அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, June 05, 2012

தடம்புரண்ட தவ்ஹீத் ஆலிம்!


வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். அல் குர்ஆன் 3:144

ஹாமித்பக்ரி ஏகத்துவவாதிகள் அவ்வளவு சீக்கிரம் இவரை மறந்திருக்கமாட்டார்கள் தவ்ஹீத்வாதிகளுக் கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் ஒரு காலத்தில் தமிழகமெங்கும் தவ்ஹீத் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் இன்று இவரின் நிலையை பார்த்தால் நம்மை அறியாமல் நமது உள்ளத்தில் சிறு வலி ஏற்படுகிறது காரணம் ஆரம்ப கால கட்டத்தில் இந்த தவ்ஹீதுக்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது ஆனால் இன்று அப்படி பாடுப்பட்டு அடிபட்டு உதைபட்டு வளர்த்த தவ்ஹீதை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார் இந்த முன்னால் தவ்ஹீத்வாதி!

ஹதீஸ்களை தேடி எடுக்கும் லாவகம் என்ன அவரின் நினைவாற்றல் என்ன எந்த பிரச்சினைக்கும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மிகவும் எளிமையாக பதில் அளிக்கும் திறமை என்ன அணைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு மாநில தலைவராக இருந்தவர் இப்படி பல சிறப்புகள் பெற்ற ஒருவர் இன்று கப்ர் வணங்கிகளுக்கும் பித்அத்வாதிகளுக்கும் மத்ஹப் வாதிகளுக்கும் பிரசார பீரங்கியாக மாறிவிட்டார்.


தங்களின் சுய வெருப்பிர்க்காக மனோ இச்சையை பின்பற்றி யாரையோ எதிர்க்க வேண்டும் எதற்காகவோஎதிர்க்க வேண்டும் என்பதற்காக இன்று ஏகத்துவத்தை விட்டே வெகுதூரம் சென்று தனக்கு தானே கேடு விளைவித்துக்கொண்டு நரகத்தின் விளும்பிர்க்கு சென்று விட்டார்  நமக்கெல்லாம் ஏகத்துவத்தை எடுத்துச்சொன்ன ஒருவர் இன்று இனைவைப்பர்களின் கூடாரம்தான் சொர்க்கம் என்று சென்றுவிட்டார் அல்லாஹ் தன் திருமையில் கூறுகின்றானே

அத்தவ்பா அத்யாயத்தில் 32 வது வசனத்தில் இவ்வாறு சொல்லிக்காட்டுகின்றான்.
அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவர் யாருமில்லை. அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவான்



இந்த ஒரு ஹாமித்பக்ரி தவ்ஹீதை விட்டு சென்று விட்டதால் தமிழ்நாட்டில் தவ்ஹீத் வளர்ச்சிக்கு எந்த பின்னைடைவும் ஏற்ப்படவில்லை 

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.அல் குர்ஆன்7:186 
இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கிறான் அவன் பாதுகாப்பான் அவன் இந்த ஏகத்துவத்தை மேலோங்க செய்வான் தடுப்பார்கள் தடுத்தாலும் அல்லாஹ் இந்த ஏகத்துவத்தை பட்டொளி வீச பறக்கசெய்வான்

சரி இப்பொழுது தலைப்பிற்கு வருவோம் இங்கே இணைத்துள்ள வீடியோவில் முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானிஏகத்துவத்தை மட்டுமே சொன்னார் என்று தனது உரையில் கூறுகிறார் இங்கே நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானி ஏகத்துவத்தை மட்டுமே சொன்னார் என்றே வைத்துக்கொள்வோம் பள்ளிவாசல்களில் ரபீவுல் ஆகிர் மாதத்தில் இருட்டு திக்ர் என்றழைக்கப்படும் வழிகெட்ட பாடலை முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானி பெயராலேயே இன்று தமிழகத்தில் சிலஊர்களில் குறிப்பாக காயல்பட்டினம் போன்ற ஊர்களில்  பள்ளிவாசல்களில் பாடப்பட்டு வருகிறதே அதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா அப்படி தங்கள் ஏற்றுக்கொண்டால் அது ஷிர்க் ஆகாதா? 

எவர் ஒருவர் தனிமையில் அமர்தவராகவும் உறக்கம் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடன் என் திருநாமத்தை ஆயிரம் முறை அழைப்பாரோ அவ்வாறு அவர் என்னை அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன் என்று யாகுத்பா நூலில் எழுதப்பட்டுள்ளது அதையும் நீங்கள் மக்களிடம் பரப்புவீர்களா?

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.அல் குர்ஆன்7:197

பத்து வருடங்களுக்கு முன்பு இதே நீங்கள்தானே முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானியை அழைப்பதுவழிகேடு என்றீர்கள் அன்று நீங்கள் சொன்னது சரியா அல்லது இப்பொழுது பரேலவிகளுக்கு பல்லக்கு தூக்குவதற்காக தர்கா கூட்டு துவா மௌலீத் இருட்டு திக்ர் என்று சென்று விட்டீர்களே அப்படியானால் முன்பு நீங்கள் தவறான கொள்கையில் இருந்தீர்களா?

உச்சசுதியில் அரபியை மேடையில் முழங்கினால் அசத்தியம் சத்தியம் ஆகிவிடுமா தமிழகத்தில் இன்று ஏகத்துவம் கொடிகட்டி பறக்கிறதே அதற்கு காரணம் உச்சசுதியில் அரபியை மேடையில் முழங்குவதினாலா அல்லது அல்லாஹ்வின் கலாமையும் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் போதனைகளையும் கூட்டாமல் குறைக்காமல் மக்களிடம் எடுத்து சொல்வதினாலா?

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.அல் குர்ஆன் 5:54

அல்லாஹ் நாம் அனைவரையும் இறுதிவரை இந்த ஏகத்துவதிலேயே வாழவைத்து அதிலேயே மரணிக்க அருள்புரிய வேண்டும் 


ஆக்கம்:முஹம்மது உபைஸ் 

1 comment:

  1. இவரின் செயல்பாடு மிகவும் வருத்திற்கு உரியது

    ReplyDelete

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y