அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 21, 2012

இறைவனின் வல்லமையை உணர்த்தும் சுனாமி (Tsunami).



இன்று உலகில் சுமார் 28 நாடுகளில் புவி அதிர்ச்சி ஏற்பட்டதுடன், பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேஷியா போன்ற நாடுகள் சிரிய அளவில் கடல் கொந்தளிப்பின் மூலம் பாதிக்கப்பட்டது. 
சுனாமி பற்றிய தெளிவையும், இறைவனின் வல்லமையையும் பற்றி தெளிவுபடுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரி பாத்திமா ஷஹானா அவர்களினால் எழுதப்பட்டு நமது தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கத்தை காலத்தின் தேவை கருதி சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்கிறோம். 

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.  (அல்குர்ஆன் 13:39)
சுனாமி (tsunami) …… ஏழு வருடங்களுக்கு முன் இந்தப் பெயர் நம் நாட்டு மக்களைப் பொருத்த வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப் பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது. 

டிசெம்பர் 26, 2004 ம் நாள் உலகிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். ஆயிரக் கணக்கிலான உயிர் சேதங்களையும்பல மில்லியன் கணக்கிலான பொருட் சேதங்களையும் ஏற்படுத்திய கொடுரமான நாள். இவ் இயற்கை அனர்த்தங்கள் மூலம் அல்லாஹ் அவனது வல்லமையை நம் கண் முன்;பாக தெளிவாகக் காட்டினான்.  

இதிலுள்ள இன்னுமொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சுனாமியின்போது நடுக்கடல் எந்ந வித கொந்தளிப்பும் இல்லாமல் சாதாரணமாகவே இருக்கும். ஆனால்கரையோரத்தை அண்டிய கடற்பிரதேசமே கொந்தளித்து கரையோரத்தைத் தாண்டி பல கிலோ மீற்றர்கள் ஊடுருவி நிலப் பிரதேசத்தை நோக்கி வரக்கூடியதாக உள்ளது. இதற்கு முன் கடல் உள் வாங்கவும் செய்கின்றது. இதை அல்லாஹ்வின் வல்லமை என்றில்லாமல் என்ன சொல்வது

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன். மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:74)

மேலும்அல்லாஹ் அவனது வல்லமையை பிர்அவ்னுக்கு அவன் ஏற்படுத்திய அழிவை குர்ஆனில் குறிப்பிடுவதன் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும்அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் எற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமைமிக்கவன். கடுமையாகத் தண்டிப்பவன்.  (அல்குர்ஆன் 8:52)

உலகில் தீமை அதிகரிக்கும்போது அல்லாஹ் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் வணக்கத்திற்குரியவன் ஒருவன் இருக்கின்றான்;;.அவனுக்கு கட்டுப்பட்டு அனைவரும் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துகின்றான். ஆனால்,பெரும்பாலான மக்களின் கருத்து தீயவர்களை அழிக்கவே அல்லாஹ் இத்தகைய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றான் என்பது. எனவே,இவ்வாறான அனர்த்தங்களில் அழிபவர்கள் தீயவர்களே என வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். பின்வரும் ஹதீஸில் இருந்து இது தெளிவாக நமக்குப் புரியும்.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் ("இந்த அளவிற்குஎன்று கூறியபோதுதமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது100 என்று மடித்துக் காட்டினார்கள்.-

அப்போது "நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். தீமை பெருத்துவிட்டால்'' (அழிவு ஏற்படும்) என்று பதிலளித்தார்கள். (புஹாரி 7059)

எனவேஇயற்கை அனர்த்தங்கள் நல்லவர்களுக்கும்தீயவர்களுக்கும் சேர்த்தே சோதனையாக அமையும். நபியவர்கள் காலத்திலேயே குழப்பங்களை அல்லாஹ் இறக்கி வைக்கக்கூடியவனாக இருந்தான். பின்வரும் ஹதீஸில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களையும் எழும்பி தொழுமாறு ஏவுகின்றார்கள். எனவே அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனையிலிருந்து நல்லவர்தீயவர் அனைவருமே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர். 

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். ஒரு(நாள்) இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத்துடன் விழித்தெழுந்து 'அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன! - தம் துணைவியரை மனத்தில் கொண்டு - இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பி விடுகிறவர் யார்அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில் இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்என்று கூறினார்கள்.  (புஹாரி 7069)

தீயவர்களுக்கு மட்டும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவதென்றால் அது மறுமை ஏற்படும் நாளாகத் தான் இருக்க வேண்டும். 

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள்தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்     (புஹாரி 7067)

அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையை சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின் றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.   (புஹாரி 5645)

நம் செயல்களின் மூலமே அல்லாஹ் நாம் சுவர்க்கத்திற்குரியவர்களா?அல்லது நரகத்திற்குரியவர்களாஎன்பதைத் தீர்மானிப்பான். 

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும்அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.   (அல்குர்ஆன் 57:23)

ஓரளவு அச்சத்தாலும்பசியாலும் செல்வங்கள்உயிர்கள்மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

நாம் சோதனைகள் வரும்போது பொறுமையாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து நம் அத்தனை க~;டங்கள்கவலைகள்துயரங்கள் என்பவற்றை அல்லாஹ்விடமே முறையிட வேண்டும். அல்லாஹ்வே நம்மை பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன் என்ற முழு நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் இறைஞ்சி பிரார்த்திக்க வேண்டும். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள்இ "நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்எனவேஇ அவர்களுக்கு அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்;அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.   (புஹாரி 4563)

இஸ்லாத்தைப் பொருத்த வரை இறந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிப்பது மூன்று நாட்களுக்காகும். ஆனால்இன்று சுனாமி தினத்தை வருடந்தோறும் துக்க தினமாக முஸ்லிம்கள் உட்பட அனைவரும் அனுஷ்டிப்பது கேலிக்குரிய நிகழ்வாக உள்ளது. 

உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம்நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோஇ நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.) (புகாரி313)


 பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,

தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,

இதற்கு என்ன நேர்ந்ததுஎன்று மனிதன் கேட்கும் போது,

அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும். 

அந்நாளில்  மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.

அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99: 01-08)

எனவேஇயற்கை அனர்த்தங்கள் உட்டபட்ட அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படும் அனைத்து சோதனைகளுக்கும் பொறுமையை மேற் கொண்டு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும். இச் சோதனைகளை அல்லாஹ் தீயவர்களுக்கு மட்டும் தான் ஏற்படுத்துவான் என்ற தவறான எண்ணத்தை மனதிலிருந்து அகற்றி அந்நாளை ஒவ்வொரு வருடமும் துக்க தினமாக அனுஷ்டிப்பதை விட்டொழித்து அல்லாஹ்வின் தூய மார்க்கத்தில் நிலைத்திருப்போமாக!


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y