அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, September 29, 2011

ஆன்லைன் உரை சகோ.பிஜெ

இன்ஷாஅல்லாஹ் வரும் 07-10-2011 வெள்ளி அன்று மதியம் சௌதி நேரம் 2.30 முதல் 4 மணி வரை சகோ. பி.ஜெ அவர்கள் ஆன்லைன் மூலம் உரையாற்றுகிறார்கள் 

தலைப்பு : 
கடல் கடந்தவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்

Wednesday, September 28, 2011

போலி ஒற்றுமை


கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? – ஷமீம்

பதில் : குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான வழியின் பக்கம் அழைக்கும் முற்சியை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைத் தான் நம்மால் செய்ய முடியும். ஒருவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு நேர்வழி காட்டும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (28 : 56)


(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தைஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு


கடந்த சில ஆண்டுகளாக தனியார் நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளே ஹஜ் சர்வீஸ் நடத்தி அது குறித்து பல புகார்களை தவ்ஹீத் ஜமாத் சந்திக்க நேர்ந்ததை அனைவரும் அறிவீர்கள்.
கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பிலோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ இது போன்ற சர்வீஸ்கள் நடத்தும் போது, அந்தக் குறைபாடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அறிவீர்கள்.
மக்கள் மத்தியில் நாம் கட்டிக்காத்து வரும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் இது குறித்து கடந்த 22/09/2011 அன்று மாநில நிர்வாகக் குழு மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அனைத்து சகோதரர்களுக்கும் அறியத் தருகிறோம்.

Saturday, September 24, 2011

நரேந்திர மோடி குறித்து அமெரிக்க CRS அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன ?

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர். ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

Friday, September 23, 2011

ஜெயலலிதா மாறவில்லை

கடந்த தேர்தலின்போது தன்னிடம் அளப்பரிய மற்றம் ஏற்ப்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை ஜெயலலிதா ஏற்ப்படுத்தினார் ஊடகங்கள் அவர் மிகவும் மாறிவிட்டார் என்று பிரச்சாரம் செய்தன மக்களும் அவர் மாறிவிட்டதாக நினைத்து மிருக பலத்துடன் அவரை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்யும் அளவுக்கு அவருக்கு ஆதரவும் அளித்தனர் ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்ப்பட்டதாக  தெரியவில்லை மாற்றம் ஏற்ப்பட்டதாக ஒப்புக்கொண்டாலும் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் அவருக்கு பிடிக்காது என்ற நிலைப்பாட்டில் அவரிடம் நிச்சயம் கடுகளவும் மாற்றம் ஏற்ப்பட வில்லை என்பதை அவரே நிரூபித்து வருகிறார்.

இரெண்டாயிரம் முஸ்லிம்களை கொன்று கருவறுத்த பயங்கரவாதி நரேந்திர மோடியை தனது பதவி ஏற்ப்பு விழாவிற்கு அழைத்து கண்ணியப் படுத்தியதன் மூலம் தான் முஸ்லிம் விரோதிகளின் தோழி தான் என்பதை மீண்டும் பகிரங்கமாக காட்டிக் கொண்டார்  இதில் தன்னிடம் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் உரிமை நேரடி ஒளிபரப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை 23-09-11 அன்று நடைபெறும் ஜித்தா ஆன்லைன் நிகழ்ச்சி இந்திய   நேரம் - இரவு 9.15 முதல் 10.30 மணி வரை
(செளதி அரேபியா நேரம் மாலை 6.45 முதல் 8.00 மணி வரை நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
www.onlinepj.com

தலைப்பு - இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் உரிமை
உரை - பி.ஜைனுல் ஆபிதீன்

Thursday, September 22, 2011

நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.


அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.

அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.

குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது  அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் ? வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

Wednesday, September 21, 2011

இந்த பெயர் தாங்கிகளால் முஸ்லிம்களுக்கு என்றுமே வீழ்ச்சிதான்




2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் - முன்னாள் 
குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள்பஜ்ரங் தள்வி.ஹெ.ச்பி.ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, ‘நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால்,மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடிஎல்லோரையும் பாராட்டினார்.

Friday, September 16, 2011

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
சட்டமன்றத் தேர்தல் மாநில நிர்வாகத்தை தேர்ந்திருப்பதற்கு நடத்தப்படுவதால் மாநில அளவில் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மையைக் கவனத்தில் கொண்டு ஒரு அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது . அது போல் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டு மொத்த இந்தியாவை ஆளக்கூடியவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுவதால் இந்திய அளவிலோ, மாநில அளவிலோ முஸ்லிம் சமுதாய நலன் சம்மந்தப்பட்ட கோரிக்கை அடிப்படையில் ஒரு அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது .


ஆனால் உள்ளாட்சி அமைப்பு என்பது  உள்ளூர் நிர்வாகம் சம்மந்தப்பட்டதாகும். இந்த தேர்தலில் அனைத்து முஸ்லிம்களுக்குமான பொதுவான கோரிக்கை எதையும் வைக்க முடியாது என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் நிலைபாட்டையே இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடர்கின்றது.   தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்தின்  உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

Thursday, September 15, 2011

ஜித்தா மண்டல இந்த வருட (2011) ஃபித்ரா வசூல் விவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் சார்பாக இந்த ஆண்டு ஃபித்ரா தொகை ரூபாய் 800000 (எட்டு லட்சம்) தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
கிளைகள் வாரியாக அதன் விபரம் பின் வருமாறு:
1 Madina 50795
2 Makkah 58928
3 Taif 12048
4 Tabuk 58012
5 Yanbu 49301
6 Al Baha 11506
7 NAJRAN 13169
A செனைய்யா 144759
B Sarafiay Branch 110072
C Sea Port & Balad 110470
D அல் சலாமா 63241
E சுலைமானியா 31687
F கடையநல்லூர் 32542
G மேலப்பாளையம் கிளை 33795
H பொது 17012
I அப்ஹா 2663
மொத்தம் 800000 ரூபாய்

Wednesday, September 14, 2011

ஜன்லோக்பால் ஓர் ஆய்வு


ந்தியாவில் அதிகமாக பேசகூடிய வார்த்தையாகிவிட்டது லோக்பால். அதை பற்றி என்னனே தெரியாத ஒரு கும்பல் சினிமாவில் கதை சொல்லும் போது ஒரு வரியில் கதை சொல்லிவிட்டார் அது எனக்கு பிடித்துபோகிவிட்டது அதனால் நான் இந்தபடத்தை எடுத்தேன் என்பது போல அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடுகிறார் அவரை ஆதரிப்போம் என்று ஒரு கும்பல்.


அன்னா ஹஸாரே யாரு லோக்பால் லா என்னு தெரிந்துகிட்டு ஆதரவு தெரிவித்தால் நல்லது, ஆனால் அப்படி எதுவும் இல்லாம சும்மா குருட்டான் போக்கு’ல நானும் ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டிகொள்கிறேன் என்பது போல பலர் காட்டிகொள்கிறார்கள்.

அன்னா ஹஸாரே க்கு பின்னாடி இருப்பது யார் என்று கூட பார்க்கதவறுகிறார்கள், இதுக்கு முன்னாடி அன்னா ஹஸாரேவின் செயல்திட்டம் எப்படி இருந்தது என்பதையும் பார்பது இல்லை,அப்படி பார்த்து இருந்தார்கள் என்றால் அன்னா ஹஸாரேவை காரித்தான் துப்பியிருப்பார்கள்.அப்படிபட்ட கொள்கைக்கு சொந்தகாரர்தான் அன்னா ஹஸாரே.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது விரட்டி அடித்த மத்திய அரசு ஏன் அன்னா ஹஸாரே இப்படி செய்யமுடியவில்லை அன்னா ஹஸாரேக்கு பின்னாடி பலமான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கு இந்த போராட்டம் நடத்த பல லட்சம் கோடிகள் அன்னா ஹஸாரேக்கு கொடுக்கபட்டு இருக்கிறது, மேலும் பல கோடிகளை வைத்துக்கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது பன்னாட்டு கம்பனிகள் ஏன் இப்படி இவர்கள் நடத்துகிறார்கள் என்பதுக்காண காரணத்த்தையும் நாம் பார்ப்போம்.

இந்தியாவின் பன்னாடு தொழில் நிறுவணங்கள் தொடங்க கடுமையான சட்டதிட்டங்கள் இருந்த்து,அவர்களை அனைத்துவிதங்களிலும் கட்டுபடுத்த சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தது, அதனால் அது அவர்களுக்கு தடையாக இருந்தது அதனால் அதை உடைக்க இந்திய சட்டத்திற்க்கு கட்டுப்படாத ஒரு சட்டத்தையே பன்னாடு நிறுவனங்கள் ஏற்படுத்தியது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் இந்திய அரசியலமைக்கு கட்டுப்படாத புது சட்டதிட்டைதே உருவாக்கினார்கள், அதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து வேரூன்றி இருக்கிறார்கள் அவர்களை கட்டுபடுத்தும் அதிகாரத்தையும் நாம் இழந்துயிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

இப்படி வளர்ந்த அவர்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பணம் கொடுப்பதிலிருந்து தப்பிக்கமுடியவில்லை ஒரு பெரும் தொகை அரசியல்வாதிகளுக்கு கொடுக்கவேண்டி இருக்கிறது,மேலும் இந்தியாவில் சிறு வியாபாரிகளை ஒழித்து தாங்கள் நிலையாக நிற்க எப்படி தாங்கள் உள்ளே வர இந்திய அரசியலமைப்புக்கு கட்டுப்படாத ஒரு சட்டத்தை இயற்றினார்களோ அதுபோல் தங்களை நிலையாக நிலைத்து நிறக்க இப்போது ஒரு சட்டத்தை உருவாக்க முயற்ச்சிகிறார்கள்.

Tuesday, September 13, 2011

முதியோர் இல்ல முதாட்டி மரணம் : அடக்க மறுத்த ஊர் ஜமாஅத் ! ”யாவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே!”


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய நலப்பணிகளில் மிக முக்கியமானது ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகும். தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப் போலக் கருதி தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக் கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் திண்பதையும் நாம் கண்டிருப்போம்.
பெற்றோர்களை அதிகம் பேண வேண்டும் என்றும் வழியுறுத்தும் நம் இஸ்லாமிய மார்க்கத்திலும் இது போன்ற சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நாதியற்று ஒதுங்கி வெயிலிலும் மழையும் கிடந்து அவதிப்பட்டு அசையக் கூட முடியாமல் கிடந்து அங்கேயே அநாதைகளாய் இறந்து போகும் முதியவர்களையும் நாம் கண்டிருப்போம்.

Sunday, September 04, 2011

மேலப்பாளையம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாளையொட்டி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலஅலுவலகம் அருகிலுள்ள ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மேலாண்மைக் குழுத் தலைவரும் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியின் தலைவருமான மவ்லவி எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்துபெருநாள் குத்பா எனப்படும்சொற்பொழிவு நிகழ்த்தினார்அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

Saturday, September 03, 2011

தடை செய்யப்பட்ட தீமைகள்

1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்!

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3) கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்!

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y