அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, February 22, 2011

பிற இயக்க பிரசுரங்களைப் பரப்பலாமா?


கேள்வி : இன்று மார்க்க பிரச்சாரங்களை , நோட்டீஸ் பிரசுரம் மூலம் நமது ஜமாஅத் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர் , அந்த வகையில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்புகள் நோட்டீஸ் பிரசுரம் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ?, உதாரணமாக தொழுகையின் அவசியம், மறுமை இது போன்ற பொதுவான தலைப்புகளில் நோட்டீஸ் பிரசுரம் மற்றவர்கள் வெளியிட்டால் மற்றும் குர்ஆன் , ஹதீஸுக்கு உட்பட்டு பல்வேறு தலைப்புகளில் வேறு பலரும் வெளியிட்டால் நாமும் அதை விநியோகம் செய்யலாமா , கொள்கை அடிப்படையில் சிக்கல் என்று மறுத்தால் குர்ஆன் , ஹதீஸ் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , ஜமாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா? சிலர் ஜமாஅத் வெறியை உங்களுக்குள் வளர்க்காதீர்கள் குர்ஆன் , ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்களே , எனவே குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு வேறு யார் விநியோகித்தாலும் நாமும் அதை விநியோகம் செய்யலாமா ? 

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான வாதம் போல் தோன்றினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்து பார்த்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.


தவறான கொள்கை உடையவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் சரியான பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்றால் அதை நாம் பரப்பும் போது மக்களிடம் இரண்டு செய்திகள் சென்றடைகின்றன. தொழுகையின் சிறப்பு பற்றிய செய்தியும் அதை வெளியிட்ட இயக்கம் நல்ல இயக்கம் இயக்கம் என்ற செய்தியும் சேர்ந்தே மக்களிடம் சென்றடையும். அதுவும் நாமே அதை பரப்பும் போது தவ்ஹீத் சகோதரர்களில் துவக்க நிலையில் உள்ளவர்கள் அந்த இயக்கம் நல்ல இயக்கம் என்று கருதுவார்கள். இதன் பின்னர் அந்த இயக்கம் வெளியிடும் தவறான கொள்கைகளூம் சரியான கொள்கைகளாக ஆரம்ப நிலையில் உள்ள சகோதரர்களுக்குத் தோற்றம் அளிக்கும். இதையும் சேர்த்தே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைக் காணலாம்.
காதியானிகள் என்ற காபிர் கூட்டம் தொழுகை குறித்து சரியான தகவல் அடங்கிய பிரசுரம் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் உள்ள விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அதை நீங்கள் பரப்பினால் காதியானிகள் நல்ல பணி செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணம் எற்படும்.  இப்படியே சில பிரசுரங்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த பின்னர் மிர்சா குலாம் என்பவன் நபி என்று கூறும் பிரசுரத்தையும் நம் மக்கள் மத்தியில் பரப்புவார்கள். இதனால் விபரமில்லாத மக்கள் வழிகேட்டுக்குச் செல்ல நேரிடும்.
அது போல் கள்ளக் கிறித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டும் வகையில் பிரசுரம் வெளியிட்டால் அதில் உள்ளது என்ன என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. இதன் பின்னணியில் உள்ளதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இப்படி சில பிரசுரங்களைப் பரப்பி அப்பாவி முஸ்லிம்கள் உள்ளத்தில் இடம் பிடித்த பின் இயேசு இறைமகன் என்ற கருத்தையும் அவர்கள் பரப்பும் போது அவர்கள் மீது இருந்த நல்ல எண்ணம் காரண்மாக அப்பாவிகள் வழி கெட்டுப் போக நேரிடும்.
அது போல் கள்ள பைஅத் கூட்டம் வரதட்சனை பற்றி வெளியிடும் பிரசுரத்தைப் பரப்பினால் அதனால் அந்த இயக்கம் மார்க்கத்தைச் சரியாகச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற கருத்தை நாமே ஏற்படுத்தி விடுகிறோம். இதன் பின்னர் அந்த இயக்கம் விரல் அசைத்தல் கைகளை நெஞ்சில் கட்டுதல் ஆகியன சின்ன விஷயங்கள் என்று பிரசுரம் வெள்யிடுவார்கள். நாம் ஏற்படுத்திய அந்த நல்ல எண்ணம் காரண்மாக அது சரியானது என்று சில அப்பாவிகள் நினைக்கக் கூடும்.
மார்க்கத்தைச் சொல்லக் கூடிய இயக்கம் என்ற தோற்றம் தரும் எந்த இயக்கத்தின் பிரசுரமாக இருந்தாலும் அந்த இயக்கம் குர் ஆன் ஹதீஸை மட்டும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளதா என்று கவனித்துதான் பரப்ப வேண்டும். இல்லாவிட்டால் தீய கொள்கை உடையவர்களை நல்ல கொள்கை உடையவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய குற்றம் நம்மைச் சேரும்.
அதே சமயம மார்க்கம் சம்மந்தப்படாத விஷயத்தை மார்க்கம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாத ஒரு இயக்கம் வெளியிட்டால் அது சரியானதாகவும் இருந்தால் அதைப் பரப்பலாம். உதாரணமாக பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து இடது சாரிகள் ஒரு பிரசுரம் வெளியிட்டால் அதை நாம் பரப்பலாம். காரணம் அவர்கள் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் எனச் சித்தரிக்கும் பிரசுரம் வெளியிட மாட்டார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு இயக்கத்துக்கு நாம் ஏற்படுத்தும் நற்பெய்ர காரண்மாக அவர்கள் மூலம் எதிர்காலத்தில் இஸ்லாம் குறித்து தவறான கருத்து பரவும் என்றால் அது போன்ற பிரசுரத்தை நாம் பரப்பாமல் அதை நாமே தயாரித்து நமது பெயரிலோ எந்தப் பெயரும் இல்லாமலோ பரப்பலாம்.
வரதட்சனை குறித்து பிரசுரம் வெளியிடுவதாக இருதால் அதை நாமே வெளியிடலாமே? அதற்கு என்ன தடை உள்ளது?
பிற இயக்கத்தினரை நமது மேடையில் நாம் ஏற்றுவதில்லை என்பதை கொள்கையாக வைத்துளோம். 


நன்றி ஆன்லைன்பிஜே 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y