அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, September 04, 2011

மேலப்பாளையம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப் பெருநாளையொட்டி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலஅலுவலகம் அருகிலுள்ள ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மேலாண்மைக் குழுத் தலைவரும் மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியின் தலைவருமான மவ்லவி எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்துபெருநாள் குத்பா எனப்படும்சொற்பொழிவு நிகழ்த்தினார்அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இன்று நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்என்று கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றதுலோக்பால் சட்டம் வந்து விட்டால்ஊழலை ஒழித்து விட முடியுமாஏற்கனவே நாட்டில் ஊழலுக்கு எதிரான கடுமையானசட்டங்கள் நாட்டில் இருக்கத் தான் செய்கின்றனஇந்தச் சட்டங்களால் ஊழலை ஒழிக்கமுடிந்ததாலஞ்ச ஒழிப்புத் துறையினரே லஞ்சத்தை வாங்கிக் கொண்டுகுற்றவாளிகளிடம் தகவல் சொல்லி தப்ப வைப்பதை நாம் கண்டு வருகிறோம்.இந்நிலையில் லோக்பால் சட்டத்தால் என்ன செய்ய முடியும்லோக்பால் நீதிபதிகளோ,அதன் ஊழியர்களோ லஞ்சத்தை வாங்கிக் கொண்டு ஊழல்வாதிகளைத் தப்ப விடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளதுஎனவே இந்தச் சட்டங்களால்நிச்சயமாக ஊழலை ஒழிக்க முடியாதுஊழல் ஒழிய வேண்டுமானால் இஸ்லாமியச்சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும்இஸ்லாம் கூறுவது போன்று,மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்கவேண்டும்நாம் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை உள்ளதுஇந்த உலகில் ஊழல் செய்தவர்கள்,அந்த மறுமை உலகில் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டால் நிச்சயமாக ஒரு மனிதன் லஞ்சம் வாங்க மாட்டான்ஊழல் செய்ய மாட்டான்.இவ்வாறு ஷம்சுல்லுஹா தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த சிறப்புத் தொழுகையில் 5000 பெண்கள் உட்பட சுமார் 15000 பேர் கலந்து கொண்டுதொழுகை மற்றும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மாவட்டத் தலைவர் யூசுப் அலீமாவட்டச் செயலாளர் செய்யது அலீநகரத் தலைவர்ரோஷன்செயலாளர் சிராஜ்பொருளாளர் நிவாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்புப்பெருநாள் தர்மமாக 2700 ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் மூன்றரை லட்சம் மதிப்பிலானஅரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

A. Syed Ibrahim

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y