வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா?
என்ற கேள்விக்குறியோடு
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி
செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த
பரபரப்பு செய்தி.
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று
சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா?
அவ்வாறு எதிர்காலத்தில்
நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான்
இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.