அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, April 10, 2013

கூடங்குளம் அணுஉலை பணிகள் தாமதம் ஏன் ?

கூடங்குளம் அணுஉலை மூலம் மின்சாரம் கூடங்குளம் அணுஉலை மூலம் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்தின் மின் தட்டுப்பாடு விரைவில் ஓரளவு சரியாகிவிடும் என்று நீங்கள் எழுதி ஒரு வருடம் கடந்துவிட்டது. இன்னமும் மின் உற்பத்தி தொடங்கவில்லையே என்ன காரணம்?
மீரான் சேட், கோவை



எல்லாப் பணிகளும் முடிந்துவிட்டன. யுரேனியம் நிரப்பி மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமே மீதமுள்ளது என்று நீதிமன்றத்தில் வாதாடி தடையில்லாமல் செயல்படலாம் என்ற உத்தரவை மத்திய அரசு பெற்றது. மாநில அரசும் மின் தேவையைக் கவனத்தில் கொண்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலையை மாற்றிக்கொண்டு முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கியது. இன்னும் ஒருவாரத்தில் மின்சாரம் உற்பத்தியாகிவிடும் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால் 60 வாரங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கூடங்குளத்தில் மின் உற்பத்தி இன்னும் தொடங்காமல் இருப்பதற்கு அரசியல் காரணம் இருப்பதாகவே நாம் கருதுகிறோம். திமுக, ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தொடர் மின்வெட்டுதான் பிரதானமான காரணம். அன்றாடம் மக்கள் பட்ட துன்பம் வாக்குச்சீட்டு மூலம் பதிலடி கொடுக்கத்தூண்டியது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் முன்பு இருந்ததைவிட மின்வெட்டு அதிகமானதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.

திமுக மீது இருந்த அதே அளவு கோபம் ஏன் அதை விட அதிக கோபம் அதிமுக மீதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. காற்றாலை கை கொடுக்கும்போது சில மாதங்கள் மின் வெட்டு குறைந்தாலும் மற்ற மாதங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டால் இந்த நிலைமை மாறிவிடும் மக்களின் கோபம் குறைந்து விடும் என்பதால் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை தள்ளிப்போட்டு வந்தது.

பாராளுமன்றத் தேர்தல் வரை இதே மின்வெட்டு நீடித்தால் 39 தொகுதிகளிலும் நாமே வெற்றி பெறலாம் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி மத்திய அரசு வேண்டுமென்றேதான் மின் உற்பத்தியை தாமதப்படுத்தி வந்தது.

மத்திய அரசிலிருந்து வெளியேறியதால் எப்படியும் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று பதட்டமடைந்த கருணாநிதி போராட்டக்காரர்களும் நமது மக்கள்தான் அவர்களுடன் சமாதானம் பேச வேண்டும் என்று அந்தர் பல்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது மத்திய அரசு மின் உற்பத்தியைத் தொடங்கினாலும் மாநில அரசு நமது மக்களாகிய போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

மத்திய அரசில் இருந்து விலகியதன் மூலம் திமுகவின் சதி வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் தாமதமில்லாமல் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் பேரம் பேசுவதற்காக மேலும் தாமதப்படுத்தும் கயமைத்தனத்தை காங்கிரஸ் செய்யுமானால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான் மின் உற்பத்தி தொடங்கும். அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸும், திமுகவும் மக்களைப் பழிவாங்கி வருகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y