அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, March 31, 2011

ஏப்ரல் ஃபுல் ஏமாறவேண்டாம்


ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் முட்டாளாக்கி மகிழ்கின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

2011 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உத்தேச பட்டியல் வெளியிடு


டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

Monday, March 28, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம் பாகம் 1

உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்றமெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித் தவையே. இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக் கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும்அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும். நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது.. மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும்அவர்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும்ஏன் இறைவ னின் தூதர்களாகவே இருந்தாலும் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே. இறைவனது கரத்தினால் படைக்கப்பட்ட முதல் மனிதரும்,மிகச்சிறந்த அறிவாளியுமானமனித சமுதாயத்தின் ஆதிபிதா என்று அழைக்கப்படுகின்ற ஆதம் (அலை) அவர்கள் கூட தவறு செய்தவர்களே. அவர்களின் பிள்ளைக ளாக இருக்கின்ற நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் ஆச்சரியத் திற்கு ஒன்றுமில்லை.

ஆதமின் சந்ததிகள் அனைவர்களும் இரவிலும்பகலிலும் தவறு செய்யக்கூடியவர்களே என இறைவன் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூதர் (ரலி)நூல் : அஹ்மத் (20451)

மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுமனந்திருந்தி வாழ வேண்டும். 

Sunday, March 27, 2011

சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.

Saturday, March 26, 2011

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரவு திமுகவிற்கு சென்னையில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானம்


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க
உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

Friday, March 25, 2011

இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ?


இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)நூல் :  அஸ்ஸனனுல் குப்ராபாகம் : 3, பக்கம் : 272  புகாரி (5590)

விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாலும் இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்அறிவிப்பவர் : ஆயிஷா  (ரலி)நூல்: முஸ்லிம் (1619)

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.
சைத்தானின் இசைக் கருவிகளாஎன்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும்,மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: அஹ்மத் 2494

ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தன் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள். அவர்கள் (என்னிடம் அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதேப் பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்) நூல் : அஹ்மத் (4307)

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நன்றி :ஆன்லைன் பிஜே 

Wednesday, March 23, 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பன்முக அமைபின் ரவுடி கும்பல்

ஜிஹாத் எனும் பெயரால் உணர்ச்சியூட்டி இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள்நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர். 

அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அடித்து உதைத்த பின்னர் இறந்துவிட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, March 20, 2011

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு!
மவ்லிது விழா புறக்கணிப்பு!
திருமண விழா புறக்கணிப்பு!
நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!
பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!
கத்னா விழா புறக்கணிப்பு!
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!
இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!
இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!

Friday, March 18, 2011

பன்முக அமைப்பினரின் மார்க்க விரோத செயல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர் கிளை சார்பாக 13.3.2011 அன்று நடைபெற இருக்கும் மார்க்க விளக்கக் கூட்ட வால்போஸ்டர்கள் வியாழன் அன்று கிளையில் ஒட்டப்பட்டது.
ABCD (SDPI,DPI,PFI, MNP etc..) அமைப்பான பலமுகங்களோடு மக்கள் மத்தியில் உலாவந்து கொண்டு இருக்கும் SDPI MNP  யினர் சனிக்கிழமை இரவு இந்த வால்போஸ்டரின் மீது  போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள்.
அழைப்புபணி செய்வதற்காக ஒட்டப்பட்ட  வால்போஸ்டர் மீது போஸ்டரை ஒட்டி அராஜகம் செய்துள்ளனர் இவர்களெல்லாம் எமஎல்ஏ ஆகினால் அது சமுதாயத்திற்கு கேடுதான்.
சிந்தியுங்கள் சகோதரர்களே நமக்கு முதல் குறிக்கோள் மறுமையாகதான் இருக்கவேண்டும் பிறகுதான் இம்மை கொடிக்கு சல்யுட் அடிக்கும் இந்த மார்க்க விரோதிகள் சமுதாய காவலர்களாம் அல்லாஹ்வே இத்கையோர்களிடமிருந்து சமுதாயத்தை  காப்பாற்றவேண்டும் . 

Thursday, March 17, 2011

ஹஜ் செல்ல விண்ணப்படிவம் விநியோகம் – 3 ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பித்தவர்கள் இந்த ஆண்டு குலுக்கல் இன்றி தேர்வு!

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல்  வழங்கப்படுகின்றது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம்
அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Monday, March 14, 2011

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியுமா ?

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தவே வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இவர்கள் ஜனநாயக முறையை முழுக்க முழுக்க எதிர்க்கின்றனர். இந்தக் கொள்கையைப் பற்றிய முழு விளக்கத்தையும், இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே வந்தார்கள் என்று கூறுவது, இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.


இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.

Wednesday, March 09, 2011

காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது ?


நான் ஒரு அரபியிடம் போன் கடையில் வேலை செய்து வந்தேன். அவன் ஹராமி என்று அடிக்கடி திட்டுவான். ஒரு நாள் என் முகத்தில் செருப்பால் அடித்தான். ஒரு போனில் சின்ன கிராச் ஏற்பட்டதற்காக ஒரு மாத சம்பளத்தை பிடித்துக் கொண்டான். திடீர் என்று கேன்ஸல் அடித்து விரட்டி விட்டான். நான் எனது நாடாகிய இலங்கை போகாமல் வேறு இடத்தில் பதுங்கி வேலை பார்த்து வருகிறேன். இப்படி சம்பாதிக்கும் வருமானம் ஹராமா? ஹலாலா?
காஸா
பதில்
இவரது கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இவரது கேள்வியில் உள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு அறிவுறுத்தும் கடமை நமக்கு இருக்கிறது கேள்வியில் அடங்கியுள்ள பல விஷயங்களை சமுதாயத்துக்கு நாம் சுட்டிக்காட்டும் அவசியம் உள்ளது.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y