அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, February 28, 2011

எது முன்னேற்றம்? மகளிர் தின சிந்தனைகள் !!!


மார்ச் 8, உலக மகளிர் தினம் மகளிர் தினத்தன்று பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள்:
அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய்பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர்.
வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண்விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம்.
உலகத்தில் அதிக ஊதியம் பெறக் கூடியவராக உயர்ந்த பதவியில் இந்திரா நூயி என்ற பெண்மணி தான் இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு பாராளுமன்றத்திலே முதல் முறையாக உரையை நிகழ்த்தினார்.
உலகத்தின் தற்போதைய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் கூட ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அரசியல் ரீதியாகப் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் யதார்த்த நிலை.
நகர்மன்றங்களிலும் ஊராட்சிகளிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகள்.
இவ்வாறு பல படித்தரங்களை பெண் சமுதாயம் அடைந்து விட்டதாக உரைகளின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் வாயிலாகவும் தொலைக்காட்சிகளின் சிறப்புச் செய்திகளின் வாயிலாகவும் அறிய முடிந்தது.
இந்த ஆண்டு மகளிர் தினத்தில் மிகவும் வலியுறுத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில:-
பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும்.

2011-12 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
புதுடெல்லி:  மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை 11 மணியளவிலிருந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2011-12 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு, ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி ஓதுக்கீடு போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு.

* கல்வித்துறைக்கு ரூ. 52,057 கோடி நிதி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை

* நபார்டு எனும் விவசாய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்தை உயர்த்த ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

* உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட 2,500 கோடி டாலர்களுக்கு உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும்.

Sunday, February 27, 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் பிஜேயில் நேரலையா!

இன்ஷா அல்லாஹ்... 

வருகின்ற 04.03.2011 வெள்ளிகிழமை மதியம் சவுதி நேரம்  02.00
மணிக்கு அல்கசீம் மண்டல TNTJ நடத்தும்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில்
சகோதரர் பி .ஜெ. அவர்கள் ஆன்லைன் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இந்நிகழ்ச்சி onlinepj .com 
இணைய தளத்தில் நேரிடையாக ஒளிப்பரப்பாகிறது . 
சகோதரர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை கண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் 
அல்கசீம் மண்டலம் 
சவூதி அரேபியா

Friday, February 25, 2011

சவுதியில்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

சவுதியில் சாலை விதிகள்!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை !!

சவுதி அரேபியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் வாகன
விபத்துகளை கட்டுப் படுத்த தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை சாலைகளில் சவுதி அரசாங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமராக்கள் சவுதி அரேபியாவில் உள்ள உள்துறை
அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன்
இணைந்து செயல் பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பெயர்
தான் ‘ஸாஹர்’ (SAHER)  http://www.saher.gov.sa/e_Default.aspx

கடந்த ஆண்டு தலை நகர் ரியாதில் நிறுவி வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணம்
'தம்மாம்' மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.

சவுதி அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி:

* ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருவர் வாகன
   விபத்தில் உயிரிழக்கிறார்.

* சராசரியாக 18 பேர் அன்றாடம் மரணிக்கிறார்கள்.

* ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தின் மூலம்
    ஊனமடைகிறார்கள்.

* 2009 ஆம் ஆண்டு மட்டும் 485931 விபத்துகள் பதிவாகியுள்ளன.

மானம் காக்கப் புறப்பட்டு மானமிழந்த கதை!


சமுதாயத்தின் மானத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு நாங்கள் தான் எடுத்து வைத்துள்ளோம் என பில்டப் கொடுத்த மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அ.தி.மு.க போட்ட 3 தொகுதி பிச்சை சீட்டுக்களை வாங்கிக் கொண்டு மானமிழந்து வேறு வழயின்றி உலக ஆதாயத்திற்காக சில எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்கள் மானம் காக்க புறப்பட்ட வரலாற்றையும், இப்போது மானமிழந்து நிற்கும் அசிங்கத்தையும் தற்போது நாம் அசைபோட்டுப் பார்க்கலாம்.
ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிக்கத் தான் ம.ம. கட்சி தொடங்கப்பட்டது என்றால் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
அதாவது, ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகள். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்ற இவர்களது கட்சி துவங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 12 தொகுதிகளையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரை எம்.பித் தொகுதிக்கு நிகரான 3சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க விடம் வாங்கி கேவலப்பட்டுள்ளனர்.

ஈமானையும் இழந்த தமுமுக


குர்ஆன் ஹதீஸ் எழுதக்கூடிய பலகையில்
மௌலீது விளம்பரம் 
கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டு, பூந்தி, ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.
இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

Wednesday, February 23, 2011

SDPI யின் தொடர் காட்டுமிராண்டிச்செயல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் குர்ஆன்,ஹதீஸ் வசனங்கள் எழுதிப்போடக்கூடிய கரும்பலகையின்  மீது  SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
குர்ஆன் ஹதீஸ் எழுதக்கூடிய கரும்பலகையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டிஸ்

டந்த 16.02.11 அன்று ஆசாத்நகர் பள்ளிவாசலின் முன்பு மேள தாளத்துடன் டான்ஸ் ஆடி நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய சுன்னத்(??)ஜமாத்தினறுக்கு பக்கபலமாக இருந்து உதவியது மட்டுமல்லாமல் TNTJ வை வம்புக்கு இழுத்து அதில் குளிர்காய நினைக்கும் கேடுகேட்ட கூட்டம் தான் SDPI .
இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். 

சவுதியில் வரும் சனிக்கிழமை பொது விடுமுறை சவுதி அரசு அறிவிப்பு

மன்னர் அப்துல்லாஹ் உடல் நலக்குறைவுகாரணமாக கடந்த மூன்று மாதங்களாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக மொராக்கோவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார் அவர்  சிகிச்சை முடிந்து நலமாக நேற்று, தலைநகர் ரியாத் திரும்பினார் நாடுதிரும்பியதன் சந்தோசத்தை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள வரும் 26ம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது மேலும் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு சலுகைகளையும் நாட்டுமக்களுக்கு அறிவித்துள்ளது அதில் குறிப்பிடும்படியாக  அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவுதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும்.இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.



Tuesday, February 22, 2011

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?


கேள்வி : இன்று மார்க்க பிரச்சாரங்களை , நோட்டீஸ் பிரசுரம் மூலம் நமது ஜமாஅத் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர் , அந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்புகள் நோட்டீஸ் பிரசுரம் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ?, உதாரணமாக தொழுகையின் அவசியம், மறுமை இது போன்ற பொதுவான தலைப்புகளில் நோட்டீஸ் பிரசுரம் மற்றவர்கள் வெளியிட்டால் மற்றும் குர்ஆன் , ஹதீஸுக்கு உட்பட்டு பல்வேறு தலைப்புகளில் வேறு பலரும் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா , கொள்கை அடிப்படையில் சிக்கல் என்று மறுத்தால் குர்ஆன் , ஹதீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , ஜமாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? சிலர் ஜமாஅத் வெறியை உங்களுக்குள் வளர்க்காதீர்கள் குர்ஆன் , ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்களே , எனவே குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு வேறு யார் விநியோகித்தாலும் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ? 

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான வாதம் போல் தோன்றினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்து பார்த்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.

Sunday, February 20, 2011

இஸ்லாமிய ஒழுங்குகள் சிரிப்பின் ஓழுங்குகள்


சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்
நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்கபின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன்நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையாஎன்று கேட்பான். அதற்கு அவர்ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன்எடுத்துக் கொள்ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.
(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசிஅல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2348

Tuesday, February 15, 2011

பள்ளி சீருடையும் பாலியல் வன்முறையும் -அதற்க்கு இஸ்லாம் அளிக்கும் தீர்வும்.

அன்பார்ந்த சகோதரர்களே இன்று நாட்டில் நடக்கும் அதிகமான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணமே சிறு பிராயம் முதல் உடை விசயத்தில்  கட்டுப்பாடற்ற சுதந்தரமும் ஒரு காரணம் பள்ளியில் துவங்கும் இந்த ஆடைகுறைப்புக் கலாச்சாரம் கல்லூரி மற்றும் அலுவலகம் என நீண்டு கொண்டே செல்கிறது தினமலரில் வெளியான பள்ளி சீருடைகளும் பாலியல் வன்முறையும் என்ற இந்த கட்டுரையை நாம் இங்கே பதிவதற்கு ஒரு காரணம் மேலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வுகளையும் இத்துடன் கீழே இணைத்துள்ளோம் இக்கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் கருத்திடலில் பதியலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்.  

பள்ளி சீருடையும் பாலியல் வன்முறையும்  
வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

Monday, February 14, 2011

கோவையில் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பாரதி(தீ)ய ஜனதா


கோவையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டிஸ் 
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக மக்களிடம் எதை சொல்லி ஒட்டு கேட்பது என்று தெரியாமல் மக்களை குழப்பியாவது பெற நினைக்கும் பாரதி(தீ)ய ஜனதா! மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கூட்டத்திற்கு தீர்வு என்ன?
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரதி(தீ)ய ஜனதாவினரால் அமைதியை குலைக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர் 13ம் தேதி மாலை முதல் முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் விரிவாக அறிய இந்த வார உணர்வு இதழை பார்க்கவும். 

Sunday, February 13, 2011

ஜித்தாவில் நடந்த மார்க்க விளக்கநிகழ்ச்சி

 அல்ஹம்துலில்லாஹ் கடந்த வியாழன் (10-02-2011) அன்று இரவு 8.30 மணிக்கு ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு மார்க்க சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தபுக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் காலத்தின் அவசியம் என்ற தலைப்பிலும். சகோ. ஃபிர்னாஸ் அவர்கள் இயற்க்கையின் சீற்றமா ? இறைவனின் நாட்டமா ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். தற்பொழுதைய உலக சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்த இந்த தலைப்புகளில் உரையாற்றியவர்களும் மிகவும் சிறப்பாக உறையாற்றினார்கள். கலந்து கொண்டவர்களுக்கும் மிகவும் பயனளிக்க கூடியதாக இருந்தது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை


நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளியல் கடந்த 11-2-11 அன்று  பள்ளி நிர்வாகம் மவ்லித் ஓத தடை விதித்துள்ளது.ஜமாஅத் பொது மக்கள் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் மவ்லித் ஓதக் கூடாது என கையெழுத்திட்டு கொடுத்ததால் பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் பின்பற்றி அந்த முஹல்லாக்களில் கையெழுத்து பெற்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் வற்ப்புறுத்த வேண்டும் அவர்கள் அந்த பாவத்தை தொடர்ந்து செய்தால் நாங்கள் உங்களின் 
ஜமாஅத்திலிருந்து நீங்கிக்கொள்கிறோம் என்று கட்டாயப்படுத்த வேண்டும். 

Saturday, February 12, 2011

யான்பு கிளையில் மாதந்திர கூட்டம்

யான்பு கிளையில் மாதந்திர கூட்டம் நேற்று 11.02.2011 நடந்தது அதில் சென்னை மற்றும் மதுரையில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் அல்ஹம்துலில்லாஹ் எத்தனை லட்டர் பேட் இயக்கம் ஒன்றாக இணைந்து ததஜவிர்க்கு எதிராக சதி செய்தாலும் பொய் கொலைக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் சாமான்ய  மக்கள் என்றும் டிஎன்டிஜே பக்கம்தான் நிற்பார்கள் என்பதை இந்த ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம்  மீண்டும் தெள்ளத் தெளிவாக்கியுள்ளது மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வது குறிப்பாக மமக தொடர்ந்து சமுதாயத்திற்கு செய்கின்ற துரோகங்களை தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களை வரும் தேர்தலில் அவர்களை தோல்வியுறச் செய்ய அனைத்து டிஎன்டிஜே சகோதரர்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டிக்க் கேட்டுக்கொள்கிறது மேலும் சகோதரர் பிஜே மீண்டும் தலைவர் ஆனதில் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.தமிழன் தொலைக்காட்சில் ததஜ நிகழ்ச்சிகள் இப்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அதை பிட் நோட்ஸ்களாகவும் குறும் செய்தி மூலமும் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மீலாதும் மவ்லிதும்

உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கüன் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே!  யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலளிதர்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)நூல்: புகாரி 3456

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போன்றே இன்று முஸ்லிம்களிடம் பிறந்த நாள் கொண்டாடுதல், இறந்த நாள் அனுஷ்டித்தல் போன்ற காரியங்கள் ஏற்பட்டு விட்டன. உண்மையில் பிறந்த நாள் விழா, இறந்த நினைவு தினம் எல்லாமே யூத, கிறித்தவக் கலாச்சாரமாகும். இது இஸ்லாமியக் கலாச்சாரம் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை.
இது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றால், நன்மையான காரியம் என்றால் நன்மையில் எல்லா வகையிலும் முந்திச் சென்ற நபித்தோழர்கள் மற்றும் அதற்குப் பின் வந்த தலைமுறையினர் இதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Wednesday, February 09, 2011

ஜித்தாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி


Tuesday, February 08, 2011

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?


கடந்தக் கட்டுரைகளில் தொழுவதினால் ஏற்படும் இம்மை - மறுமைப் பலன்களை பார்வையிட்டோம் தொழுகையாளிகள் மட்டுமே மறுமையில் சுவனத்தை அடைய முடியும்தங்களுடைய இறைவனை கண்குளிர கண்டு மகிழ முடியும் தொழாதவர்களால் அது அறவே சாத்தியமில்லை என்பதையும் தொழுகை எனும் இறைவணக்கம் தான் மனிதனை தீய வழியிலிருந்துத் தடுத்து நேர்வழியில் செலுத்தும் என்பதையும் பார்த்தோம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதால் தீயவழிக்கு இழுத்துச் செல்லும் கேடுகெட்ட கலாச்சாரம் மிகுந்த காலத்தில் வாழ்ந்து வருவதால் குழந்தைகளின் சிறுப் பிராயத்திலேயே நேர்வழியில் செலுத்தும் தொழுகையைப் புகுத்தி விட வேண்டும் தாமதித்தால் தீய கலாச்சாரம் உள்ளத்தில் புகுந்து விட்டால் முற்றியப் பிறகு மாற்றுவதுக் கடினமாகி விடலாம்.   
ஐம்பதிலும் வளையுமா ?
ஐம்பதில் வளைந்தவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று ஒரு சிலரைப் பார்த்து தங்கள் குழந்தைகளுக்குத் தொழுகையை ஏவும் விஷயத்தில் பெற்றோர்கள் நாட்களை தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் பார்க்கும் ஐம்பதில் வளைந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வால் வளைக்கப்பட்டவர்கள் என்பதைக் காணத் தவறி விடுகின்றனர்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y