அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566
Showing posts with label தமுமுக. Show all posts
Showing posts with label தமுமுக. Show all posts

Tuesday, August 14, 2012

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎

இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் ‎நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை ‎நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் ‎இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் ‎செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி ‎அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது ‎கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; ‎இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.‎‎ 

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த ‎கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.‎

Sunday, July 29, 2012

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!‎

ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎
‎ 
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎
‎ 
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று ‎நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.‎
‎ 

Friday, July 27, 2012

சலீமுல்லாகான் குமுதம் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டி!

காலியாகும் மமக கூடாரம்!

கடந்த 15.07.12 அன்று ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுர மாவட்டத் திலுள்ள மண்டபம் திருப்புலாணி பாம்பன் இராமேஸ்வரம் வேதாளை தங்கச்சிமடம் ஆகிய தமுமுக மற்றும் மமகட்சி கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு தமுமுக மற்றும் மமக மாநிலச்செயலாளர் சலீமுல்லாகான் (இவர் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மமக சார்பில் போட்டியிட்டு மமக  வேட்ப்பாளர்களிலேயே அதிக வாக்குப்பெற்றவர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள்) தலைமையில் மற்றும் மமகவின் மாவட்ட செயலாளர் தஸ்ஃபிக் அலி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அஜ்மல் மற்றும் எராளமான மமகவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, July 10, 2012

அகில உலக ஜால்ரா மன்னன் புளுகு மன்னனாக மாறிய கதை!

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎என்ற தலைப்பில், மானம் கெட்ட வாத்தியார், சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை  புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.

சட்டமன்றத்தில் ஜனாஸாவாக வீற்றிருக்கும் ம.ம.கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்துக் கொண்டு உற்சாகமாக போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை அளித்துள்ளார்.
ம.ம.கட்சி தொண்டர்களே இந்த விஷயத்தில் அவரைக் காரித்துப்பி கேள்வி கேட்டவுடன் செய்வதறியாது விழிபிதுங்கிய சட்டமன்ற ஜனாஸா, வேறுவழியின்றி தனது அந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்தி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மய்யித்து அறிக்கை குறித்து இங்கே அலசுவோம்.
இதுவரைக்கும் இவர், “அகில உலக ஜால்ரா மன்னன்” என்ற பட்டம் பெறுவதற்குத்தான் முயற்சி செய்து வருகின்றார் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இவரது இந்த அறிக்கையைப் பார்த்தபிறகுதான், “அகில உலக புளுகு மன்னன்” என்ற பட்டமும் தனக்கே வர வேண்டும் என்று இவர் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார் என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.

Wednesday, July 04, 2012

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎


அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் ‎சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா?‎ – வெளிவராத உண்மைகள்!!‎
மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். ‎இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை ‎எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. ‎அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; ‎அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் ‎பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.‎
ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ‎அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் ‎இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை ‎புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன ‎பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் ‎கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி ‎உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள ‎முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ‎ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.‎
பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக ‎அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான ‎கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் ‎சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‎கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ‎ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் ‎கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி ‎வருகின்றன.‎

Friday, May 25, 2012

ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை! (வீடியோ இனைப்பு


அரசியல் என்று போய்விட்டாலே ,பதவி சுகம் கண்டுவிட்டாலே அந்த பதவிசுகத்திற்காக எப்படிப்பட்ட இழிச்செயளையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒருவன் ஆளாகிவிடுவான் என்பதற்கு ம .ம .கட்சி சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது .எங்களுக்கு சீட்டுகள் யார் கூடுதலாகத் தருகின்றார்களோ அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பச்சோந்தித்தனம் செய்வதில் ஆரம்பித்து ஓட்டுப் பொறுக்குவதற்காக மானமிழந்து .மரியாதை இழந்து ,கடைசியில் வாரியப்பதவி தரமாட்டார்களா?என்று ஒரு சிறு எலும்புத்துண்டுக்காக ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்து அவரை துதி பாட ஒரு எல்லையே இல்லை என்ற அளவிற்கு செய்துவிட்டனர் ம ம கட்சியினர் .

கூடிய விரைவில் ஜால்ரா தட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று தமிழக கட்சிகளே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு ,சிறந்த ஜால்ரா தட்டி என்ற சிறப்புப் பட்டத்தை இவர்கள் தட்டிச் சென்று விடுவார் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம் .


Monday, February 27, 2012

அம்மா நம்பிவிடாதீர்கள்!

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பாசமுள்ள மகன் தன் தாயிடத்தில், தனைப்பற்றிய ஒரு சுயவிளக்கத்தை அளிக்கும் பாசக்கதறல் என்று ஒரு கனம் சிந்திக்கின்றீர்களா? அதுதான் இல்லை; இவ்வாறு, அம்மா நம்பிவிடாதீர்கள்! என்ற தோரணையில் மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ்அவர்கள் டெக்கான் குரொனிக்கல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் தான், அம்மா நம்பிவிடாதீர்கள்! என்று நாம் வழங்கியுள்ள தலைப்பு.

அது என்ன அம்மா நம்பிவிடாதீர்கள்! : அம்மா நம்பிவிடாதீர்கள்!.?
அப்படியென்றால் என்னவென்று நீங்கள் கேட்கும் கேள்வி நமக்கு விளங்குகின்றது.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று, திருச்சி மாவட்டம் முழுவதும், திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கு நன்றி! என்ற தலைப்பிட்டு அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டரால் ஒரே பரபரப்பு! பார்க்கக்கூடிய மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளவில்லை. போஸ்டரை ஒட்டிய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வுக்குத்தான் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கான காரணம் வருமாறு :

Tuesday, February 07, 2012

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?)


தலைப்பைப்பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!

ஆனால், இப்படி "தானே" புயல் தங்களது மாவட்டத்திற்கு வராதா என புயல் வராத மாவட்டங்களில் வசிக்கும் தமிழக மக்கள் ஏங்கித்தவிப்பதாக மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் என்பவர் சட்ட சபையில் முழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கவர்னர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகுமுதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். பதிலுரையில் அறிவிக்கப்பட்ட சலுகைகளுக்கு நன்றி தெரிவித்துஅரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் சட்டசபையில் பேசினர்.

அப்போது ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கு ஏற்ப முதல்வருக்கு ஜால்ரா தட்டிப் பேசினார்கள். அப்போது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வாத்தியார் அவர்கள் அதிமுக காரர்களே மூக்கின் மேல் விரல் வைக்கக்கூடிய அளவிற்கு முதல்வருக்கு ஜால்ரா தட்டி, அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் ஜால்ரா தட்டுவதில் விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார்.

Sunday, May 22, 2011

மமகட்சியின் மண்டைக் கனம்


மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்


இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.


ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

Monday, May 09, 2011

யார் மன நோயாளி !?


சென்ற வார மக்கள் உரிமையில் தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்தி ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருந்த கடிதம் படித்தேன். அதிலே ஜவாஹிருல்லா அவர்கள் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைப் பற்றி எழுதி வரும் போது பிஜெ சாயப் அவர்களைப் பற்றி மனநோயாளி என்றும் அவர் எப்போதுமே தமுமுகவுக்கு எதிராகத் தான் முடிவெடுப்பார் என்றும் எழுதியிருந்தார்.

நடந்து முடிந்த தேர்தலிலே நீங்கள் எங்கள் தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டீர்கள். தமுமுகவை ஆதரித்தும் எதிர்த்தும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் களமிறங்கினார்கள். வழக்கம் போல பிஜெ சாயப் இந்த தடவையும் தமுமுகவுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார். அவர் தமுமுகவுக்கு எதிரான நிலைபாடு எடுத்ததுமே அவர் மீது நாங்கள் கோபப்பட்டோம்.

பிஜெ சாயப் அவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமுமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் தன் சொந்த பகையை வைத்துக் கொண்டு எதிர்க்கிறாரே! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல பிஜெ சாயப்பின் பிரச்சாரம் இருக்கிறதே இது நம் சமுதாய ஒற்றுமையை பாதிக்குமே என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தமுமுகவினரின் நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்த போது தான்அவர் எடுத்த நிலைபாடு மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தேன். பிஜெ சாயப்பிற்கும் எங்களுக்கும் மார்க்க விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நிலைபாட்டில் அவரின் ஜமாத் மட்டும் தான் சமுதாய நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கட்சியை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல இலகுவாக அறிந்து கொண்டோம். ஆனாலும் தமுமுகதான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்பதை பல ஆண்டுகள் நம்பிவந்த நான்என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்எங்கள் பகுதி மக்களுக்கும் மற்றும் என் நண்பர்கள் வட்டாரத்திலும் தமுமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லிவந்தேன். எதுவரை தெரியுமா?


Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்...

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்
தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.

Friday, February 25, 2011

மானம் காக்கப் புறப்பட்டு மானமிழந்த கதை!


சமுதாயத்தின் மானத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு நாங்கள் தான் எடுத்து வைத்துள்ளோம் என பில்டப் கொடுத்த மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அ.தி.மு.க போட்ட 3 தொகுதி பிச்சை சீட்டுக்களை வாங்கிக் கொண்டு மானமிழந்து வேறு வழயின்றி உலக ஆதாயத்திற்காக சில எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்கள் மானம் காக்க புறப்பட்ட வரலாற்றையும், இப்போது மானமிழந்து நிற்கும் அசிங்கத்தையும் தற்போது நாம் அசைபோட்டுப் பார்க்கலாம்.
ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிக்கத் தான் ம.ம. கட்சி தொடங்கப்பட்டது என்றால் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
அதாவது, ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகள். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்ற இவர்களது கட்சி துவங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 12 தொகுதிகளையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரை எம்.பித் தொகுதிக்கு நிகரான 3சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க விடம் வாங்கி கேவலப்பட்டுள்ளனர்.

ஈமானையும் இழந்த தமுமுக


குர்ஆன் ஹதீஸ் எழுதக்கூடிய பலகையில்
மௌலீது விளம்பரம் 
கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டு, பூந்தி, ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.
இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.

Wednesday, February 02, 2011

18 தொகுதிகளா! 24 தொகுதிகளா!- எந்திர வாக்கு பதிவு என்பதால் தேர்தலில் போட்டி இடுமா


மமக என்ற கட்சி  தொடங்கப்பட்டதின் முக்கிய நோக்கம், எம்.பி  மற்றும் சட்ட சபை உறுப்பினர்கள் பதவியில்  மமக கட்சியை சேர்ந்தவர்கள் அமரவேண்டும் என்பதுதான்...மமக கட்சிக்கு முன்பு, தமுமுக கட்சி சார்பாக திமுகவை ஆதரித்தார்கள், வக்பு போர்ட் தலைவர் பதவி கிடைத்தது...திமுக ஆட்சியில் இருந்ததால், சில மரியாதைகள் கிடைத்தது. வக்புபோர்ட் பதவி, அரசியல் மரியாதைகள் , அரசியல் நட்பு , தமுமுக தலைவர்களை திக்கு முக்காட செய்தது....கட்ட பஞ்சாயத்து, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம்,,ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்றவைகள், கட்சியை சார்ந்தவர்களால் நடத்தப்பட்டன..அரசியல் என்றால் இதெல்லாம் சகஜம் என்ற நிலை பிரகடனபடுத்த பட்டது............சில தலைவர்களின் , இந்த அரசியல் போதைக்காக தான் , தமுமுக முன்பு உடைக்க பட்டது அதிலிருந்து , TNTJஎன்ற அரசியலில் போட்டி இடாமல், ஆளுபவர்களை பயமுறுத்தல்தான், நம் அரசியல் என்ற அரசியல் வாக்கியம் வைத்து, இஸ்லாமிய சமுதாய இயக்கம் உருவானது என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

Tuesday, February 01, 2011

ம.ம.கட்சியினர் மானம் காத்த லட்சணம்


தற்போது சமுதாயத்தின் மானத்தை நாங்கள் காக்கப் போகிறோம் என்று கிளம்பியுள்ள ம.ம.கட்சியினர் தி.மு.க கூட்டணியிலிருந்த போது எந்த அளவிற்கு மானம் காத்தார்கள் என்பதனை தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் உணர்வு வாசகன் என்ற முறையில் ம.ம.கட்சியினர் மானம் காத்த (?) சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கின்றேன்.
தங்களது மானத்தையே இவர்கள் காக்க வக்கில்லை; இவர்கள் சமுதாய மானம் காப்பது என்பது எப்படி?:
இவர்கள் சமுதாயத்தின் மானத்தை காப்பது இருக்கட்டும், தி.மு.க கூட்டணியிருந்த போது தங்களது மானத்தையாவது காத்துக் கொண்டிருந்தார்களா? என்று நாம் ஆய்வு செய்தால் இவர்களது மானமே கப்பலில் அல்ல; ஏரோப்பிளேனில் ஏறி பறந்து கொண்டிருந்தது என்று தான் நாம் சொல்ல வேண்டும்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y