அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 19, 2014

குடந்தையில் மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் .


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு? நேரடி ஒளிபரப்பு

மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
நாள் : இன்ஷா அல்லாஹ்...
19.04.14 - சனிக்கிழமை
நேரம் : இரவு 6.45 மணிக்கு
இடம் : தம்புச்சட்டி தெரு;
மண்ணடி; சென்னை
சிறப்புரை :
பீ.ஜைனுல் ஆபிதீன்
கோவை ரஹ்மத்துல்லாஹ்
குறிப்பு :இந்தப் பொதுக்கூட்டம் ஆன்லைன்பீஜே இணையத்தளத்தில்
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
இந்தப் பொதுக்கூட்டம் மறுநாள் 20.04.14 ஞாயிற்றுக்கிழமை
காலை 9மணி முதல் 11மணி வரை தமிழன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

Friday, April 18, 2014

தமிழன்டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை திமுகவிற்கு ஆதரவு ஏன்


உங்கள் ஒட்டு யாருக்கு இன்ஷாஅல்லாஹ் மாபெரும் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம்!


Tuesday, April 15, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு யாருக்கு?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.
செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிகள் ஆதரவு விபரம்.
சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி
மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.
விரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

Saturday, April 12, 2014

தேர்தலில் அதிமுகவிற்கு அளித்துவந்த ஆதரவு விலக்கல் ஏன்?


Thursday, April 10, 2014

மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால்!

கேள்வி :
விலைபோன ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் காரணமாக மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் அப்போது இந்திய முஸ்லிம்களின் நிலை என்னவாகும்?
-அப்துல் கபூர், சேலம்.

பதில் :
விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடகங்கள் தான் மோடி பிரதமராவார் என்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு சாத்தியமில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். எனவே மோடி ஆட்சியை பிடித்தால் இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் இதற்காக அஞ்சத் தேவையில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முஸ்லிம்களை ஒடுக்க நினைத்தால் முஸ்லிம்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படும். பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்பவர்களும் உண்மை முஸ்லிம்களாக வாழும் நிலை ஏற்படும்.

Friday, April 04, 2014

சந்தர்ப்பவாதமும், சமுதாய துரோகமும் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு!

இன்ஷா அல்லாஹ்
மயிலாடுதுறையில்....

06.04.13 ஞாயிறு அன்று நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டம்,

ஆன்லைன் பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்!


பொதுக்கூட்டம் துவங்கும் சவுதி நேரம் : மாலை 4.30 மணிக்கு....

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை.



நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.


இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y