தஞ்சையின் மண் வளத்தைப் போலவே அங்கு வாழும் முஸ்லிம்களின் மன வளமும் அமைந்திருந்தது. அத்துடன் அந்த மக்களின் சிங்கப்பூர், மலேஷிய பயணங்கள் அவர்களது செல்வச் செழிப்பை மேலும் வளமாக்கின.
அந்த வளத்திற்குத் தக்க, தான தர்மங்கள், விருந்தோம்பல்கள் இன்று வரை அந்த மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் அடையாளச் சின்னங்கள் தான் இந்த அரபி மதரஸாக்கள்.
நீடூர், கிளியனூர், அரங்கக்குடி, அத்திக்கடை, அதிராம்பட்டிணம், கூத்தாநல்லூர், பொதக்குடி, சங்கரன்பந்தல் போன்ற பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தின் ஊர்களில் அரபி மதரஸாக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆலிம்களின் சங்கமமாக தஞ்சை அமைந்து விட்டது.
இதனால் அங்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பலைகள் மிக வேகமாகக் கிளம்பின. இந்த மதரஸாக்களில் முக்கியமானதாக விளங்கியது நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா என்ற மதரஸாவாகும்.
எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா என்பவர் இந்த மதரஸாவின் அன்றைய முதல்வராக இருந்தார். அத்துடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்தார்.

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 3


8.5.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, “மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன்” என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.

விவாதங்கள் ஓய்வதில்லை தொடர் : 2


 03.07.05 அன்று சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் வழக்கம் போல் ஸைபுத்தீன் ரஷாதி நரகல் நடையில் பேசத் துவங்கியதும், இது குறித்து பி.ஜே.யின் முன்னிலையில் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்ற கருத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு துண்டுச் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்புகின்றார்கள்.
வழக்கம் போல் தயார் என்று அறிவித்து விட்டு பெங்களூர் பறந்து விட்டார் ஸைபுத்தீன் ரஷாதி.
இந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவைத் தொடர்பு கொண்டு விவாதத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த சிதம்பரம் ஜமாஅத்துல் உலமா, ஸைபுத்தீன் ரஷாதி மேடையில் சொல்லும் வார்த்தைகளை எழுத்து வடிவில் தந்தது.

விவாதங்கள் ஓய்வதில்லை…… தொடர் 1


எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது.
தாயத்து, தகடுகள், கப்ரு வணக்கங்கள், தர்ஹாக்கள், அவற்றில் நடக்கும் அனாச்சாரங்கள் இவை அனைத்தும் நம்மை வெகுவாகப் பாதித்தன. இவை அந்த நெருப்புப் பொறியைப் பற்றி, கனன்று எரிய வைத்தன. அதன் விளைவாக எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய அருட்கொடை தான் ஏகத்துவ சிந்தனை.
இது எந்தத் தனி மனிதனாலும் நமக்குக் கிடைத்ததல்ல! இறைவனாக நமக்குத் தந்த சிந்தனை!
அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை மக்களிடம் முன் வைத்தோம். அவ்வாறு முன் வைத்த மாத்திரத்திலேயே எதிர்ப்புகள் நம்மை நோக்கி ஏவுகணைகளாகப் பாய்ந்தன. இந்த ஏவுகணைகள் மக்களிடமிருந்து வரவில்லை; உலமாக்களிடமிருந்து தான் வந்தன.
இந்த ஏவுகணைகளை எதிர் கொள்வதற்கு நாம் கையில் எடுத்தது, எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த வாதம் என்ற ஆயுதம்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y