அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, August 31, 2012

நரோடா பாட்டியா கொலைகள்-குஜராத் பெண் எம்எல்ஏவுக்கு 28 ஆண்டு சிறை, விஎச்பி தலைவருக்கு ஆயுள்

அகமதாபாத்: நரோடியா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஹெச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில் தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. நரோடா பாட்டியா வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வந்த வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Thursday, August 23, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் சேவை மையங்கள் !


Sunday, August 19, 2012

2012 ஜித்தா மண்டலம் சார்பாக திரட்டிய ஃபித்ரா ,சதக்கா மற்றும் ஜகாத் விபரம்!


குறிப்பு : இதேபோன்று மற்ற இயக்கத்தினரும் தாங்கள் திரட்டிய தொகையை வெளியிட வேண்டும் அவர்களிடம் பித்ரா வழங்கியவர்கள் அவர்களை வற்ப்புறுத்த வேண்டும்.

தர்காக்களில் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! 'டிவிடி வெளியிடு"


Saturday, August 18, 2012

போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்! – மியான்மர் புகைப்படங்களின் பின்னால் உள்ள புனைவுகள்!

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல் குர்ஆன் 49 : 6)

மியான்மரில் வாழும் ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் புத்த பிட்சுகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

Thursday, August 16, 2012

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்!


ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். 

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்: முஸ்லிம் 1984

ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

Tuesday, August 14, 2012

நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமிய போராளிகள்(?)‎

முஸ்லிம்களின் நலன் காக்கும் கட்சி என்று தங்களைச் சொல்லிக் கொண்டு ‎இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிப்பதை ஒன்றை மட்டுமே ‎அஜெண்டாவாக வைத்து செயல்படும் ம.ம.கட்சியினரின் அட்டூழியம் வர வர ‎எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.‎

இஸ்லாமியர்களை கருவறுக்கத்துடிக்கும் பிஜேபி இல.கணேசனுடன் ‎கைகோர்த்து போஸ் கொடுத்ததாகட்டும், கொலைக்கு கொலைதான் தீர்வு ‎என்ற அல்லாஹ்வின் சட்டத்தை அழிக்கத்துடித்து தீர்மானம் ‎நிறைவேற்றியதாகட்டும். இப்படி இவர்களது போக்கு அதளபாதாளத்தை ‎நோக்கியும், நரகப்படுகுழி நோக்கியும் சென்று கொண்டிருக்கும் ‎இதேவேளையில், நபி வழி அடிப்படையில் ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் ‎செய்யவிடாமல் இவர்கள் தடுத்து, அங்கு கலவரம் செய்து நபி வழி ‎அடிப்படையில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்த டிஎன்டிஜேவினர் மீது ‎கொலைவெறித் தாக்குதல் நடத்தி தாங்கள் எத்தகைய கொலைவெறியர்கள்; ‎இஸ்லாமிய எதிரிகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.‎‎ 

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் இவர்களது இந்த ‎கொலைவெறிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.‎

Tuesday, August 07, 2012

புனே குண்டுவெடிப்பு: சிக்கிய தயானந்த பட்டீலுக்கு இந்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு


புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.

Sunday, August 05, 2012

அஸ்ஸாம் கலவரம் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள்!‎ கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசு!!‎

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான ‎தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் ‎பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என ‎திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக் கின்றனர், ‎தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். ‎இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் ‎மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். போடோ ‎தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது ‎மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ‎ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் ‎லட்சக்கணக்கான முஸ்லிம்களின் நிலைமை மிகவும் ‎மோசமாகிவிடும்
கலவரத்தின் பின்னணி :‎
போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் ‎முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் ‎பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ ‎தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த ‎போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து ‎கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ ‎தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். ‎இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.‎

போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா ‎மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ ‎போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் ‎மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.‎

Saturday, August 04, 2012

விளையாட்டு அரங்கமா ? ஆபாசக் கூடாரமா ?


உலக(ஆபாச)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றதுஇதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும்தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளதுமேற்கத்திய ()நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்


Friday, August 03, 2012

பிஃத்ரா என்பது பெருநாள் தர்மமா அல்லது வளர்ச்சி நிதியா?

முஸ்லிமான அடிமை சுதந்திரமானவர்,ஆண் பெண் பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமைஅல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள் பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும் ஆனால் இன்னமும் சில சகோதர சகோதரிகள் இந்த பெருநாள் தர்மம் குறித்து விழிப்புணர்வு அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது விழிப்புணர்வு இருந்தும் அதை வழங்கிட மனமின்றி உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அணைத்து இயக்கங்களும் வருடா வருடம் பித்ராவை வசூல் செய்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தும் பித்ராவை திரட்டுகிறது அப்படி திரட்டிய தொகையை சரியாக ஏழைகளுக்கு விநியோகம் செய்கின்றதா என்பதை எப்படி மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

Thursday, August 02, 2012

யான்புவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளையில் 01.08.2012 புதன் அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது அல்ஹம்துலில்லாஹ் இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.செய்து பைஜி அவர்கள் உரையாற்றினார்கள்





தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y