அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, May 31, 2011

ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம்


கடந்த 2011 மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள YWCA மஹாலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் முன்கூடியே மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இரண்டு நாட்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவேன் என்ற உறுதிமொழி அடங்கிய போஸ்ட் கார்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டு அதை மாவட்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்பிவைக்க, அதனடிப்படையில் முன்கூட்டியே அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பெயர் மற்றும் பொறுப்புகளுடன் பிரிண்ட் செய்யப்பட்ட நுழைவுச்சீடுக்கள் வழங்கப்பட்ட பிறகே மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளை காணும் போதே மாநில நிர்வாகத்தின் திட்டமிடுதலை அறியமுடிந்தது.

Sunday, May 29, 2011

இஸ்லாதில் அனுமதிக்கப்பட்ட புகழ்


அல்லாஹ்வை மறந்து தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தாத வகையில் உண்மையை உரைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் புகழ்ந்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் நடந்துள்ளது.


உண்மை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில்...
நாங்கள்நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது சில பேர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக (போர் பொருட்களை) கேட்டுகொண்டேயிருந்தனர். இறுதியாக (நபி) அவர்களை ஸமுரா என்ற முள் மரத்தில் தள்ளி கொண்டு சென்றனர். இதனால் நபி(ஸல்) அவர்களின் மேலாடை அந்த மரத்தில் சிக்கி கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நின்று விட்டு சிக்கி கொண்ட மேலாடையை எடுக்க விடுங்கள். மிகப் பெரிய இந்த முள் மரம் அளவுக்கு எனக்கு அருட்கொடை இருந்தால் அதனை நான் உங்களுக்கு பங்கு வைத்து கொடுத்திருப்பேன். அப்போது என்னை கஞ்சனாகவும் பொய்யனாகவும் கோழையாகவும் பார்க்க மாட்டீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸுபைர் இப்னு முத்யீம் (ரலி) நூல் : புகாரி 2821

Saturday, May 28, 2011

தமாமில் நடந்த மாபெரும் இரத்ததான முகாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டலம் சார்பாக கடந்த 27-05-2011 வெள்ளிக்கிழமை அன்று தம்மாம் 1 மற்றும் 2 கிளைகள் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் தம்மாம் ஜெனரல் ஹாஸ்பிட்டல் உடன் இனைந்து நடத்தப்பட்டது.

ரியாத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்


சவூதி அரேபியாவின் ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 11வது மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 27-5-2011 அன்று நடைபெற்றது.
ரியாத் மண்டலம் நடத்திய இம்முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்தனர்.
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் 27-05-2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இம்முகாம் 

Friday, May 27, 2011

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்! விண்ணப்ம் இனைக்கபட்டுள்ளது


கல்வி உதவி தொகை பெற தகுதியான சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை (புதியவை மற்றும் புதுப்பித்தல்) நடப்பாண்டிற்கு வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்று சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஊழலுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குஜராத்தில் அண்ணா ஹசாரே அறிவிப்பு


மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

Thursday, May 26, 2011

கொட்டி கிடக்கிறதா வெளிநாட்டில் ?


ரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

மாலைமலரின் பொய் செய்தி?

பிரான்சில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாதி நியாஸ் அஹ்மதுவின் தாயார் மாயம் என்ற ஒரு பொய் செய்தியை இன்று மாலைமலர் சென்னை பதிப்பில் வெளியிட்டுள்ளது ஆனால் பாத்திமா என்ற அந்த பெண்மணி எங்கும் ஓடிப்போகவில்லை மேலுரிலேயே தான் இருக்கிறார்.

இன்று மே-25 காலை முதலே பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் அவரின் வேதனையான பேட்டியை தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்  உண்மை இவ்வாறு இருக்கு இன்று மே-25 மாலை வெளியான இந்த மாலைமலரின் அவதூறு செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது நியாஸ் தீவிரவாதியா இல்லையா என்ற சர்ச்சைக்குள் நாம் போக விரும்பவில்லை ஆனால் அடாவடியாக அவரின் தாயாரையும் இதில் சம்பந்தப்படுத்தி தங்களின் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் கொள்ள துடிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 

Wednesday, May 25, 2011

கற்பா ? கல்லூரியா ?


நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)

·                     பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.

Tuesday, May 24, 2011

2011 ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் புனித பயணம் செல்லவிறுப்பவர்கள் பட்டியல்


சென்னை:தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார். இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஹஜ் பயணம் செல்ல ஏழு குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 70 வயதுக்குப் மேற்பட்டோர், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள் என 981 பேர் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட்டனர்.எஞ்சியுள்ளவர்களுக்கு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

தேர்வு செய்யப்பட்டோர் 
விவரத்தை www.hajcommittee.com மற்றும்  www.hajjtn.org ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 


மதுரையிலிருந்து நேரடி விமானம்: இந்த ஆண்டு முதல் மதுரையிலிருந்து ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக, இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியது:தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து விமானத்தில் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மதுரையிலிருந்து நேரடியாகச் செல்ல விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதேபோல், ஆந்திர மாநிலம் ராய்ப்பூரிலிருந்தும் ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. உடமைகளைக் கொண்டு செல்வதற்கு, ஹஜ் குழு இலவசமாக பெட்டிகளை வழங்குகிறது.புதுச்சேரி, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஹஜ் ஹவுஸ் கட்ட மத்திய அரசு 2 கோடி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமும் ஓதவேன்டிய துஃஆக்கள்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.
ஆதாரம்: நஸயீ 5391, 5444
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
இதன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்வழி தவறி விடாமலும்அநீதி இழைக்காமலும்அநீதி இழைக்கப்படாமலும்மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: திர்மிதீ 3355
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள் :
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
இதன் பொருள் வருமாறு:
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
ஆதாரம்: நஸயீ 1327

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

''பொம்பள சிரிச்சாப் போச்சு''என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.


ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.

Monday, May 23, 2011

எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2011 
அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.



இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர் 

அல்தாஃபி 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.



மாநாட்டை போல் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்!

 


 

Sunday, May 22, 2011

மமகட்சியின் மண்டைக் கனம்


மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்


இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.


ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

Thursday, May 19, 2011

வெற்றியாளர்கள் யார்? நல்லறங்கள் செய்பவர்கள்


இஸ்லாம் மனிதர்களுக்கு நல்லறங்களை செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.
திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர ஆவர். அல்குர்ஆன் ; 28;67
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அல்குர்ஆன் ; 22;77
எதுவெல்லாம் நல்லறங்கள் ?
ஒரு முஸ்லிம் மார்க்கக் கட்டளைகளை மீறாமல் அவன் செய்யும் அனைத்து காரியங்களையும் இஸ்லாம் நல்லறங்களாகவே பார்க்கிறது. தனக்குரிய கடமைகளை அவன் செய்வதிலிருந்து குடும்பத்தினரை அவன் கவனிப்பதும்,மற்றவர்களிடத்தில் அவன் உறவு பாராட்டுவதும், சிரிப்பதும், உறங்குவதும், சாப்பிடுவதும் அவனுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு அவன் பொறுமை காப்பதற்கும் ஆபத்தான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு அவன் உதவுவதும் நல்லறங்கள் ஆகும்.

குமரியில் மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

இன்ஷா அல்லாஹ், குமரி மாவட்டத்தில். 
" மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு"
தேதி   : ஜூன் 5 2011, ஞாயிறு.  
நேரம் : மாலை 4 மணிக்கு. 
இடம் : கோட்டார், நாகர்கோயில்.

எழுச்சியுரை : ரஹ்மத்துல்லாஹ், TNTJ பொதுச் செயலாளர்.
தலைப்பு : "நரகத்திற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்". 

எழுச்சியுரை :ஷம்சுல்லுஹா ரஹ்மானி,TNTJ மேலாண்மைக் குழு தலைவர்  தலைப்பு : "தடம்புரளும் தவ்ஹீத்வாதிகள்". 

எழுச்சியுரை : P.ஜைனுலாபிதீன், TNTJ மாநில தலைவர்.
தலைப்பு : "தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு".

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட அனைவரும் அணிதிரள்வீர்.


Wednesday, May 18, 2011

பயணிகளின் கவனத்திற்கு


இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத் திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக் கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம். இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரி வாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டி ருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது. அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்கு கின்றது. பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம். அவைகளை அறிவதின் மூலம் வீணான சிரமங்களை தவிர்த்து, பயணத்தை நன்மையானதாக மாற்றலாம்.

Monday, May 09, 2011

யார் மன நோயாளி !?


சென்ற வார மக்கள் உரிமையில் தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்தி ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருந்த கடிதம் படித்தேன். அதிலே ஜவாஹிருல்லா அவர்கள் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைப் பற்றி எழுதி வரும் போது பிஜெ சாயப் அவர்களைப் பற்றி மனநோயாளி என்றும் அவர் எப்போதுமே தமுமுகவுக்கு எதிராகத் தான் முடிவெடுப்பார் என்றும் எழுதியிருந்தார்.

நடந்து முடிந்த தேர்தலிலே நீங்கள் எங்கள் தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டீர்கள். தமுமுகவை ஆதரித்தும் எதிர்த்தும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் களமிறங்கினார்கள். வழக்கம் போல பிஜெ சாயப் இந்த தடவையும் தமுமுகவுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார். அவர் தமுமுகவுக்கு எதிரான நிலைபாடு எடுத்ததுமே அவர் மீது நாங்கள் கோபப்பட்டோம்.

பிஜெ சாயப் அவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமுமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் தன் சொந்த பகையை வைத்துக் கொண்டு எதிர்க்கிறாரே! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல பிஜெ சாயப்பின் பிரச்சாரம் இருக்கிறதே இது நம் சமுதாய ஒற்றுமையை பாதிக்குமே என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தமுமுகவினரின் நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்த போது தான்அவர் எடுத்த நிலைபாடு மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தேன். பிஜெ சாயப்பிற்கும் எங்களுக்கும் மார்க்க விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நிலைபாட்டில் அவரின் ஜமாத் மட்டும் தான் சமுதாய நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கட்சியை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல இலகுவாக அறிந்து கொண்டோம். ஆனாலும் தமுமுகதான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்பதை பல ஆண்டுகள் நம்பிவந்த நான்என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்எங்கள் பகுதி மக்களுக்கும் மற்றும் என் நண்பர்கள் வட்டாரத்திலும் தமுமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லிவந்தேன். எதுவரை தெரியுமா?


பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி


பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு
இந்த இடத்த தோண்டி பாருங்க அதுல என்னோட முப்பாட்டனோட முப்பாட்டன் உடைய கை தடி கிடக்கும் அதுனால இது என்னாடோ இடம்,
இந்த இடத்துல தான் நான் பிறந்தேன் அதுனால இது என்னோட இடம் ,
எங்க கடல காங்கேயன் சாமி மைனரு அவருக்கு பதிலான நான் வழக்கு போட்றேன் அந்த சாமி இங்க தான் தூங்கினாரு அதுனால இந்த எடம் என்னோடதுன்னு
ஆளுக்குள் ஆள் வழக்கு பொட்ருவாங்களே ! இப்படி வழக்கு போட்டா அப்புறம் கோர்ட் என்ன கதியாவது ன்னு சுப்ரிம் கோர்ட் சொல்லுது

Sunday, May 08, 2011

ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

தமிழகத்தில் சமுதாய இயக்கங்கள் என்றழைக்கப்படும் முஸ்லிம் லீக்குகளில், ஒரு லீக் திமுகவுடன் இருக்கும்போது மற்றொரு லீக் அதிமுகவுடன் இருக்கும்.


ஒவ்வொரு அணியும் தாங்கள் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் சமுதாயத்திற்குத் துரோகமிழைத்தாலும்அதற்கு ஆதரவளித்து முட்டுக் கொடுத்துக் கொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவர்; தங்கள் அடிமைசாசனத்தை உறுதி செய்வர். அத்துடன் வஞ்சகமில்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைவானத்திற்கும் பூமிக்குமாகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.


தங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்காக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைக்கடவுளாக்கி மகிழ்வார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் பேராசிரியர் காதர் மைதீன் ஒரு தேர்தல் கூட்டத்தில்கருணாநிதியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசியதாகும்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y