அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, February 28, 2012

அழைப்பு பணியின் அவசியம்! ஆன்லைன் நிகழ்ச்சி


கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29-02-12] கடைசி நாள்


மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.
நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Monday, February 27, 2012

அம்மா நம்பிவிடாதீர்கள்!

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பாசமுள்ள மகன் தன் தாயிடத்தில், தனைப்பற்றிய ஒரு சுயவிளக்கத்தை அளிக்கும் பாசக்கதறல் என்று ஒரு கனம் சிந்திக்கின்றீர்களா? அதுதான் இல்லை; இவ்வாறு, அம்மா நம்பிவிடாதீர்கள்! என்ற தோரணையில் மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ்அவர்கள் டெக்கான் குரொனிக்கல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் தான், அம்மா நம்பிவிடாதீர்கள்! என்று நாம் வழங்கியுள்ள தலைப்பு.

அது என்ன அம்மா நம்பிவிடாதீர்கள்! : அம்மா நம்பிவிடாதீர்கள்!.?
அப்படியென்றால் என்னவென்று நீங்கள் கேட்கும் கேள்வி நமக்கு விளங்குகின்றது.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று, திருச்சி மாவட்டம் முழுவதும், திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கு நன்றி! என்ற தலைப்பிட்டு அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டரால் ஒரே பரபரப்பு! பார்க்கக்கூடிய மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளவில்லை. போஸ்டரை ஒட்டிய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வுக்குத்தான் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கான காரணம் வருமாறு :

Sunday, February 26, 2012

பெற்றோர்களின் சிந்தனைக்கு!

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் செயின் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி இந்த பள்ளியில் ஹிந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்த பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 9  அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய பாடங்களும் படிப்பினைகளும் நிறைய உள்ளன இந்த கொலைக்கு காரணம் என்ன என்று அந்த மாணவனிடம் போலீசார் விசாரித்தபோது அந்த மாணவன் அளித்த வாக்குமூலம் நாம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

Friday, February 24, 2012

தடையில்லா மின்சாரம் சாத்தியமே!


எட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள்.

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறிசுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியானமின்சாரம் இருந்தது. தனியார்களால் மின்உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்காலகட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின்இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக்கட்டணத்தைக்கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்துஅலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால்இந்த நிலை இருந்தது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீனசாதனங்களும், சொகுசானசாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விடநூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.
ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி,கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ்,ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார்பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும்.பயன்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வந்த ஆள்வோர் மின்சாரத்தைமட்டும் பயன்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி செய்வதில் மிக மிக மந்தமாக செயல்பட்டதன்விளைவைத்தான் கடந்த சிலஆண்டுகளாக நாம் அனுபவித்து வருகிறோம்.

Thursday, February 23, 2012

இருளில் மிதக்கும் தமிழகம். விரைவில் மூழ்கும் அபாயம்.


தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அறன்டுப் போன முதல்வர் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின் வெட்டை மூன்று மணி நேரமாக அதிகப்படுத்தவும் சென்னைக்கு வெளி மாநிலங்களில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டை மணி நேரமாக குறைக்கவும் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு நேரமாக இருந்த மின்வெட்டை இன்னும் ஒரு நாள் அதிகப்படுத்தி மற்ற தினங்களில் மின்வெட்டு இல்லாமல் சப்ளை செய்வதற்கும் மின்வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சனுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆட்டைப் பிடித்து குட்டியில் விட்டும்குட்டியைப் பிடித்து ஆட்டில் விட்டும் கணக்கை ஒப்புவித்து தப்பிக்க நினைத்த கதையாகத்தான் இது அமையுமேத் தவிற தமிழகம் முழுமைக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க எந்த முயற்சியையும் அரசு மேற்கொண்டதாக அமையாது.

நாற்காலி  ஜாக்ரதை !!
எப்படியாவது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடுவார்கள் அதிலிருந்து மின்சாரத்தை கொடுத்து மக்களை சரிக் கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வேறு முயற்சியில் அரசு இறங்காமல் இருப்பதாகவேக் கருதுகிறோம்.

Tuesday, February 21, 2012

பிஜேயை மட்டும் குறி வைப்பது ஏன் ?

கேள்வி : இந்த ஜமாத்தை குறைகூறக்கூடிய பல நபர்களை பார்த்துள்ளேன் இந்த ஜமாஅத்தில் நிவாகிகள் மற்றும் பேச்சாளர்கள் என்று பல்லாயிரக்கான பேர் இருக்கும்போது ஜாமத்தை பற்றி ஃபித்னா செய்வதாக இருந்தாலும் அவதூறு சொல்வதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் பிஜே என்ற உங்களை மட்டுமே திட்டக்கூடிய இந்த ஜாமத்தின் எதிரிகளின் செயல்பாடுகள் இந்த பிரசாரதிர்க்கும் நமது ஜமாஅதிர்க்கும் பலமா பலவீனமா? 
சமீபத்தில் ஒரு கிருத்துவ மூதாட்டியிடம் பைபிளிலிருந்து சில கேள்விகளை கேட்டேன் சுதாரித்துக்கொண்ட அந்த மூதாட்டி உங்களை சொல்லிக் குற்றமில்லை உங்களையெல்லாம் தூண்டி விடுகிறானே அந்த பிஜேவை சொல்லவேண்டும் அவன்தான் இதற்க்கெல்லாம் காரணம் என்று சொன்னதை கேட்க்க முடிந்தது. 
மற்று மததினர்கூட உங்களைத்தான் குறிவைத்து தாக்குகிறார்கள் என்றால் இது குறித்து உங்களின் கருத்து என்ன? 
-கலீலுர்ரஹ்மான் சென்னை 

Saturday, February 18, 2012

பங்களிப்பு ஒரு முறை பலன்கள் இறுதிவரை ஆன்லைன் உரை சகோ.பி ஜே!



ஒரே குடையின் கீழ்




Sunday, February 12, 2012

சினிமா வன்முறை காட்சிகள்தான் என்னை கொலைகாரன் ஆக்கியது!

சென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.

மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.

சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.

கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.

Tuesday, February 07, 2012

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?)


தலைப்பைப்பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!

ஆனால், இப்படி "தானே" புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித்தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகுமுதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்துஅரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.

அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுக காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y