அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, May 30, 2012

கேடு விளைவிக்கும் மிதமிஞ்சிய வேகம்!

இறைதூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பெண்களை ஏற்றி வந்த ஒட்டகத்தை ஓட்டி வந்த ஒட்டகமோட்டி ஒருவர் பாட்டுப் பாடிக்கொண்டு படுவேகமாக விரட்டி செல்வதைக் கண்டு கடும் கோபமுற்றார்கள்.

அவரை நோக்கி அன்ஜஷாவே ஒட்டகத்தை விரட்டாதே ! நிதானத்தை கடைப் பிடி மேலே அமர்நதிருக்கும் பெண்களை விபத்துக்குள்ளாக்கி விடாதே ! என்று கோபத்துடன் கண்டித்து விட்டு இவ்வாறு பாட்டுப் பாடிக் கொண்டு வாகனத்தை வேகமாக விரட்டுவது உனக்கு பெரும் கேட்டைத் தான் உண்டு பண்னும் என்றுக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள். 6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Sunday, May 27, 2012

மற்றவர்களுக்கு விரிவடையும் இட ஒதிக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?


மத்திய அரசின் கல்வி ,வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27சதவீத இட ஒதிக்கீடு உள்ளது .இந்த இட ஒதிகீட்டை அன்றைய பிரதமர் வி .பி சிங் சட்டமாக்கினார் ஆனால் ஐ ஐ டி..ஐஐஎம் .உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இந்த ஒதிக்கீடு அமுல் செய்யப்படாமல் இருந்தது எனவே மத்திய அரசு 2006 ம்ஆண்டில் ஒரு சட்டத்தை கொண்டு வந்து ,மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதிக்கீடு வழங்க வகை செய்தது ஆனால் இந்த சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன இதைகளையும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இந்த சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றமக்களவை மே16ம்தேதி ஒப்புதல் வழங்கியது இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மந்திரி கபில்சிபல் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்கு பாடுபட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் .

Friday, May 25, 2012

ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை! (வீடியோ இனைப்பு


அரசியல் என்று போய்விட்டாலே ,பதவி சுகம் கண்டுவிட்டாலே அந்த பதவிசுகத்திற்காக எப்படிப்பட்ட இழிச்செயளையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒருவன் ஆளாகிவிடுவான் என்பதற்கு ம .ம .கட்சி சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது .எங்களுக்கு சீட்டுகள் யார் கூடுதலாகத் தருகின்றார்களோ அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பச்சோந்தித்தனம் செய்வதில் ஆரம்பித்து ஓட்டுப் பொறுக்குவதற்காக மானமிழந்து .மரியாதை இழந்து ,கடைசியில் வாரியப்பதவி தரமாட்டார்களா?என்று ஒரு சிறு எலும்புத்துண்டுக்காக ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து அவரை துதி பாட ஒரு எல்லையே இல்லை என்ற அளவிற்கு செய்துவிட்டனர் ம ம கட்சியினர் .

கூடிய விரைவில் ஜால்ரா தட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று தமிழக கட்சிகளே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு ,சிறந்த ஜால்ரா தட்டி என்ற சிறப்புப் பட்டத்தை இவர்கள் தட்டிச் சென்று விடுவார் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் .


இந்து புனித பயணத்திற்கு மானியம் தமிழக அரசுக்கு சில கேள்விகள்.....

ஹஜ் மானியம் என்ற பெயரில் 600கோடி ரூபாயை வருடம்தோறும் ஒதுக்கிய மத்திய அரசு அதை பயணிகளிடம் நேரடியாக கொடுக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தூக்கி கொடுத்து ஏர் இந்தியா நிறுவனமோ டிக்கட் கட்டணத்தை ஹஜ் காலங்களில் இருமடங்காக உயர்த்தி அதை ஸ்வாக செய்து வந்தது மத்திய அரசின் இந்த மோசடியை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு முன் ஹஜ் மானியம் கூடாதென்று சங்க்பரிவார அமைப்புகள் ரணகளம் பண்ணிவிட்டன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மானியத்தை (?) குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது இதை ரத்து செய்தால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் இல்லை ஏர் இந்தியா நிறுவனதிர்க்குதான் இழப்பு இதை புரிந்துகொண்ட முஸ்லிம்கள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு சும்மா இருந்துவிட்டனர்.

Tuesday, May 22, 2012

அன்னை ஸவ்தா(ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.

ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும் அவர்களின் மணைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். 

மாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் (வீடியோ இனைப்பு)

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.

Saturday, May 19, 2012

யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம்


யான்பு கிளையில் நிர்வாகிகள் கூட்டம் 18.05.2012 வெள்ளி அன்று நடைபெற்றது அதில் கிளை தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
  • கூட்டத்தில் ஜெத்தா மண்டல தலைமையிடம் தொடர்பு கொண்டு இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்தமாத தொடக்கத்தில் மாநில தலைமையில் கேட்டு சகோ.பிஜே அவர்களை வைத்து ஒரு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது 
  • தலைமைக்கு இடம் வாங்க வாரி வழங்கிய சகோதர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

Wednesday, May 16, 2012

ஹஜ்ஜுக்கு வழங்கும் மானியத்தை ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்ற உத்தரவும் TNTJ நிலைப்பாடும் (வீடியோ இனைப்பு)


இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y