அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 14, 2014

தேர்தலுக்கு பின் ஜெயலலிதா, மோடியை ஆதரித்தால் என்னவாகும்?

இது விரிவாக விளக்க வேண்டிய ஒன்றாகும்.

பாஜக ஆகாத கட்சி என்பதிலும், அது ஒழிக்கப்பட வேண்டிய கட்சி என்பதிலும் முஸ்லிம்களில் ஒருவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் தவிர எல்லாக் கட்சிகளும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் தான்.

Monday, March 10, 2014

அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு ஏன்

அதிமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறது!
இதுகுறித்து பல்வேறு கேள்விகள் முகநூல் வழியாகவும் மின்னஞ்சல்மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் பல்வேறு கேள்விகள் கேட்க்கப்பட்டு பறப்பட்டு வருகிறது அதற்க்கான முழுமையான பதிலை இங்கே தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் தருகிறார்கள் பாருங்கள் பார்க்க தூண்டுங்கள்!

by yanbutntj

Saturday, March 08, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்? 

மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!

இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.14 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!

இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?

ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?

அதிமுகவிடம் தவ்ஹீத் ஜமாஅத் ஏமார்ந்துவிட்டதா?

இதுபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான விளக்கம். 

குறிப்பு : மிகவிரைவில்... தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவிற்கு ஆதரவளித்தது ஏன்?

மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் விளக்கம்!

இன்ஷா அல்லாஹ்
வெளிநாடு வாழ் மக்களுக்காக
இன்று 08.03.14 இரவு 1௦.30 மணிக்கும், நாளை நள்ளிரவு 10.30 மணிக்கும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிறு 09.03.14 காலை 10.30க்கு தமிழன் டிவியில் காணத்தவறாதீர்கள்!

இடஒதுக்கீடு தராமல் யாருக்கும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது அதிமுகவை ஆதரித்தது ஏன்?

ஆணையத்தை அதிமுக அமைத்தது கண்துடைப்பு வேலையா?

Friday, March 07, 2014

பணத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள்!


இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது, பாஜகவின் அலை வீசுகிறது என்று ஊடகங்கள் புளுகுப் பிரச்சாரம் செய்த வேளையில், மிசோரம் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. சத்தீஸ்கரிலும் கூட மயிரிழையில் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

ஆனாலும் ஊடகங்கள் பிரச்சாரத்தை விட்டொழிக்கவில்லை. இந்நிலையில் நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி சேனல் கருத்து கணிப்பு நிறுவனங்களின் செயல்பாட்டை அறிய "ஸ்டிங் ஆப்ரேஷன்" ஒன்றை நடத்தியது.

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேரலையில்!

சென்னை நேதாஜி நகரில் வரும் ஞாயிறு 09.03.2014 அன்று மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஆன்லைன்பிஜெயில் நேரடி ஒளிபரப்பில் காணலாம் இன்ஷா அல்லாஹ்!

Monday, February 24, 2014

ஆட்சியாளர்களை அதிர வாய்த்த அதிசய பொதுக்குழு

15வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.

Sunday, February 23, 2014

அதிமுக அரசுக்கு ஒருவாரம் அவகாசம் பரபரப்பாக நடந்த 15வது பொதுக்குழு!


மாநிலத்தலைவரின் உரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்:

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. உயர்த்தி தரவில்லை யென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலை பார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y