அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, August 03, 2012

பிஃத்ரா என்பது பெருநாள் தர்மமா அல்லது வளர்ச்சி நிதியா?

முஸ்லிமான அடிமை சுதந்திரமானவர்,ஆண் பெண் பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமைஅல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள் பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும் ஆனால் இன்னமும் சில சகோதர சகோதரிகள் இந்த பெருநாள் தர்மம் குறித்து விழிப்புணர்வு அற்றவர்களாகவே உள்ளனர் அல்லது விழிப்புணர்வு இருந்தும் அதை வழங்கிட மனமின்றி உள்ளனர்.

தமிழகத்திலுள்ள அணைத்து இயக்கங்களும் வருடா வருடம் பித்ராவை வசூல் செய்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தும் பித்ராவை திரட்டுகிறது அப்படி திரட்டிய தொகையை சரியாக ஏழைகளுக்கு விநியோகம் செய்கின்றதா என்பதை எப்படி மக்கள் அறிந்துகொள்ள முடியும்.



தவ்ஹீத் ஜமாஅத் வருடா வருடம் திரட்டும் பித்ராவை முழுமையாக விநியோகம் செய்து விநியோகம் செய்த அதை தங்கள் நடத்தும் பத்திரிக்கையான உணர்விலும் தங்களின் இணையதளத்திலும் முழுக்கணக்கையும் பட்டியலுடன் வெளியிடுகிறது அதேபோல ஃபித்ராவாக நிர்ணயித்த அந்த தொகையில் ஒரு ரூபாய் குறைந்தாலும் அதை வாங்க மறுத்து விடுகின்றனர் காரணம் அல்லாஹ்வின் தூதர் விதியாக்கிய அந்த இரேண்டரைகிலோ அரிசிக்கு இணையான பொருளை மக்களிடம் பெறுவதில் மிகவும் கவனமாக இருக்கின்றது சென்ற வருடம் மட்டும் கிட்டத்தட்ட தவ்ஹீத் ஜமாஅத்தால் சுமார்  57 லட்சம் வெளிநாடுகளில் மட்டும் பித்ராவை வசூல் செய்து தாயகத்தில் அதை சரியான ஏழைகளை கண்டரித்து அவற்றை விநியோகம் செய்தனர்.

அதேபோன்று இன்ன  பிற முஸ்லிம் இயக்கங்களும் பித்ராவை வசூல் செய்கின்றது ஆனால் அவர்களெல்லாம அதை சரியாக விநியோகம் செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியே காரணம் தவ்ஹீத் ஜாமத்தை தவிர வேறு எந்த எந்த ஒரு இயக்கமும் தங்கள் திரட்டிய விநியோகித்த விபரங்களை வெளியிடுவதில்லை அப்படி அவர்களை செய்யச் சொல்லி எந்த ஒரு மனிதனும் அவர்களிடம் வலியுறுத்துவதில்லை.

காரணம் தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ராவை திரட்டுவதற்கும் மற்ற அமைப்புகள் திரட்டுவதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன நாம் நிர்ணயித்த தொகையிலிருந்து ஒரு ரியால் கூட குறைவாக பெறமாட்டோம் அல்லாஹ்வின் தூதர் இட்ட கட்டளையை எள்ளளவும் மீரமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் அதேபோன்று அவர்களின் பொறுப்பின் கீழிருக்கும் எத்தனை பேரோ அதனை பேருக்கும் பட்டியில் போட்டு பிதார்வை திரட்டுகின்றோம் ஏனென்றால் ஒருவர் கூட இந்த இறைக்கட்டளையை மீரியர்களாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் ஒரு குறிக்கோள் ஆனால் மற்ற இயக்கத்தினரோ வெளிநாட்டிலாகட்டும் அல்லது தாயதிலாகட்டும் தலையை சொரிந்து கொண்டு குடுக்கின்றதை குடுங்கள் என்று அவர்களிடம் பித்ராவை திரட்டுகின்றனர் 

யாரை ஏமாற்றுகின்றார்கள் தங்களையா அல்லது அப்பாவி முஸ்லிம் மக்களையா அல்லது அல்லாஹ்வையா ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் இட்ட கட்டளையை புறந்தள்ளிவிட்டு மார்க்கத்துடன் விளையாடும் இவர்கள் என்ன கொள்கையில் இருக்கின்றார்கள் ஒரு குடும்பத்தில் ஒருவரிடம் அல்லது இருவர்களிடம் மட்டும் பித்ராவை பெற்றுவிட்டு அவர்களின் மற்ற குடும்ப உறப்பினர்களின் இபாததுகளுடன் விளையாடும் இவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் என்ன நிலை என்பதை எண்ணி இவர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதோபோல முஸ்லிம்களும் தங்களுக்கு  இந்த அமைப்புகளின் செயல் சாதகமாக இருந்தாலும் இது மரர்க்கத்தில் எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் அது மறுமையில் எவ்வளவு பெரிய கைசேதத்தை ஏற்ப்படுத்தும் என்பதயும் எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மீறும் எந்த ஒரு மனிதனுக்கும் கேடுதான் என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் ஐந்துபேர் இருக்கும் வீட்டில் குடும்பத்தலைவர்ளுக்கு மட்டும் பித்ரா வழங்கிவிட்டால போதும் என்று மற்றவர்களுக்கு பித்ரா கொடுக்க தேவையில்லை என்று எண்ணிவிடக்கூடாது.


முன்பு ஆலிம்களிடம் கைமமடக்கு கொடுத்தல் பெருநாள் தர்மம் முடிந்துவிடும் என்ற எண்ணம் வேறொரு வடிவில் கொடுப்பதை கொடுங்கள் போதும் என்ற எண்ணம் இப்போது சில கூறுகெட்ட இயக்கங்களின் தவறான வழிகாட்டுதல்களால் வந்துள்ளது  அதையும் இவர்கள் மாற்ற வேண்டும் அதேபோல இந்த தர்மம் இயக்கங்களின் வளர்ச்சி நிதியில்லை இது ஏழைகளுக்கு செலவிடப்படவேண்டியவை என்பதையும் மக்கள் மனதில் கொள்ளவேண்டும் இதை உணர்ந்து தாங்களாகவே சம்பந்தப்பட்ட இயக்கத்தின் பித்ரா வசூல் பொருப்பாளர்களை தேடிச் சென்று தங்களின் பித்ராவை வழங்க வேண்டும். 

பொதுவாக மனிதனின் தான்  எதையும் செய்ய தயாராவான் இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்விடம் பார்வையில் மிகப்பெரிய அந்தஸ்தாக கருதப்படுவது ஜிஹாத் என்னும் உயிர் தியாகி என்ற தரஜா அப்படி அல்லாஹ்வுக்காக உயிரையும் கொடுக்க துணிந்து விடுகின்றான் ஆனால் பொருளாதாரம் என்று வந்துவிட்டால் புறமுதிகிட்டு ஓடும் எண்ணத்தில்தான் இருக்கின்றான் அப்படிப்பட்ட இவர்களுக்கு உண்மையான மார்க்கத்தை எடுத்துச்சொல்லி அவர்களை மார்க்கத்தின் பால் அழைக்க கடைமைப்பட்டுள்ள அமைப்புகள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் அவர்களின் மறுமை வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர்.

அப்பாவி முஸ்லிம்களின் மறுமை வாழ்க்கையில் விளையாடும் அப்படிப்பட்ட அமைப்புளின் தவறான வழிகாட்டுதளிலிருந்து விடுபட்டு எந்த அமைப்பு பித்ராவை சரியாக திரட்டுகிறார்கள் அதை சரியான முறையில் விநியோகம் செய்கிறார்கள் அவ்வாறு திரட்டிய  தொகையை முழுகணக்குடன் மக்கள் முன் சமர்ப்பிகிரார்கள் என்பதை கண்டறிந்து அவர்களிடம் தங்களின் பித்ராவை வழங்கி அல்லாஹ்வின் தூதர் இட்ட கட்டளையை முழுமையாக செயல்படுத்திய நன் மக்களாக மாற எல்லாம் வல்லரஹ்மான் நமது அறிவை விசாலமாக்குவானாக!

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும்ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள் அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817 



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y