அகமதாபாத்: நரோடியா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஹெச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில் தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. நரோடா பாட்டியா வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வந்த வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குறிப்பு : இதேபோன்று மற்ற இயக்கத்தினரும் தாங்கள் திரட்டிய தொகையை வெளியிட வேண்டும் அவர்களிடம் பித்ரா வழங்கியவர்கள் அவர்களை வற்ப்புறுத்த வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே!
குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு
அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக்
கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
(அல் குர்ஆன் 49 : 6)
மியான்மரில் வாழும் ரோஹிங்யா இன
முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் புத்த பிட்சுகளாலும்
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது
தொடர்பாக உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும்
கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும்
விதிவிலக்கல்ல.
ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984
ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.
இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.