அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, August 14, 2012

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎

இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் ‎நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை ‎நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் ‎இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் ‎செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி ‎அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது ‎கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; ‎இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.‎‎ 

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த ‎கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.‎
கடந்த 04.08.12 அன்று லெப்பைக்குடிக்காடு டிஎன்டிஜே கிளைச் செயலாளர் ‎நாசர் அவர்களின் தாயார் ஆயிஷா கனி (வயது 60) அவர்கள் நள்ளிரவு 1.30 ‎மணியளவில் வஃபாத்தாகி விட்டார். ‎‎(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).‎‎ 

லெப்பைக்குடிக்காடு சுன்னத் வல் ஜமாஅத் மேற்கு ஜாமிஆ பள்ளிவாசலில் ‎இந்த செய்தியைச் சொல்லி அறிவிப்பு செய்யச் சொல்ல, நபி வழிக்கு ‎மாற்றமான முறையில் அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டால்தான் நாங்கள் ‎மரணச் செய்தியை அறிவிப்பு செய்வோம். அதற்கு நீங்கள் ‎சம்மதிக்காவிட்டால் நாங்கள் அறிவிப்புச் செய்ய இயலாது என்று அவர்கள் ‎கூறியுள்ளனர்.‎‎ 

மேலும், அப்படி நபி வழி அடிப்படையில் பள்ளிவாசலில் வைத்துத் ‎தொழுகை நடத்தவும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நீங்கள் வேறு ‎எங்காவது தொழுகை நடத்திக் கொள்ளுங்கள். எங்களது மையவாடியில் ‎அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி, அடக்கம் செய்வதற்கு மட்டும் ‎அனுமதியளித்தனர்.‎‎ 

ஆனால், இவர்கள் எப்படி நமது பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸாவை ‎அடக்கம் செய்யலாம் என்று கூறி பெரம்பலூர் மாவட்ட த.மு.மு.க. வின் ‎தலைவர் மீரான் மைதீன் மற்றும் த.மு.மு.க. குண்டர்கள் எப்படியாவது ‎நல்லடக்கத்தைத் தடுத்து நிறுத்தி இவர்கள் நபி வழிக்கு உயிர் கொடுப்பதை ‎மவுத் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் ‎இறங்கியுள்ளனர்.‎‎ 

04.08.12 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு லெப்பைக்குடிக்காட்டில் உள்ள ‎அலி அக்பர் தெருவில், நடுத்தெருவில் ஜனாஸா தொழுகை நடைபெற்றது. ‎அடக்கம் செய்தபிறகு நமது பெரம்பலூர் மாவட்ட பேச்சாளர் முயினுத்தீன் ‎அவர்கள் ஒரு உரை நிகழ்த்தியுள்ளார்.‎‎ 

அப்போது திடீரென்று புகுந்த பெரம்பலூர் மாவட்ட த.மு.மு.க வின் ‎தலைவர் மீரான் மைதீன் மற்றும் த.மு.மு.க. குண்டர்கள் மற்றும் இந்திய ‎யூனியன் முஸ்லிம் லீக்கின் பம்பாய் அப்துல் சுப்ஹான் ஆகியோர் அடங்கிய ‎கொலைவெறிக் கும்பல் பெரம்பலூர் மாவட்டப் பேச்சாளர் முயினுத்தீன், ‎லெப்பைக்குடிக்காடு கிளைச் செயலாளர் நாசர், மற்றும் உறுப்பினர் அலாவுதீன் ‎ஆகியோரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர். தாக்கும் போது ‎உங்களைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலைவெறியுடன் ‎தாக்கியுள்ளனர். காயமுற்ற நமது சகோதரர்கள் பெரம்பலூர் அரசு ‎மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.‎‎ 

உடனடியாக தமுமுக தலைவர் மீரான் மைதீன் மற்றும் அந்தக் ‎கொலைவெறிக் கும்பல் மீது மங்கலம் மேடு காவல்நிலையத்தில் புகார் ‎அளிக்கப்பட்டது.‎‎ 

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மங்கலம் மேடு காவல்நிலையத் ‎துணை ஆய்வாளர் அவர்கள் நேரில் வந்து காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு ‎உள்ளான நமது சகோதரர்களிடத்தில் வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.‎‎ 

நல்லடக்கம் செய்வதற்கு பள்ளிவாசல் ஜமாஅத்தார்களே அனுமதி ‎கொடுத்தபிறகு அதை தடுக்கும் ம.ம.கட்சியினர் இஸ்லாத்தின் அடிப்படையை, ‎நபி வழியை ஒழிப்பதையே இவர்கள் முழு மூச்சாகவும், முழு ‎நேரப்பணியாகவும் செய்து வருகின்றனர் என்பது இந்த நிகழ்வின் ‎வாயிலாகவும் வெட்ட வெளிச்சமாகியது.‎‎ 

நாம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன், வழக்கம்போல ‎நம்முடைய சகோதரர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், நம் ‎சகோதரர்களைத் தாக்கிவிட்டு, தாங்கள் தாக்கப்பட்டதாகவும் பொய்ப் புகார் ‎கொடுத்துள்ளது இந்த சதிகாரக்கும்பல்.‎‎ 

05.08.12 அன்று காலை 11மணியளவில் மங்கலம் மேடு காவல் ‎நிலையத்தில் தற்காலிக பொறுப்பு வகிக்கும் பொறுப்பு ஆய்வாளர் ‎கோவிந்தராஜன் அவர்கள் தலைமையில் தமுமுக குண்டர்களை அழைத்து ‎அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் டிஎன்டிஜேயினர் தங்களது ‎விருப்பப்படி மதச் சடங்குகளை செய்வதற்கு நீங்கள் எப்படித் தடை ‎போடலாம் என்று ஆய்வாளர் கேட்டதற்கு விழிபிதுங்கிய குண்டர்கள் தாங்கள் ‎செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்து, இனிமேல் ‎தவ்ஹீத் ஜமாஅத்தினரின் எந்தப் பிரச்சனையிலும் தலையிட மாட்டோம் ‎என்று கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.‎‎ 

ரமளான் மாதமாக இருந்த காரணத்தினாலும், பிரச்சனையை பெரிதுபடுத்த ‎வேண்டாம் என்பதாலும் நமது நிர்வாகிகள் அவர்கள் திருந்தினால் சரிதான் ‎என்று கூறி பெருந்தன்மையுடன் மன்னிப்பளித்தனர்.‎‎ 

நம்மை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் ஏகத்துவத்தை எதிர்க்கும் தாருஸ் ‎ஸலாம் என்ற டிரஸ்ட்டைச் சேர்ந்த ரஃபீ என்பவன் இந்த விஷயத்தில் ‎தமுமுகவினருடன் சேர்ந்து கொண்டு நம் சகோதரர்களைப் பார்த்து செருப்பை ‎எடுத்துக்காட்டியது இந்தக்கூட்டம் எந்த அளவிற்கு வழிகேட்டில் ஒன்று ‎கூடுகின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக்காட்டுவதாக ‎அமைந்தது.‎

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y