அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 14, 2014

TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: TNTJவின் நிலைபாடு சரி என நிரூபித்து, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர்!

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆணை பிறப்பித்தது லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற சிறைநிரப்பும் போராட்டத்திற்கு மதிப்பளித்து, முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


அதை தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க ஆணையத்தின் பரிந்துரை வந்தவுடன் ஆவண செய்யப்படும் என்று முழங்கி வருகின்றார். இதுவரை பிரச்சாரம் செய்துள்ள காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மீனம்பாக்கம், நாகர்கோவில் என அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேசியுள்ளார்.

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை அதிகப்படுத்தித்தர நடவடிக்கை எடுத்த காரணத்தால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் அதிமுகவிற்கு வாக்களிக்க போகின்றார்கள். இதனால் கதி கலங்கிய கருணாநிதி, முஸ்லிம் வாக்குகளை தக்க வைக்க ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார்.

தனது அணியில் இரண்டு லட்டர் பேட் முஸ்லிம் கட்சிகள் இருந்த போதிலும் அந்த மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்க முடியாது என்பதை உணர்ந்த அவர், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தர ஜெயலலிதா ஆணையத்திற்கு பரிந்துரை செய்யச் சொல்லியிருப்பது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை என்றும், திமுக தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது என்றும் அவர் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 09.03.2014 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பதிலளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

முஸ்லிம்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தனக்குத்தானே கேள்வி கேட்டு, தானே பதில் சொல்லும் வகையில் கருணாநிதி வெளியிட்ட அந்த அறிக்கையில் ".......... வழக்கம் போல முஸ்லிம்களை ஏமாற்ற பார்க்கிறார். முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு அளித்ததே திமுக ஆட்சி தான். அதை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறி சமாளிக்கப் பார்க்கிறார்..." என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்த விஷயத்தில் இப்படித்தான் கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006ல் தெரிவித்த முஸ்லிம்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையை தான் நான் சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி விட்டு பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அதுபோன்று ஏமாற்றியே பழக்கப்பட்ட கருணாநிதி, நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது திமுக தான் என்று கருணாநிதி கூறி இருக்கிறார். 2006ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசுதான்.

இதுதான் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டிற்கு அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது திமுக தான் என்று கூறுவதுதான் ஏமாற்று வேலை.

உச்சநீதிமன்ற தீர்வு:

2006ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை கருணாநிதி இயற்ற வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? ஏனெனில் சட்டப்படி அவ்வாறுதான் செய்ய முடியும்.

மண்டல கமிஷன் வழக்கில் 1990 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இடஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை நடைமுறை படுத்த முடியும் என்று தெளிவாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. அதே அடிப்படையில் தான் தற்போதும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றுவது, வஞ்சிப்பது, துரோகம் இழைப்பது என்பதெல்லாம் கருணாநிதிக்குத்தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை. கருணாநிதியின் பேச்சை இன்னும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

ஜெயலலிதா பேசிய வீடியோ கீழே:



மார்ச் 14 - 20, 2014 பதிப்பு
உரிமை: 18 குரல்: 29

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y