அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, March 30, 2012

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.

இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.

Wednesday, March 28, 2012

ஹாஜிகள் சந்தித்த அவலங்கள்(ஜித்தா மண்டல சமுதாய சேவை)





ஹஜ், உம்ரா செய்வது புனித பயணம் என்றும், அமல்கள் செய்யவும் என்ற நிலை இருந்தபோது, செய்பவர்களும், குறைவாக இருந்தனர். அழைத்து வரும் ஏஜெண்ட்களும் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று இஹ்லாஸோடு வருபவர்கள் குறைந்து பலர் ஹஜ், உம்ரா செய்வதை ஒரு சமூக அங்கீகாரமாகாவும், பகட்டை வெளிபடுத்தும் ஒரு காரியமாக சமுதாயத்தில் ஆக்கி ஹஜ், உம்ரா செய்பவர்கள் அதிகமாகும் பொழுது அதனை வைத்து பணம் பண்ணும் ஏஜெண்ட்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் அதிக தொகையினை ஹாஜிகளிடம் பெற்று, குறைந்த தொகையினை அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்களிடம் கொடுத்து பல மடங்கு லாபத்தை ஈட்டி கொழிக்கும் போலி ஏஜெண்ட்கள்தான் அதிகமாக உள்ளனர். இப்படி ஒரு டிராவல்ஸிடம் மாட்டி அவதிப்பட்ட அப்பாவி பெண்களின் விபரம்தான் இது.
கடந்த 20-03-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டல தலைவர் சகோ. ஃபைசல் ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத்திற்க்கு போன் செய்து மக்காவில் சில பெண்கள் மஹ்ரம் பிரச்சிணையால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும் அது பற்றி ரியாத்திலுள்ள ஒரு சகோதரருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது பற்றி விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் சில தொடர்பு விபரங்களையும் கொடுத்தார். உடன் நௌஷாத் மக்கா கிளை நிர்வாகிகளான சகோ.அப்துற் ரஹ்மான் மற்றும் அபுதாஹிர் இவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்து தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். உடன் செயல்பட்ட அவர்கள் கூரிய விபரங்களும், நடந்த சம்பவங்களும் வருமாறு-

Monday, March 26, 2012

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்


பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

Thursday, March 22, 2012

வாழ்நாளை அதிகமாக்கும் நோன்பு

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.  


National Institute on Ageing  என்ற நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் "வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (alzheimer ' s  disease  ), பார்கின்சன் நோய் (parkinson disease ), மற்றும் மூளை தேய்மான நோய்களான degenerative  disease  களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு பெறலாம். கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers  தூண்டப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்கள் ..

Sunday, March 18, 2012

பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்:

சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்  தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது? தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி  எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட  மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.

Friday, March 16, 2012

யான்பு கிளையின் சார்பாக தலைமைக்கு இடம் வாங்க ரூபாய் 30,000 முப்பது ஆயிரம் வழங்கப்பட்டது !

யான்பு கிளையின் சார்பாக தலைமைக்கு இடம் வாங்க ஜித்தா தலைமை கேட்டுக்கொண்ட ரூபாய் 30,000 முப்பது ஆயிரம் அனுப்பிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!வாரிவழங்கிய உறுப்பினர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான் இன்ஷா அல்லாஹ்.






http://www.tntj.net/78304.html

Monday, March 12, 2012

புற்றுநோயை குணப்படுத்தும் ரமலான் நோன்பு விஞ்ஞானிகள் வியப்பு!

ரமலான் முழுவதும் முஸ்லிம்கள் உண்ணாமலும் பருகாமலும் நோன்பு இருக்கிரார்கள இந்த நோன்புக்கான கூலி அல்லாஹ்விடம் கிடைக்கும் இந்த நம்பிக்கையில் தான் அவர்கள் நோன்பு இருக்கிறார்கள்.

இருந்தாலும் உடல் ரீதியில் உலகத்திலும் அதற்க்கான பலன் இருக்கத்தானே செய்யும் சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பை நோற்கும் போது அவர்களுக்கு சர்க்கரையின் அளவு கூடாது மாறாக மாத்திரை மருந்து எடுக்காமலே சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் இதை நிறையப்பேர் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள் ரமலான் நோன்பு புற்று நோயை குணப்படுத்தும் என்று சொன்னால் அது நம்பும்படியாகவா இருக்கிறது நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என்று அடித்து சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y