அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, September 04, 2012

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்கு வேட்டுவைக்கும் தமிழக கட்சிகள்!

தொடர்ந்து தமிழக கட்சிகள் சிங்களவர்களை குறிவைத்து தாக்குவதால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்ப்படட்டுள்ளது.

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டாதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள  அணைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை அரசுக்கு எதிராகவும் சிங்களர்களுக்கும் எதிராக தொடர்ந்து தமிழக மக்களை தூண்டி விட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்ற வருடம் ராஜபக்சேயின் மைத்துனர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்த அவரை அவர்  தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தமிழக அரசியல் காட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி அவரை நாட்டை விட்டே துரத்தி  அடித்தனர்.
அதேபோன்று ஒரு கல்லூரி விழாவில் பங்கெடுக்க வந்த இலங்கை பெண் அமைச்சரும் இலங்கைக்கு திரும்ப அனுப்பபட்டார் மேலும் இலங்கையை சேர்ந்த யாரும் தமிழகம் வரக்கூடாது என்று சொல்லி வந்த தமிழக அரசியல் கட்சிகள் இப்பொழுது இந்தியாவில் எந்தப்பகுதிக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று நடக்காத ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர் இலங்கை சேர்ந்த யாரும் இந்தியா வரக்கூடாது அதிலும் அரசியல் சார்ந்தவர்கள் கண்டிப்பாக தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் 

 அரசியல் சார்ந்தவர்கள் என்றால் சரியென ஒரு வாதத்திற்க்கு ஒப்புக்கொண்டாலும் இப்போது அவற்றையெல்லாம் தாண்டி அப்பாவி பொதுமக்களும் வரக்கூடாது மீறி வந்தால் அவர்களையும் தாக்குவோம் என்று சொல்லுவது மிக கேவலம் எந்த அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாக சொல்லி இலங்கை மக்களை வெறுக்கும் தமிழக கட்சிகள் அதேபோன்ற செயலை இவர்கள் செய்வது மட்டும் எவ்வாறு சரியாகும் என்று இவர்கள் யோசிக்க மறந்து விடுகின்றனர்.

இன்று இலங்கையிலிருந்து பதினைந்து நாள் சுற்றுலா வந்த 150 மேற்ப்பட்ட இலங்கை பயணிகளை தமிழக கட்சிகள் துரத்தி துரத்தி தாக்கியதுதான் வேதனை அப்படி வந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்களும் அடங்குவர் இந்த சுற்றுலா பயணிகள் வந்த பேருந்தை சுற்றி வளைத்து தாக்கியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டார் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் இது நிச்சயம் மனிதநேயமற்ற செயல் வன்மையாக கண்டிக்க கூடிய செயல்.

பதிக்கப்பட்ட பயணிகள்  தொலைக்காட்சிக்கு கண்ணீருடன் பேட்டி அளித்தனர் அப்பொழுது அவர்கள் கூறினார்கள் தாங்கள் என்ன செய்தோம் எங்களை ஏன் இப்படி கொடூரமாக தாக்க வேண்டும் என்ற கேள்வியையும் வைத்தனர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் வாயடைத்து நின்றனர் செய்தியாளர்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் இலங்கையிலும் சிங்களர்கள் அங்கே உள்ள தமிழர்களை தாக்க துவங்குவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை அப்படி அவர்களும் சட்டத்தை கையில் எடுத்தால் அங்கே பல்வேறு பகுதிகளில் பரவலாக வாழும் தமிழகத்தை சேர்ந்தவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று வைகோ பழ.நெடுமாறன் சீமான் விடுதலைராசேந்திரன் போன்றோர் எண்ணிப் பார்க்கவேண்டும்.

குறிப்பாக  கொழும்பு போன்ற மிகப்பெரிய ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள் வேலை பார்கிறார்கள் வியாபாரம் செய்கிறார்கள் கடைகள் வைத்துள்ளார்கள் சிங்களவர்கள் திரும்ப தாக்க ஆரம்பித்தால் அவர்களின் கதி என்ன என்று ஏன் இந்த அறிவிலிகள் யோசிக்க மறுக்கின்றார்கள் அவர்களும் தமிழர்கள் தானே அப்படி என்றால் இவர்களுக்கு உண்மையில் தமிழர்கள் மேல் அக்கறை இல்லை என்றே என்ன தோன்றுகிறது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மலிவான விளம்பரம் தேட மட்டுமே முயல்கின்றார்கள் என்பதே உண்மை.

அதேபோன்று  தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிகம் வாழ்கிறார்கள் இதில் அதிகமானோர் திருச்சி விமான நிலையம் மூலம் தாயகம் செல்லவே விரும்புகின்றனர் அப்படி திருச்சி விமான நிலையம் செல்ல விரும்புவர்கள் இலங்கை விமானத்தைத்தான் நாடுகின்றார்கள் இலங்கை விமானம் அதிகம் இணைப்பு விமானமாக உள்ளது அதாவது ஜித்தாவிலிருந்து கிளம்பினால் நேராக திருச்சி சென்றடைவதில்லை கொழும்பு சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலமே இந்தியா அனுப்பி வைக்கப்படுகின்றனர் அப்படி வருபவர்கள் சில மணிநேரங்கள் கொழும்பு விமான நிலையத்திலேயே தங்கியிருக்க நேருகிறது அப்படி அவர்கள் காத்திருக்கும் போது பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த தமிழக அரசியல் கட்சிகள்தான் இவ்வாறென்றால் தமிழக முஸ்லிம் கட்சிகளும் இதுபோன்றே அரசியல் செய்கின்றனர் சமுதாயத்தை முன்னேற்றப்போகின்றோம் என்று மூணு சீட்டை பெற்றுக்கொண்டு மானம் இழந்த கட்சிகள் கூட விதிவிலக்கில்லை என்றே சொல்லாம் மற்றவர்கள் எப்படியோ ஒரு முஸ்லிம் இப்படி நடக்கலாமா இனம் மொழி என்று வெறி கொள்ளாமா இஸ்லாம் இதனை அனுமதிக்கின்றதா என்பதை முஸ்லிம் கட்சி நடத்துபவர்கள் யோசிக்க வேண்டும் 

இந்த சிறிய கட்சிகள் எல்லாம் இவ்வாறு அத்துமீறி நடப்பதற்கு தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தான் காரணம் என்றால் அது மிகையில்லை குறிப்பாக தமிழக முதல்வர் தொடர்ந்து இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டே இருப்பதுதான் காரணம் இனிமேலாவது ஆள்வோர்கள் தாங்கள் செய்வது சரிதானா என்று எண்ணிபார்த்து நல்ல முடிவை எடுக்கவேண்டும் அதுதான் அண்டை நாட்டுடனான நடப்பை வளர்க்க உதவும் அதுவே இந்திய இறையாண்மையை காக்க உதவும்.

முஹம்மது உபைஸ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y