அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, November 04, 2011

ஓட்டுபிரிக்கும் ஒற்றுமை வேடதாரிகள்....!

கொள்கையில் பின்வாங்காமல் நிற்கின்றான் என்பதற்காக மட்டுமே ஏகத்துவ சகோதரர்களை முழு மூச்சாய் எதிர்க்கும் பணியை ஒற்றுமையை கையாளும் நம் சகோதர இயக்கங்கள் அரசியல் பதவிகளைப் பிடிப்பதில் மட்டும் ஒன்று சேர மாட்டோம் என தங்களின் செய்கைகளின் மூலம் பல நேரங்களில் வெளிப்படுத்தி விடுகின்றனர்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜெயிக்க போவது யாரு இந்துவா முஸ்லிமா என்ற தலைப்பில் நக்கீரன் பத்திர்க்கை போஸ்டரை வெளியிட்டு தன் விசமதனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிட்ட முஸ்லிம் வேட்ப்பாளர்கள் மற்று அணிக்கு அமோக வெற்றியை தேடித் தந்துள்ளார்கள் என்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுமத வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார் என்ற ஆற்றாமையால் இதை நாம் சுட்டிக்காட்டவில்லை தவ்ஹீத் ஜமாஅத்தான் ஒற்றுமையை குலைக்கும் என வாய்கிழிய பேசியவர்கள் இந்த வார்டு தேர்தலில் கூட தங்களின் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாமல் பிரிந்து நின்ற அவலத்தை மக்கள் அனைவருக்கும் விளக்க வேண்டியதுதான் இதன் அவசியம் ஆகும்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் மகாராஜா சலீம் என்பவரும் எஸ்டிபிஐ சார்பில் அபூபக்கர் சித்திக் என்பவரும் அதிமுக சார்பில் அருணாசலம் என்பவரும் மம கட்சி சார்பில் மாலிக் என்பவரும் களம் இறங்கியிருந்தார்கள் இவர்கள் அனைவரும் பெற்ற வாக்குகள் கீழ்க்கண்டவாறு 
 
அருணாசலம் ( ஆதிமுக ) - 2328 
மகாராஜா சலீம் ( திமுக )  - 1491
அபூபக்கர் சித்திக் (SDPI )    - 1926  
 மாலிக் ( மமக )                  - 395  

அனைத்து முஸ்லிம்களும் வாக்களித்த 3812 வாக்குகளால் இந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வெற்றியடைய செய்ய இயலவில்லை வெறும் 2328 வாக்குகளே வெற்றியை தீர்மானித்து விட்டன 

பொதுவாக முத்துப்பேட்டையில் சங்கபரிவாரங்களின் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கும் நிலையில் தங்களை சமுதாய ஒற்றுமையின் ஜாம்பவான்களாக கட்டிக்கொள்ளும் சமுதாய அரசியல் லட்டர்பேடுகளுக்கு ஓரணியில் நிற்கும் என்னம் இல்லாமல் போனது ஏன் என்று தெரியவில்லை அதிலும் அரசியலை இஸ்லாமியர்களுக்கு நமதாக்குவோம் என்ற கோசத்தோடு களம் இறங்கியுள்ள போராளி (?) கட்சியினர் திமுக சார்பில் ஒரு முஸ்லிம் போட்டியிடும்போது அவரை எதிர்த்து களம் இறங்காமல் அவர்களின் கோசத்தின்படி முத்துப்பேட்டையை திமுக வேட்ப்பாளருக்கு போதுவாக்கியிருக்கலாம் தானே! 

இதுபோன்ற பல இடங்களில் ஒட்டுப்பிரிப்பு வேளையில் ஈடுபட்ட மமக மற்றும் SDPI யினர் ஈடுபட்டு இஸ்லாமிய வேட்ப்பாலர்களின் வெற்றியில் மண்ணை அள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்த உள்ளாச்சி தேர்தலில் அரங்கேறி இருக்கின்றன உதாரணமாக திருப்பூர் மற்றும் கோவை சொல்லலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எல்லோரையம் அனுசரித்து செல்லவேண்டும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும். ஆனால் போலி ஒற்றுமை வாதம் பேசுபவர்கள் கேவலம் ஒரு வார்டு தேர்தலில்கூட ஒன்று பட மாட்டார்கள்.

இவர்கள் பேசும் ஒற்றுமையை இவர்கள் கூடி கலைந்ததும் பனிக்கட்டி போல கரைந்துவிடும் போலி ஆகும். ஆனால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேசும் கொள்கை ஒற்றுமை என்பது நபிகள் நாயகம் ( ஸல்  )  அவர்கள் காட்டித்தந்த பிணைப்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு இவர்களை அடையாளம் காணவேண்டும் அதில்தான் நம் சமுதாயத்தின் முன்னேற்றம் இருக்கிறது. 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y