அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, April 12, 2012

குஜராத் கலவரத்தில் 23 பேர் எரித்து கொன்ற வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆனந்த் மாவட்ட சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் உ.பி. மாநிலம் அயோத்திக்கு கரசேவைக்கு சென்று திரும்பிய ராமபக்தர்கள் 56 பேர் உடல் கருகி பலியாயினர். இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மதக் கலவரம் மூண்டது.
ஆனந்த் மாவட்டம் ஒடே டவுனில் சிறுபான்மையினர் வசிக்கும் பிரவாலி பகோல் பகுதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் சுற்றிவளைத்தது. அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் அடைக்கலம் புகுந்த வீடு ஒன்றுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த படுகொலை தொடர்பாக புலன் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

இந்தக் குழு விசாரணை நடத்தி 46 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் 158 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 160 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. 23 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

நன்றி : தினகரன் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y