அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, December 29, 2011

சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய ஹசாரே!

ஊழலை ஒழிக்க இதோ காந்தியவாதி களம் இறங்கிவிட்டார் என சங்க்பரிவாரதினரால் திட்டமிட்டே களமிறக்கப்பட்டு கமெடி பீசாகிபோன அண்ணா ஹசாரேவின் அட்டகாசங்கள் இன்று கட்டுக்கடங்காமல் போய்விட்டன இவரையும் மதித்து இவருக்கு அடிபணியும் நிலையை காங்கிரஸ் கையாண்டு வருவதுதான் அவலத்திலும் அவலமாக இருக்கிறது 

என்னதான் லோக்பாலில் திருத்தம் செய்தாலும் அதில் கொஞ்சம்கூட திருப்தி அடையாமல் ஏதாவது ஒரு குடைச்சலை கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் பிஜேபியை இருத்தி தமது எஜமான விசுவாசத்தை நிரூபிக்க துடியாய் துடிக்கிறார் அண்ணா ஹசாரே!
நீண்ட செயல்திட்டத்தை நிறைவேற்றுவதர்க்காக பின் பக்கமிருந்து ஹசாரவை இயக்கிக்கொண்டிருக்கும் சங்க்பரிவார கூட்டம் இதற்காக பல கோடிகளை கொட்டிக் கொடுத்துக்காத்திருக்கிறது யாரென்று அறியப்படாத அண்ணா ஹசாரவை இன்றைக்கு காந்தியவாதி என சங்க பரிவார பத்திரிகைகள் லாவணி பாடுகின்றன ஆனால் இவைகள் என்னதான் துதி பாடினாலும் மக்களை யாராலும் முட்டாளாக்கிவிட முடியவில்லை.

காரணம் அண்ணா ஹசாரே முதன் முதலில் போராட்டத்தை  துவக்கியபோது அதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்தான் தன்னுடைய யோகா மையத்தின் ஆட்க்கள் ஆயிரக்கனக்கனோரை களம் இறக்கினார் அதனை ஒரு பெரிய மக்கள் எழுச்சியைப்போல இந்த ஊடகங்கள் பெரிதுபடித்திக் காட்டின அண்ணா ஹசாரவின் உண்ணாவிரத நாடகத்தை அனைத்து செய்தி ஊடகங்களும் சிலாகித்து எழுதின காந்தி மூண்டும் பிறந்துவிட்டார் என்றெல்லாம் இவர் குறித்து செய்திகள் வெளியாகின.

நாட்கள் செல்லச்செல்ல அண்ணா ஹசாரவின் கவிச் சாயம் கலையத் துவங்கியது மக்கள் அண்ணா ஹசாரவின் அவல முகத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் இதெல்லாம் முழுக்க முழுக்க சங்க பரிவார கூட்டங்களின் சதிவலை என்பதை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

மக்களிடம் தங்களின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க்க வெக்கப்பட்டு தூண்டில் முள்ளில் அண்ணா ஹசாரவை கட்டி மக்களிடம் காட்டி வாக்கு மீன்களை கவர நினைத்த சங்க்பரிவாரங்களின் அத்தனை முயற்ச்சிகளும் மண்ணைக் கவ்வியது என்றுதான் சொல்ல வேண்டும்  காரணம் அண்ணா ஹசாரவின் ஊழலால் எதிர்ப்பு இருக்கும் கெஜ்ரிவால் கிரண்பேடி ஆகியோர் மீது ஊழல் புகார் பறந்தன ஹசாரவுடன் இருக்கும் கூட்டம் ஊழலில் ஊறிய கூட்டம் என்பதை மக்கள் அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள் விளைவு அண்ணா ஹசாரே ஒவ்வொரு மாநிலமாக வலம்வந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் செயல்பாட்டுக் கூட்டத்திற்கு மக்களிடம் போதிய ஆதரவில்லாமல் போனதுதான்.

கடந்தவாரம் சென்னைக்கும் வந்தார் அண்ணா ஹசாரே ஊரெல்லாம் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு பிருமாண்ட வாரவேர்ப்புக்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது ஆனால் நடந்ததோ வேறு அவர்கள் எதிர்பார்த்த மக்கள் கூட்டத்தில் மூன்றில் ஒருபங்குகூட மக்கள் அங்கு வந்து சேரவில்லை முகம் இறுகிய நிலையில் சத்தம் இல்லாமல் சென்னையை விட்டு இடம் பெயர்ந்துவிட்டனர் ஹசாரே கூட்டத்தினர்.

இது நடந்த அன்றைக்கே மற்றும் ஒரு சுவராசியமான தகவலும் வெளியாகியது அதாவது அண்ணா ஹசாரவின் பிரச்சார துவக்க நேரத்தில் ஹரியான மாநிலம் ஹிசார் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது அந்த தொகுதியில் காங்கிரஸ் ஏர்க்கனவே மூன்றாம் இடத்தைத்தான் பெற்றிருந்தது அந்த தேர்தல் களத்தில் காங்கிரசுக்கு எதிராக கெஜ்ரிவால் கிரண்பேடி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் முன்புபோலவே காங்கிரஸ் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

ஹசாரே கும்பல் பிரச்சாரம் செய்யாவிட்டால் காங்கிரஸ் மூன்றாம் இடத்தைத்தான் பிடிக்கும் என்பதை அனைவரும் ஊகித்ததுதான் ஆனால் இந்த கும்பல் தங்களால்தான் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு வந்தது என பம்மாத்து காட்டியது .

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாச்சிதேர்தல் முடிவுகள் அண்ணா ஹசாரேவின் பிரச்சாரத்தை மண்ணைக் காவ்வவைக்கும் விதமாக் அமைத்திருந்தன அதுவும் அண்ணா ஹசாரேவின் சொந்த மாவட்டமான அஹ்மத் நகரில் அதிகபட்ச்ச இடங்களை காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும் மாபெரும் வெற்றியை பெற்றன.

எதிர்க்கட்சி கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா அங்கே மிக குறைந்த இடங்களை பெற்றன இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தன அண்ணா ஹசாரேவின் சொந்த மண்ணிலேயே தங்களின் கள்ளப்பிரச்சாரம் எடுபடாமல் போய்விட்டதைக் கண்டு சங்பரிவாரக் கும்பல் வெலவெலத்து போயிருக்கின்றன.

ஆனாலும் தங்களின் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராமல் அண்ணா ஹசாரேவை காந்தியவாதி காந்தியவாதி என படம் காட்டி மக்களில் கொஞ்சம் பேரையாவது தங்களின் ஒட்டு வங்கியில் இனைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையில் இன்னமும் சங்கபரிவாரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன உள்ளாசிதேர்தலில் கிடைத்த வெற்றியை பெரிதாக கருதி அண்ணா ஹசாரேவின் செல்வாக்கு சரிதுவிட்டதாக காங்கிரசும் நினைத்து எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தால் சங்பரிவார கூட்டங்கள் தங்களின் எல்லையை அடைந்து விடுவார்கள் என்பது நிதர்சனம்.

உணர்வு 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y