அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, June 21, 2012

ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள்? ஏமாளிகள் நாங்கள் இல்லை!


முஸ்லிம்களை வஞ்சிப்பதற்கு மோடியோ அத்வானியோ தேவையில்லை என்கிற அளவிற்கு தமிழக முஸ்லிம் கட்சிகளின் சமுதாய துரோகத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது சென்ற திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகாரிகள் சரியாக வழங்காமல் வஞ்சித்து வந்தனர் அதை பல்வேறு வழிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அப்போதைய ஆளும் அரசுக்கு கொண்டு சென்றது .

அதே நேரத்தில் சமுதாயத்தை முன்னேற்ற போகிறோம் என்று கியம்பிய ஒரு கூட்டம் முஸ்லிம்களுக்கு அரசு அதிகாரிகள் துரோகம் இளைத்தது சரிதான் என்கிற அளவிற்கு முஸ்லிம்களின் முதுகில் குத்தினார்கள் ஆளும் அரசுக்கு சாதகமாக ஜால்ரா தட்டினார்கள் அப்படிப்பட்ட இவர்களின் சமுதாய துரோகத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் முன் கொண்டு சென்றது .


தவ்ஹீத் ஜமாஅத் பாடுபட்டு பலபோராட்டங்களையும் அதற்காக சமுதாய மக்களின் பொருளாதரத்தையும் சிலவு செய்து மேலும் பல சகோதர சகோதரிகளின் கண்ணீர் துஆக்களாலும் அல்லாஹ்வின் பேரருளால் இடஒதுக்கீடு என்னும் எட்டாக்கனியை அடைந்தோம் சுதந்திரத்திற்கு பிறகு தமிழக முஸ்லிம்கள் அடைந்த மிகப்பெரிய மகிழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்கிற அளவிற்கு இந்த சமுதாய மக்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர் அப்படி நாம் பாடுபட்டு பெற்ற அந்த இடஒதுக்கீட்டை சில சமுதாய தலைவர்களும் சமுதாய கட்சிகளும் தங்களின் சுயலாபத்திற்காக முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கனவை குழி தோண்டி புதைக்கும் வேளையில் ஈடுபட்டனர்.

தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும் தங்களின் இணையதளத்திலும் அவர்களின் தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் மாறி மாறி தவ்ஹீத் ஜாமத்தின் போராட்டங்களை முடக்குவதிலேயே குறியாய் இருந்தனர் இந்த தவ்ஹீத் ஜமாத்தினர் உலக அறிவு அற்றவர்கள் அரசாங்க விவகாரம் இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள்தான் மெத்தப்படித்த மேதாவிகள் அதிபுத்திசாலிகள் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் என்கிற அளவிற்கு முஸ்லிம்களின் காதில் பூ சுற்றினார்.

ரோஸ்டர் (சுழற்சி) என்று ஒன்றை சொல்லி மக்களை மட்டுமல்ல ஆளும் அரசையே குழப்பி குழம்பிய குட்டையில் தங்களுக்கு மட்டுமே தேவையானதை பெற்றுக்கொண்டனர் வாரியம் என்றும் உள்ளாட்சி என்றும் அரசு அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதிலாகட்டும் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர். 

இதற்கிடையில் தவ்ஹீத் ஜாமத்தின் போராட்ட வீரியத்தை கண்டு அஞ்சிய அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையை வாசித்தார் அதில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதஇடஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை அதை கூடிய விரைவில் சரி செய்கிறேன் என்று அறிவித்தார் அப்படி அறிவித்ததோடு நில்லாமல் தவ்ஹீத் ஜாமத்தின் தொடர் வலியுறுத்தலின் பேரில் இடஒதுக்கீடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆணையம் ஒன்றையும் அமைத்தார் அது மட்டுமல்லாமல் தான் மீண்டும் தமிழக முதல்வரானால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்று தங்களின் தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார் அதன் அடிப்படையில் முஸ்லிம் சமுதாய நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் திமுகவிற்கு சென்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளித்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி எடுத்து தங்களது தேர்தல் அறிக்கையாக வெளிட்ட அதிமுக ஒன்றைமட்டும் வகையாக மறந்துபோனது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு என்ற வார்த்தையை மட்டும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் காண முடியவில்லை இந்த தேர்தல் அறிக்கை பார்த்த தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் கொண்டு சென்றது மேலும் அதிமுகவிற்கு ஆதரவான உளவுத்துறை அதிகாரிகள் மூலம் இந்த அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் முஸ்லிம்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை மாறாக கோபமே அதிகம் உள்ளது என்று பரவலாக அறிந்த காரணத்தால் அதுவரை இடஒதுக்கீடு அதிகபடுத்தி வழங்கும் விசயத்தில் மவுனம் சாதித்த ஜெயலலிதா முதன் முதலாக திருச்சி மேற்கு தொகுதில் போட்டியிட்ட மரியம் பிச்சையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றவர் அங்கே தான் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்றும் உறுதி அளித்தார் அதை அவர்களின் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்.

ஜெயலிதாவின் அந்த அறிவிப்பை நம்பிய பெருவாரியான முஸ்லிம்கள் தங்களின் முழு ஆதரவையும் அளித்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை வழங்கினர் ஆனால் தான் முதல்வராகி ஓராண்டுகளில் நூறாண்டு சாதனையை செய்து முடித்துள்ளதாக தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் முதல்வரும் அவர்களின் தற்போதைய சிறுபான்மை பிரிவான மமகவின் தலைவரும் கூறிக்கொண்டுள்ளனர் அப்படி நூறாண்டு சாதனையை ஓராண்டு செய்து முடித்த பிறகும் முஸ்லிம்களின் வாழ்வாதார கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித்தர சிறிதும் மனம் இல்லை இதுவரை ஒரு முறைகூட ஜெயலலிதாவோ மற்ற அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை என்பதுதான் வேதனை. 

அவற்றையெல்லாம் விட மிகவும் வேதனை சென்ற ஆட்சியல் திமுக அரசால் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகப்படுதித் தருவதற்கு பதிலாக அதை குறைத்து ஒன்றுமே இல்லாமல் பூஜ்யதிர்க்கே கொண்டு வந்து தங்களின் வெறுப்பை முஸ்லிம்களிடம் காட்டியுள்ளார்கள் சென்ற மார்ச் மாதம் பயிற்சி மருத்துவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் தேர்வு செய்தது அதில் 1349 பயிற்சி மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை இதை அறிந்துகொண்ட முஸ்லிம்களின் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக டிஎன்பிஎஸ்சி (Tamilnadu Public Service Commission)அலுவலகம் முற்றுகை என்று அறிவித்தது பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த தமுமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் அப்துல்சமது ஒரு அறிக்கையை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டார் அதில் மருத்துவர் பணியாளர்கள் தேர்வில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் இதை கண்டிக்கின்றோம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

ஆனால் சில நாட்கள் மட்டுமே அந்த அறிக்கைக்கு அவர்களின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது அறிக்கை வெளியிட்ட அந்த சில நாட்கள் ஜவாஹிருல்லா இந்தியாவில் இல்லை வெளிநாட்டில் இருந்தார் அவர் திரும்பி வந்த சில நாட்களிலேயே அந்த கண்டன அறிக்கை தமுமுகவின் இணையதளதிலிருந்து அகற்றப்பட்டு விட்டது அதன் காரணம் என்ன ஏன் அதை அகற்றினார்கள் என்பதற்க்கான விடை சில மணி நேரத்திலேயே அவர்களின் இனையதளதிலேயே கிடைத்தும் விட்டது அந்த கண்டன அறிக்கைக்கு பதிலாக வேறொரு அறிவிப்பை வெளியிட்டு மருத்துவ தேர்வானயதிர்க்க்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதுபோல் முஸ்லிம்களுக்கு எந்த அநியாயமும் நடக்கவில்லை எல்லாம் சரியாகத்தான் நடந்துள்ளது என்று தங்களின் வழக்கமான விசுவாசத்தை! காட்டியுள்ளனர் அப்படியானால் முன்பு வெளியிட்ட கண்டன அறிக்கை தவறா அல்லது தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்து விட்டது அதை நாம் எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் வெளியிட்ட அறிக்கையா அதனால் தானோ தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தி முடித்த உடனேயே இவர்களின் கண்டன அறிக்கை நீக்கப்பட்டதோ உண்மை எதுவாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு இந்த சிறுபான்மைப்பிரிவினரால் ஒரு மறைமுக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது நிஜம்.

அப்படி டிஎன்பிஎஸ்சி எந்த தவறும் நடைபெறவில்லை என்பது உண்மையானால் 2011 மே மாதம் முதல் 2012 ஜூன் வரை அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பட்டன அதில் எத்தனை பேர் முஸ்லிம்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் அதற்காக இந்த மமகவினர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசவேண்டும் அப்படி அரசு வெளியிட மறுத்தால் இந்த மமகவினர் முஸ்லிம்களுக்கு இந்த அரசு பச்சைத் துரோகம்தான் செய்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும் ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது ஆளும் அரசுக்கு தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் வழக்கமான இவர்களின் சித்து வேலையை விட்டுவிட்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவையும் அவரது அரசையும் வானளவில் புகழ்ந்து பேசிவிட்டு வெளியில் மேடைபோட்டு விலைவாசி உயர்ந்துவிட்டது மின்சாரக்கட்டணம் அதிகரித்துவிட்டது என்று இரெட்டை வேடம் போடக்கூடாது தங்களின் கண்டனத்தை பத்திரிக்கை வாயிலாகவும் காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் அது முதல்வரின் கவனத்திற்கு செல்லும் அளவிற்கு இருக்கவேண்டும். 

சரி இந்த மமகவினர்தான் இவ்வாறென்றால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்காகவே பாடுபடும் அரசியல் கட்சி என்று தங்களுக்கு தாங்களே சான்றிதழ் வழங்கக்கொள்ளும் முஸ்லிம்லீக் இத்தனை ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தது முஸ்லிம் சமுதாய நலனுக்காக ஒரு துரும்பையாவது கிளிப்போட்டுள்ளதா முஸ்லிம்களை அரசியல் கட்சிகளிடம் அடகுவைத்ததை தவிர.

சமீபகாலமாக நாடெங்கிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கிறது அதில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது மற்ற மதத்தினரிடமும் கேட்கப்படுகிறது முஸ்லிம்களிடம் கேட்க்கும் கேள்வியில் முக்கியமான ஒன்று என்ன ஜாதி என்பது உடனே இந்த சமுதாய முஸ்லிம்லீக்கர்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்கள் முஸ்லிகள் யாரும் என்ன சாதியென்று கேட்டால் ராவுத்தர் லெப்பை தக்னி மரைக்காயர் என்று கூறாதீர்கள் முஸ்லிம் என்றே சொல்லுங்கள் என்று ஒரு பெரிய சமூக ஏற்றத்தாழ்வை நீக்குறோம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் 

இவர்களுக்கு அரசியலும் தகராறு என்றால் மார்க்மும் தகராறு என்கிற அளவிற்கு மார்க்கத்தில் சாதியில்லை என்று ஒன்றை பெரிய கண்டுபிடிப்பாக சொல்லியுள்ளனர் இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது இந்த மார்க்கத்தை புதிதாக தழுவிய ஒரு முஸ்லிமுக்குக்கூட தெரியும் அதை விளங்கித்தான் இஸ்லாத்தின் மேல் காதல் கொள்கிறான் அதில் ஈர்க்கப்படுகிறான் இஸ்லாத்தை தழுவுகின்றான். 

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்நன்கறிபவன்.அல்குர்ஆன்49:13

அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான் ஒருவரை அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாக கோத்திரங்களாகவும் படைத்தோம் என்கிறான் மேற்கூறப்பட்ட இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள் சாதியா முன்னொரு காலத்தில் தங்கள் செய்த தொழிலை அவர்களின் பட்டமாக ஆக்கிக்கொண்டார்கள் ராவுத்தரும் லெப்பையும் திருமணசம்பந்தம் செய்யாமல் இருகிறார்களா அல்லது தக்கினியும் லெப்பையும் சம்பந்தம் செய்யாமல் இருகிறார்களா சிலபேர் சம்பந்தம் செய்யாமல் இருப்பார்கள் அதற்கு காரணம் சாதி என்பதாலா இல்லை திருமணம் என்பது சந்தோசமாக வாழ்வதற்கு இருவேறு பழக்கம் உள்ளவர்கள் இருவேறு மொழியை கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையாது சந்தோசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா அதனால் தான் தவிர்த்துக் கொள்கிறார்களே அல்லாமல் சாதி என்ற எண்ணத்திலா என்பதைக்கூட விளங்காமல் சாதி என்றால் முஸ்லிம் என்று சொல்லுங்கள் என்று ஒரு அறிக்கை வேறு 

உண்மையில் இவர்கள் பிரித்து வைத்துள்ளர்களே மத்ஹப் பெயரால் தரீக்கா பெயரால் அவன் பள்ளிக்கு இவன் போகக்கூடாது இவன் பள்ளிக்கு அவன் போகக்கூடாது அவன் வணக்க முறை இப்படி இவன் வணக்க முறை அப்படி இதுதானே ராவுத்தர் லெப்பை என்பதைவிட மோசமாக இருக்கு அதை இவர்கள் முதலில் மாற்றட்டும் பிறகு பேசட்டும் அறிக்கை விடட்டும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் இல்லை முஸ்லிம்களில் தாழ்த்தப்பட்டவர்களான மேற்கண்ட ராவுத்தர் லெப்பை தக்னி போன்ற பிரிவுகளின் கீழ்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது முஸ்லிம்களை குழப்பி அதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களும் முஸ்லிம்களை முன்னேற்றப் போகின்றோம் என்று சொன்னாலும் அவர்களின் கொள்கையும் இதுவாகத்தான் இருக்கும் என்பதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து இப்படிப்பட்ட சமுதாய துரோகிகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக நாம் வாழவேண்டும் மற்ற அணைத்து சமுதாயத்திற்கும் முன்மாதிரியாக திகழவேண்டும்.


சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சிமன்றம் சென்றால்தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை உண்மையில் அங்கே சென்றால் நமது மானம் மரியாதையை இழக்கத்தான் நேரிடும் என்பதும் வெளியிலிருந்து போராடித்தான் தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தது என்பதையும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் உணர்ந்துகொண்டு இந்த முஸ்லிம்களின் கட்சி என்று சொல்லிக்கொண்டு எந்த வித சமூக தீமைகளையும் தடுக்காமல் வட்டிக்கு எதிராக வரதட்சணைக்கு எதிராக பித்அத், ஷிர்கிர்க்கு எதிராக குரல் கொடுக்காமல் தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொள்ளும் இவர்களின் மாய வலையில் சிக்கிவிடாமல் இவை ஒழிக்க யார் உண்மையாகவே பாடுபடுகிறார்கள் எனபதை சிந்தித்து பார்த்து அவர்களுடன் கை கோர்த்து நமது வருங்கால சமுதாயத்தை வளமான சமுதாயமாக ஆக்குவோம் அறிவார்ந்த மக்களாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்!

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும்கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் 58:11

நீங்கள்மனிதகுலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்குர்ஆன் 3:110 

ஆக்கம்:முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y