அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, December 30, 2010

தமிழக அரசு அறிவித்துள்ள சமத்துவ பொங்கல் சரியா ?

ஜனவரி 14 தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமத்துவப் பொங்கல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் பல கட்சியினர் இதை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.

பொங்கல் என்பது தமிழர் திருவிழா! எனவே தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இது ஒட்டு மொத்த தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. இந்து மதத்தின் அடிப்படையில் சாமி கும்பிட்டுத் தான் இந்த விழா காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் ஓரிறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் எவரும் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் இந்த விழாவில்இறைவனால் மன்னிக்க முடியாத மாபெரும் பாவமான இணை வைப்பு நடைபெறுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்து சிதைக்கப்படுகிறது. எனவே இதில் உண்மையான முஸ்லிம் எவனும் கலந்து கொள்ள மாட்டான்.
அதே நேரத்தில் இந்த சமத்துவப் பெங்கலில் கலந்து கொள்ளாததால் தமிழ் மக்களுடன் பகைமை உணர்வு ஏற்படுவதில்லை. இந்த சமத்துவப் பொங்கல் இல்லாத காலகட்டத்திலும் முஸ்லிம்கள்கிறித்தவர்கள்இந்துக்கள் ஒற்றுமையுடன் தான் இருந்து வந்துள்ளனர்.
சங்பரிவார் கும்பல் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் பல விழாக்களைக் கொண்டு வந்து மத மோதல்களை ஏற்படுத்திகுறிப்பாக முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கிவிட்டால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் உறுதியாக ஏற்படும்.
மேலும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அவரவர் விரும்பும் மதத்தில்அவர் விரும்பியபடி நடக்க யாரும் இடையூறு செய்யாமல் இருந்தாலே மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுத்து விடலாம். அடுத்தவர்களின் தெய்வங்களை ஏசுவதுஅருவருக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சிப்பது போன்ற காரியங்களைத் தடுத்தால் மத நல்லிணக்கம் ஏற்படும்.
அதை விடுத்து அடுத்தவர்களின் மத விவகாரங்களில் தலையிடும் வகையில் விழாக்களில் கலந்து கொள்வதை கட்டாயப்படுத்துவதோ ஆர்வமூட்டுவதோ நன்மையைத் தராது.
இஸ்லாம் கடுமையாக எதிர்க்கும் இணை வைப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இடத்தில் அதை அங்கீகரிப்பதைப் போன்று சில மவ்லவிகள் கலந்து கொண்டதுஇவர்கள் இஸ்லாத்தை எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார்கள்ஓரிறைக் கொள்கையில் எவ்வளவு பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இதை விடவும் கொடுமையாக பிள்ளையார் ஊர்வலம் வரும் போது சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் அந்தப் பிள்ளையாரை வரவேற்பதும்அதற்கு மாலையிடுவதும் அதைச் சுமந்து வருபவர்களைக் கவுரப்படுத்துவதும் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இதைப் போன்று ஓரிறைக் கொள்கையை இல்லாமலாக்கும் காரியத்தைச் செய்யும் தலைவர்கள்மவ்லவிகள் ஆகியோரை இந்தச் சமுதாயம் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும். ஓரிறைக் கொள்கையில் எந்நிலையிலும் யாரிடமும் சமரசம் இல்லை என்பதைச் சொல்லிலும் செயலிலும் இவ்வுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

நன்றி:தீன்குலப்பென்மணி 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y