அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, November 25, 2011

கூடங்குளம் ஆதாயம் யாருக்கு ?


நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்க்கு அதிகமான விலை நாம் கொடுத்துதான் ஆகவேண்டும் நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது ஆனால் வாகனங்களிருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது கேட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்

அதேபோல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழமுடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகிறது சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கத்திகளை ஒசொன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டிலிருந்து பாதுகாக்கிறது அந்த பாதுகாப்பை நாம்கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
மேற்கண்ட சாதனங்களுடன் டிவி கம்ப்யுட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடிந்து வருகிறது பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது நாளைடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகிவிடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது
 இந்தியாவில் ஐம்பதுகோடி மக்கள் இருந்தபோது அரிசி கிடைக்கவில்லை ரேசன் மூலம்தான் வாராவாரம் புழுத்த அரசி வாங்கும் நிலை இருந்தது விவசாயத்தை பெருக்குவதற்க்காக நவீன ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது ரசயான உறங்க்லால்தான் உணவு அனைவருக்கும் கிடைத்து வருகிறது ஆனால் இந்த உணவுபொருல்கள் நமது உடல்நலனை கெடுத்துவருவதை இன்னொருபக்கம் நாம் உணர்கிறோம்

சில நோய்களுக்காக நாம் உட்க்கொள்ளும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுதினாலும் அந்த நோயிலிருந்து விடுபட்டால போதும் எனக்கருதி அதையும் சகித்துக்கொல்கிறோம்

செல்போன் பேசுவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் மூளையைச் சிறிய அளவில் பாதிக்கும் என்றபோதும் காதின் கேட்க்கும் திறன் பாதிக்கும் என்றபோதும் நாம் அதை சகித்துக் கொள்கிறோம் அதிகப்படியான வெளிச்சம் கூட கண்களை பாதிக்கும் என்றபோதும் நாம் அதிகம் வெளிச்சம் தரும் விளக்குகளை பயன் படுத்துகிறோம் எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும் அதனால் நமக்கு பல கேடுகள் சேர்ந்தே ஏற்படுகிறது.

இன்றைக்கு நமக்கு மின்சாரம் என்பது மிக அவசியாமான ஒன்றாக ஆகிவிட்டது மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்பதற்காக ஆட்சியையே மற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தை பிடிக்கிறது.

நிலக்கரியின் மூலமும் தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும் காற்றலை மூலமும் நமக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை எனவேதான் குறைந்த சிலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில் அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.

எந்த வகை மின்சாரத்தையும் விட அணு மின்சாரம் அதிகம் லாபமானது என்பது உண்மைதான்.

ஆனால் இதில் ஆபத்தும் அதிகம்தான்  அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும் பலருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படும் பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும் அந்த பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம்  இதன் ஆபத்துகளை பட்டியலிடுகிறார்கள மேலும் அணுக்கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்க கூடியது இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிகொண்டே போகிறார்கள்.

 அணு உலை வெடித்தால் வெடித்தால் ஆபத்து  அதிகம் என்பது உண்மைதான் ஆனால் வெடிப்பதற்கான வாய்புகள் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றன.

இதுதான் இப்போதுள்ள பிரச்சனை மக்கள் அஞ்சும்போது அந்த அச்சம் விலகும்வரை அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தி விபத்துதான் நல்லது ஏனெனனில் அந்த பகுதி மக்கள் தான் அணு உலை வெடித்தால் பாதிக்க கூடியவர்கள் ஆனால் அவர்களை விட அணுஉலையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும் பல்லாயிரம் பணியாளர்க்களும்தான் முதலில் பாதிக்கபடுவார்கள்.

அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு அங்கே பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தை துவங்கும்போது இதற்க்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பை காட்டி இருந்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக்கட்டம் வரை மத்திய அரசு வந்திருக்காது.

நம்முடைய பணம் 20 கோடி ரூபாய்  சிலவிட்டு  நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களை அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் போன்றோர் தூண்டி விடுகின்றனர் பீதியை கிளப்பி விடுகின்றனர். இந்த அணுஉலை ரஷ்யாவின் ஒத்துழைப்போடு முடிக்கப்பட்டுள்ளது இதுவே அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்டிருந்தால் நிச்சயம் பாதிரிகளும் உதயகுமார்களும் இவ்வளவு எதிர்ப்பை காட்டியிருக்க மாட்டார்கள் என்ற பிரச்சாரத்தில் அர்த்தம் உள்ளதையும் நாம் மறந்து விட முடியாது.  

பிஜே 
உணர்வு கேள்வி பதில் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y