அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 07, 2014

பணத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள்!


இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுகிறது, பாஜகவின் அலை வீசுகிறது என்று ஊடகங்கள் புளுகுப் பிரச்சாரம் செய்த வேளையில், மிசோரம் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. சத்தீஸ்கரிலும் கூட மயிரிழையில் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

ஆனாலும் ஊடகங்கள் பிரச்சாரத்தை விட்டொழிக்கவில்லை. இந்நிலையில் நியூஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்தி தொலைக்காட்சி சேனல் கருத்து கணிப்பு நிறுவனங்களின் செயல்பாட்டை அறிய "ஸ்டிங் ஆப்ரேஷன்" ஒன்றை நடத்தியது.


இதில் சி-ஓட்டர் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் 3 சதவீதத்திலிருந்து 5சதவீதம் வரை புள்ளி விபர முடிவை மாற்றி, குறிப்பிட்ட கட்சிக்கு கூடுதல் இடம் கிடைப்பதுபோல காட்டத் தயார் என ஒப்புக்கொண்டது.

இந்தியா டுடே போன்ற பிரபல ஊடகங்களும் கூட இந்த சி-ஓட்டர் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுத் தான் கருத்துக் கணிப்பு விபரங்களை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் நவ் நிறுவனமும், சி-ஓட்டர் நிறுவனத்திடமும் தான் கருத்து கணிப்பு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்து வருகிறது.
சி-ஓட்டரின் அண்டர் கிரவுண்ட் வேலை வெளியானவுடன்
கருத்துக் கணிப்புக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக
இந்தியா டுடே அறிவித்து விட்டது.

"சி-ஓட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும்"
என்று டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஏ.கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இப்லாஸ் என்ற கருத்து கணிப்பு நிறுவனமும் வசதிக்கேற்ப முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தயார் என ஒப்புதல் தந்துள்ளது. மிட்ஸ்ட்ரீம் மார்கெட்டிங் ஆராய்ச்சி நிறுவனமும் கருத்துக் கணிப்பு முடிவுகளை மாற்றி கொள்ளத் தயார் என சொல்லியுள்ளது.

இப்படி 11 கருத்து கணிப்பு நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட ஒப்புக்கொண்டன.

கருத்து கணிப்பு நிறுவனங்கள் சம்பந்தமான இந்தத் தில்லுமுல்லுகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்ட நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் வினோத் காப்ரி, தனது தொலைக்காட்சியிலும் இதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானி தலைமையில் ஆட்சி அமைந்துவிடும் என்றுதான் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாயின. இந்த போலி கருத்துக் கணிப்பு முடிவுகளை எல்லா ஊடகங்களும் மாறி மாறி வாந்தி எடுத்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது, மொத்தம் 364 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 22.16 சதவீத வாக்குகளைப் பெற்று வெறும் 138 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

2009ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பாஜக இன்னும் தேய்ந்து போய் வெறும் 18.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 118 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று கருத்து கணிப்பு நிறுவனங்களும்,ஊடகங்களும் சொல்வது வழக்கமான ஒன்றுதான். இந்த புளுகுப் பிரச்சாரத்தை இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார்கள். இதைத்தான் நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.

கருத்து கணிப்பு முடிவுகளும், ஊடகங்களும் பாஜகவுக்கு
ஆதரவாக எவ்வளவுதான் வேலை செய்தாலும், மக்கள் இதில்
மதி மயங்குவதே இல்லை. அவர்கள் கருத்துக் கணிப்பு மற்றும் ஊடகச் செய்திகளுக்கு எதிராகத் தான் எப்போதும் வாக்களித்து வருகிறார்கள். அதனால் இந்தியாவில் மோடியின் அலை வீசுகிறது, பாஜகதான் அடுத்த ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.

இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் உள்ளன. தற்போது பிரிக்கப்பட்டுள்ள தெலுங்கானவையும் சேர்த்தால் 29 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள இந்த 29 மாநிலங்களில் 19 மாநிலங்களிலிருந்து ஒரு எம்பி கூட பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவ்வளவு பலவீனமான கட்சிதான் பாஜக.

இதை தெரிந்து கொள்ளாமல் கருத்துக்கணிப்பு நிறுவனங்களும், ஊடகங்களும் பாஜகவுக்கு ஆதரவாகப் புரளியைக் கிளப்பி விட்டால் கடைசியில் அவமானப்பட போவது இவர்களாகத்தான் இருக்க முடியும்.

பாஜக கொடுக்கும் பணத்திற்காக இந்த இழிவை இவர்கள் சுமக்கத்தான் வேண்டுமா என்பதை அவரவர் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

மார்ச் 7 - 13, 2014 பதிப்பு

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y