அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, June 30, 2012

"லண்டன் பள்ளியில் குட்டைப் பாவாடைக்குத் தடை "


லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவர்களின் 
குட்டைப் பாவாடை சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி 
உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ ,
மாணவியர் படிக்கின்றனர் .

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது :

எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது.
முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டாம் .


ஆனால் மாணவியர் தொடை தெரியும் அளவுக்கு பாவாடைகளை 
அணிந்து வருவது அதிகப்படியான கவர்ச்சியாக உள்ளது .இதனால் 
தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் 
தற்போது பாவாடையை ரத்து செய்துள்ளோம் .

அதக்கு பதில் பேன்ட் வடிவ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மீண்டும் பாவாடை அணிந்து வரும் மாணவியருக்கு தண்டனையாக 
பழைய ஆடைகள் அணிவிக்கப்படும் அல்லது அவரின் பெற்றோரை 
அழைத்து வர வேண்டும்.

புதிய சீருடை அணிந்து வரும் வரை அவர்களை வகுப்பில் அனுமதிக்கப் 
போவதில்லை . தற்போதைய சீருடை மூலம் மாணவியரின் பாதுகாப்பு 
உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

பெண்களின் கவர்ச்சியான ஆடைகளினால் ஏற்படும் விபரீத 
விளைவுகளை மேற்கத்திய நாடுகள் இப்போதுதான் மெல்ல 
மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர்.

பெண்களுக்கு ஆடை சுதந்திரம் அளித்தால் பலபேருடைய 
பல சுதந்திரங்கள் பறிபோவதை கண்கூடாகக் கண்ட பிறகுதான் 
இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன .

அதிலும் , '' தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சீருடை 
மூலம் மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ''
என்று அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கூறியிருப்பது,
இஸ்லாத்தின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது .

மேற்க்கத்திய நாடுகள் இத்தகைய கேடுகெட்ட கலாச்சாரத்தை விட்டு 
திரும்பி வரும் இவ்வேளையில் நமது நாடு அனைத்து மாணவிகளுக்கும் 
குட்டைப்பாவாடையை சீருடையாக்கி அணியச் சொல்வது வேதனைக்குரிய 
விஷயம் .சிந்திப்பார்களா ?
தகவல் :அம்பத்தூரிலிருந்து 
ஹுசைன் அலி 
நன்றி:உணர்வு 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y